நினைவு ஆசரிப்பு நினைப்பூட்டுதல்கள்
இந்த வருட நினைவு ஆசரிப்பு ஏப்ரல் 8, ஞாயிற்றுக்கிழமை அன்று ஆசரிக்கப்படவிருக்கிறது. பின்வரும் காரியங்களுக்கு மூப்பர்கள் கவனம் செலுத்த வேண்டும்:
◼ கூட்டத்திற்கான நேரத்தை நிர்ணயிக்கையில், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகே சின்னங்கள் சுற்றி அனுப்பப்பட வேண்டும் என்பதை மனதில் வையுங்கள்.
◼ ஆசரிப்பு நடைபெறும் சரியான நேரத்தையும் இடத்தையும் பேச்சாளர் உட்பட எல்லாருக்கும் தெரிவிக்க வேண்டும்.
◼ தகுந்த அப்பத்தையும் திராட்ச ரசத்தையும் தயாராய் வைக்க வேண்டும்.—பிப்ரவரி 15, 1985, ஆங்கில காவற்கோபுரம் பக்கம் 19-ஐக் காண்க.
◼ பிளேட்டுகள், ஒயின் கப்புகள், பொருத்தமான டேபிள், டேபிள் கிளாத் ஆகியவற்றை முன்னதாகவே கொண்டுவந்து அவற்றிற்குரிய இடத்தில் வைக்க வேண்டும்.
◼ ராஜ்ய மன்றத்தை அல்லது கூட்டம் நடத்தும் இடத்தை முன்னதாகவே நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
◼ அட்டண்டன்ட்களையும் பரிமாறுபவர்களையும் தெரிவு செய்து, அவர்களுடைய பொறுப்புகளையும் அதைச் செய்ய வேண்டிய சரியான முறையையும் பற்றி அவர்களுக்கு ஆலோசனை கொடுக்க வேண்டும்.
◼ வியாதிப்பட்ட அல்லது ஆஜராக முடியாத அபிஷேகம் செய்யப்பட்ட நபர் யாராவது இருந்தால் அவருக்கும் சின்னங்களைப் பரிமாறுவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
◼ ஒரே ராஜ்ய மன்றத்தை ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் உபயோகிக்க திட்டமிட்டிருந்தால் சபைகளிடையே நல்ல ஒத்திசைவு அவசியம். அப்போதுதான் வராண்டாவிலோ, நுழைவாயிலிலோ, நடைபாதையிலோ, வாகனங்கள் நிறுத்துமிடங்களிலோ தேவையில்லாமல் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.