தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
பிப்ரவரி 24, 2003-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது ஜனவரி 6 முதல் பிப்ரவரி 24, 2003 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லையென்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. சரியா தவறா: தாளில் உள்ளதை சற்று வித்தியாசமாக வாசித்தாலும், சரியாக தொனிக்கும்படி உறுதிப்படுத்திக் கொள்வதே திருத்தமான வாசிப்புக்கு வழி. விளக்குக. [be-TL பக். 83]
2. கோடிட்ட இடத்தை நிரப்பவும்: திருத்தமாக வாசிப்பதற்கு நீங்கள் _________________________, _________________________, _________________________ சத்தமாக வாசித்துப் பழகுங்கள். [be-TL பக். 85]
3. தெளிவாக பேசுவது ஏன் முக்கியம்? (1 கொ. 14:8, 9) [be-TL பக். 86]
4. என்ன சில காரணங்களால் பேச்சு தெளிவற்றதாக ஆகலாம், தெள்ளத் தெளிவாக பேசுவதற்கு நாம் என்ன செய்யலாம்? [be-TL பக். 87-8]
5. கடந்த இரண்டு மாதங்களில் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளில், சரியாக உச்சரித்துப் பழக நீங்கள் விரும்புகிற சில வார்த்தைகள் யாவை? [be-TL பக். 92]
பேச்சு நியமிப்பு எண் 1
6. சரியா தவறா: செவிசாய்த்து கேட்பதற்கு நம் கண்கள் உதவலாம். விளக்குக. [be-TL பக். 14]
7. கோடிட்ட இடத்தை நிரப்பவும்: _________________________, _________________________, _________________________ ஆகிய அனைத்தும் கடவுள் கொடுத்த காலங்காட்டும் கருவிகளாக செயல்படுகின்றன. [si-TL பக். 279 பாரா 7]
8. கோடிட்ட இடத்தை நிரப்பவும்: பைபிளில் “நாள்” என்ற சொல், 12 மணிநேர பகுதியை, ______________________ மணிநேரத்தை, _____________________ வருடங்களை அல்லது _________________________ என எந்தக் காலப் பகுதியைக் குறிக்கிறது என்பதை வசனத்தின் சூழமைவே சுட்டிக்காட்டுகிறது. [si-TL பக். 279 பாரா 8]
9. அன்னாள், மாற்கு, எலியா ஆகியோரின் உதாரணங்கள் சோர்வை சமாளிக்க நமக்கு எப்படி உதவலாம்? மற்றவர்களுக்கு உதவி செய்ய இவர்களுடைய உதாரணங்களை நாம் எப்படி பயன்படுத்தலாம்? [w-TL01 2/1 பக். 20-3]
10. பூர்வ போட்டி விளையாட்டுகளைப் பற்றிய அறிவு சில பைபிள் வசனங்களை தெளிவாக புரிந்துகொள்ள நமக்கு எப்படி உதவுகிறது? இந்தத் தகவல் நம் வாழ்க்கையை எப்படி பாதிக்க வேண்டும்? [w-TL01 1/1 பக். 28-31]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. சரியா தவறா: 1914-ல் கடவுளுடைய ராஜ்யம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டதால் “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என இனிமேலும் ஜெபிப்பது சரியல்ல. (மத். 6:10) [be-TL பக். 279; w-TL96 6/1 பக். 31]
12. சரியா தவறா: யெகோவா அக்கினியால் அழித்த சோதோம் கொமோரா பட்டணத்தார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதை மத்தேயு 11:24-லுள்ள இயேசுவின் வார்த்தைகள் அர்த்தப்படுத்துகின்றன. விளக்கவும்.
13. சரியானதைத் தேர்ந்தெடுங்கள்: மத்தேயு 24:45-47-ல் இயேசு குறிப்பிட்ட உண்மையும் விவேகமுமுள்ள அடிமை (அ) யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழு; (ஆ) எந்தவொரு சமயத்திலும் பூமியிலுள்ள அனைத்து அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் தொகுதி; (இ) இயேசு கிறிஸ்துவே. இந்த அடிமை “வேலைக்காரருக்கு” ஏற்ற வேளையில் ஆவிக்குரிய உணவைக் கொடுக்கிறது; அந்த ‘வேலைக்காரர்’ (அ) அபிஷேகம் செய்யப்பட்ட தனிப்பட்ட நபர்களை; (ஆ) வேறே ஆடுகளை; (இ) கிறிஸ்தவ பிரசுரங்களைப் படிக்கும் அனைத்து வாசகர்களையும் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். எஜமானர் தம் ஆஸ்திகள் அனைத்தின் மேலும் அந்த அடிமையை (அ) 1914-ல்; (ஆ) பொ.ச. 33-ல்; (இ) 1919-ல் விசாரணைக்காரனாக ஏற்படுத்தினார். [wtsbr 0/0 56-58; w-TL90 10/1 பக். 14-ஐயும் காண்க.]
14. சரியானதைத் தேர்ந்தெடுங்கள்: மத்தேயு 13:47-50-ல் இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்டுள்ள வலை அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபையையும் (அ) கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தையும்; (ஆ) வேறே ஆடுகளைச் சேர்ந்த அவர்களுடைய தோழர்களையும்; (இ) கிறிஸ்தவமண்டலத்தையும் உட்படுத்துகிறது.
15. மத்தேயு 5:24-லுள்ள இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைய நீங்கள் உடன் வணக்கத்தாரை புண்படுத்திவிட்டதாக கருதினால் என்ன செய்ய வேண்டும்? [g-TL96 2/8 பக். 26-7]