சாட்சி கொடுத்தல்—பூமியின் கடைக்கோடிகளுக்கு
பூமியின் கடைக்கோடிகளுக்கு என்ற ஆங்கில வீடியோவை திரும்பத் திரும்ப யார் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கலாம்? மிஷனரி ஆக வேண்டும் என்ற இலக்கு வைத்திருப்பவர்களே. ஏன்? உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியைப் பற்றி தெரிந்துகொள்வதற்குத்தான். தனிச்சிறப்புமிக்க இந்தப் பள்ளியின் 50-வது ஆண்டு நிறைவு விழாவை இந்த வீடியோ சிறப்பித்துக் காட்டியது; ‘பூமியின் கடைக்கோடிகளுக்கெல்லாம்’ சென்று சாட்சி கொடுப்பதை விரிவாக்குவதற்காகவே இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. (சங். 22:27, NW) இதை பார்க்கையில், நற்செய்தியைப் பிரசங்கிக்கும் மிக முக்கியமான வேலையிடம் உங்கள் மதித்துணர்வு பெருகும், உங்கள் ஊழியத்தை இன்னும் விரிவாக்க தூண்டும். இவற்றை கவனியுங்கள்: (1) 1940-களின் ஆரம்பத்தில், யெகோவாவின் அமைப்பு என்ன முக்கியமான வேலைக்கு கவனம் செலுத்த வேண்டியிருந்தது? (அப். 1:8) (2) 1942-ல், பைபிளிலுள்ள எந்த தீர்க்கதரிசனம் ஆச்சரியமளிக்கும் விதத்தில் நிறைவேறிக்கொண்டிருந்தது, பொதுவாக நம் முக்கிய கவனம், உலகத்தினுடையதிலிருந்து எவ்வாறு வேறுபட்டதாய் இருந்தது? (வெளி. 17:8; w-TL89 5/1 பக். 14 பாரா 12) (3) இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எதிர்பார்த்திருந்த அமைதி நிலவிய காலப்பகுதியை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள என்ன திட்டங்கள் வகுக்கப்பட்டன? (jv பக். 522 பாரா. 1, 2) (4) கிலியட் பள்ளியின் முதல் வகுப்புக்குச் சென்ற மாணவர்களின் என்னென்ன பண்புகள் உங்களைக் கவர்ந்தன? (5) கிலியட் பள்ளியின் முதல் 50 வருடங்களில், எத்தனை மாணவர்கள் பட்டம் பெற்றிருந்தனர், எத்தனை நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்? (6) சொல்லப்போனால், மாணவர்கள் பைபிளிலிருந்து எந்தளவு கல்வியறிவு பெறுகின்றனர்? (7) எது ஒருவரை திறம்பட்ட மிஷனரியாகவும் கடவுளுடைய வார்த்தையை திறமையாக போதிப்பவராகவும் ஆக்குகிறது? (8) ஒரு மிஷனரியின் வாழ்க்கை எப்படிப்பட்டது, என்னென்ன சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளது? (9) மிஷனரிகள் தங்கள் வாழ்க்கை முறையைப் பற்றி எவ்வாறு உணருகின்றனர், அவர்களுடைய சுயதியாக வாழ்க்கையின் பலனாக, விசேஷித்த வகையில் எவ்வாறெல்லாம் மகிழ்ச்சி கிடைக்கிறது? (10) இதுவரை ஆயிரக்கணக்கான மிஷனரிகள் என்ன சாதித்துள்ளனர்? உதாரணம் கொடுங்கள். (11) பிரசங்கிக்க ‘பூமியின் கடைக்கோடிகளுக்கு’ சென்றிருக்கும் சகோதர சகோதரிகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (12) மிஷனரிகளின் உதாரணம் உங்களை என்ன செய்ய உற்சாகப்படுத்துகிறது, ஏன்?