அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சமயங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) ஆகிய சிற்றேடுகளை அளிக்கலாம். செப்டம்பர்: உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? இதற்கு பதிலாக எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் அல்லது இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்தை உபயோகிக்கலாம். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். ஆர்வம் காட்டுவோருக்கு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளித்து பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷித்த முயற்சி எடுங்கள். நவம்பர்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? அல்லது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. இவை ஏற்கெனவே இருந்தால், ஏதாவதொரு பழைய பிரசுரத்தை அளிக்கலாம்.
◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் செப்டம்பர் 1 அல்லது அதற்குப் பிறகு கூடுமானவரை சீக்கிரத்திலேயே சபையின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை முடிந்ததும் அடுத்த முறை சபையில் கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்ட பிறகு, இதையும் சபையாருக்கு அறிவித்துவிடுங்கள்.
◼ முடிந்தவரை ஆகஸ்ட் 31, 2002 தேதிக்குள் கையிருப்பிலுள்ள எல்லா புத்தகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் வருடாந்தர இன்வென்ட்ரி எடுக்க வேண்டும். பிரசுர ஒருங்கிணைப்பாளர் ஒவ்வொரு மாதமும் எண்ணிக்கையை சரிபார்ப்பதைப் போலவேதான் இந்த இன்வென்ட்ரியும் உள்ளது. மொத்த எண்ணிக்கையை லிட்ரேச்சர் இன்வென்ட்ரி ஃபார்மில் (S-18-TL) எழுத வேண்டும். கையிருப்பிலுள்ள மொத்த பத்திரிகைகளின் எண்ணிக்கையை பிரசுர தொகுதியிலுள்ள ஒவ்வொரு சபையிலுமுள்ள பத்திரிகை ஊழியரிடமிருந்து தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு ஒருங்கிணைக்கும் சபைக்கும் மூன்று லிட்ரேச்சர் இன்வென்ட்ரி ஃபார்ம்கள் (S-18-TL) அனுப்பி வைக்கப்படும். தயவுசெய்து செப்டம்பர் 6-ம் தேதிக்குள் ஒரிஜினலை சொஸைட்டிக்கு அனுப்பவும். கார்பன் நகல் ஒன்றை உங்களுடைய ஃபைல்களில் வைத்துக்கொள்ளவும். மூன்றாவது நகலை ‘ரஃப்’ ஷீட்டாக பயன்படுத்தலாம். ஒருங்கிணைப்பு சபையின் செயலர் இன்வென்ட்ரி எடுப்பதை மேற்பார்வை செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பு சபையின் செயலரும் நடத்தும் கண்காணியும் ஃபார்மில் கையெழுத்திடுவார்கள்.
◼ யெகோவாவுக்கு நாம் செலுத்தும் வணக்கம் சம்பந்தமாக சபைகளும் தனிப்பட்ட பிரஸ்தாபிகளும் அவ்வப்போது சட்டப்பூர்வ பிரச்சினைகளை எதிர்ப்படுகின்றனர். இதுபோன்ற விஷயங்களில் உதவுவதற்காக நற்செய்தியை ஆதரித்து சட்டப்பூர்வமாக நிலைநாட்டுதல் என்ற ஆங்கில சிறுபுத்தகம் 1950-ல் பிரசுரிக்கப்பட்டது. இந்த சிறுபுத்தகம் கடந்த காலத்தில் பயனுள்ளதாக இருந்தாலும், அதிலுள்ள சட்டப்பூர்வ தகவல் இப்போது பொருந்தாது. ஆகவே, சட்டப்பூர்வ விஷயங்களை கையாள தனிப்பட்ட பிரஸ்தாபிகளும் மூப்பர் குழுக்களும் இந்த சிறுபுத்தகத்திலுள்ள தகவலின் அடிப்படையில் செயல்பட முயற்சி செய்யக்கூடாது.
◼ கடிதங்களிலும் தபால் அட்டைகளிலும் போதுமான ஸ்டாம்ப்களை ஒட்டி அனுப்பாததால் ஒவ்வொரு மாதமும் கிளை அலுவலகம் தபாலுக்கென்றே பெருமளவு தொகையை அபராதமாக செலுத்தி வருகிறது. கிளை அலுவலகத்திற்கு தபால் அனுப்பும்போது தயவுசெய்து சரியான தபால் கட்டணங்களுடன் அனுப்பும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.