அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு ஜூன்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? வீட்டு பைபிள் படிப்பைத் துவங்குவதில் கவனம் செலுத்துங்கள். ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேட்டில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, நீங்கள் திரித்துவத்தை நம்ப வேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது?, வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சமயங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) ஆகிய சிற்றேடுகளை அளிக்கலாம். செப்டம்பர்: உயிர்—அது எப்படி இங்கு வந்தது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (ஆங்கிலம்)
◼ ஓர் உள்ளூர் மொழியில் கைப்பிரதிகளுக்காக விண்ணப்பிக்கும்போது, கைப்பிரதி விண்ணப்ப நமூனாவிலுள்ள (S(d)-16) அதற்குரிய கட்டத்தில் சபையின் பெயர், கூட்டம் நடக்கும் இடத்தின் முழு விலாசம் போன்றவற்றை, பெற விரும்பும் மொழியில் தெளிவாக எழுதி அனுப்பவும். நமூனாவை பூர்த்தி செய்வதற்கு முன் நினைவில் வைக்க வேண்டிய குறிப்புகளை கவனமாக வாசிக்கவும்.
◼ 1999 காவற்கோபுரம், விழித்தெழு! பவுண்டு வால்யூம்களுக்கான ஆர்டர்களை சபைகள் தங்கள் ஜூன் மாத பிரசுர விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்பலாம். இந்த பவுண்டு வால்யூம்கள் கிடைக்கப் பெற்று, அனுப்பப்படும் வரைக்கும் சபையின் பேக்கிங் லிஸ்ட்டில் “பென்டிங்” என்பதாகவே குறிக்கப்பட்டிருக்கும். பவுண்டு வால்யூம்கள் விசேஷ ஆர்டருக்குரியவை.
n◼ இந்த மாத நம் ராஜ்ய ஊழியம் இதழிலிலும், ஜூன் 1, 2000-ம் காவற்கோபுரத்திலும், குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் காணப்படும் பாடல் எண்கள், அந்தந்த மொழியிலுள்ள பாடல் புத்தகத்திலுள்ள எண்கள் ஆகும். அதையடுத்து அடைப்புக்குறிகளில் காணப்படும் பாடல் எண்கள், ஆங்கில பாடல் புத்தகத்திலுள்ள அதே பாடல்களின் எண்கள் ஆகும்.
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருட்கள்—தமிழ், மலையாளம்