அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் இறக்கும்போது என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சமயங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) ஆகிய சிற்றேடுகளை அளிக்கலாம். செப்டம்பர்: இருபதாம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகள் சிற்றேடும் உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (ஆங்கிலம்) புத்தகமும். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். அக்கறை காட்டுகிறவர்களிடம் பத்திரிகை மார்க்கத்தை ஏற்படுத்துமாறு மறுசந்திப்புகளை செய்யுங்கள். பத்திரிகை மார்க்கம் நடைமுறையானதாக இல்லாதபட்சத்தில் மட்டுமே சந்தா அளிக்கலாம்.
◼ செப்டம்பர் மாதத்திலிருந்து வட்டாரக் கண்காணிகள், “கடவுளுடைய போதனையால் உண்மை கிறிஸ்தவர்கள் தங்களை எப்படி அலங்கரிக்கின்றனர்” என்ற பொதுப் பேச்சை கொடுப்பார்கள்.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு —மிசோ
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்—ஹிந்தி
தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்!—பஞ்சாபி
கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?—சிந்தி