அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஏப்ரல்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் தனிப்பிரதிகள். ஆர்வமுள்ளவர்களை—சபை காரியங்களில் ஊக்கமான பங்கெடுக்காமல் வெறுமனே நினைவு ஆசரிப்புக்கு அல்லது மற்ற விசேஷ கூட்டங்களுக்கு வருபவர்களைக்கூட—மறுபடியும் போய் சந்திக்கையில், ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் என்ற புதிய புத்தகத்தை அளிப்பதற்கு கவனம் செலுத்துங்கள். சிலர் ஏற்கெனவே அறிவு புத்தகத்தையும் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் படித்திருந்தால், அவர்களிடம் இந்தப் புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு விசேஷ முயற்சி எடுங்கள். மே: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர். அதற்குப் பதிலாக, என்னுடைய பைபிள் கதை புத்தகம், பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? (ஆங்கிலம்), இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் ஆகியவற்றை அளிக்கலாம். இந்தப் புத்தகங்கள் எதுவுமே உங்கள் சபையில் இல்லாதபோது, இவை பக்கத்து சபைகளில் நிறைய இருக்கின்றனவா என்று தயவுசெய்து கேட்டுப் பாருங்கள்; இருந்தால் வாங்கி பயன்படுத்துங்கள். ஜூன்: அறிவு புத்தகத்தையோ அல்லது தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையோ அளியுங்கள். வீட்டுக்காரர்களிடம் இந்தப் பிரசுரங்கள் இருந்தால், சபையின் கையிருப்பிலிருக்கும் ஏதாவதொரு பொருத்தமான சிற்றேட்டை அளியுங்கள். ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில்.
◼ நடத்தும் கண்காணி, செயலர் ஆகியோரின் சரியான விலாசங்களும் தொலைபேசி எண்களும் கிளை அலுவலகத்திடம் இருப்பது அவசியம். இவற்றில் எப்போதாவது ஏதாவது மாற்றம் இருந்தால், நடத்தும் கண்காணி/செயலர் விலாச மாற்ற படிவத்தை (S-29) சபையின் ஊழியக்குழு பூர்த்தி செய்து, கையெழுத்திட்டு உடனடியாக கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தொலைபேசி STD கோட் நம்பரில் மாற்றம் இருந்தால் அதையும் இப்படிவத்தின் மூலம் தெரிவிக்க வேண்டும்.
◼ ஒழுங்கான பயனியர் சேவைக்கான விண்ணப்ப படிவத்தையும் (S-205) துணைப் பயனியர் சேவைக்கான விண்ணப்ப படிவத்தையும் (S-205b) சபை செயலர்கள் போதுமானளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். பிரசுர ரிக்வெஸ்ட் படிவத்தில் (S-14) இவற்றை ஆர்டர் செய்யலாம். குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு தேவையானவை கைவசம் இருக்க வேண்டும். ஒழுங்கான பயனியர் விண்ணப்ப படிவங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விண்ணப்பிப்பவர்களுக்கு தங்களுடைய முழுக்காட்டுதல் தேதி சரியாக நினைவில்லை என்றால் அவர்கள் உத்தேசமாக ஒரு தேதியை எழுதுவதோடு அதை குறித்து வைத்துக்கொள்ளவும் வேண்டும்.
◼ நீங்கள் சொந்தமாக வேறொரு நாட்டிற்கு செல்லுகையில், அங்கு நடைபெறும் சபை கூட்டங்களில், வட்டார மாநாட்டில், அல்லது மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள திட்டமிருந்தால் சம்பந்தப்பட்ட தேதிகளையும், நேரத்தையும், இடங்களையும் பற்றிய விவரங்களை அந்நாட்டின் கிளை அலுவலகத்திற்கு எழுதி பெற வேண்டும். கிளை அலுவலக விலாசங்களை சமீபத்திய இயர்புக்கின் கடைசி பக்கத்தில் காணலாம்.
◼ ஒவ்வொரு சபைக்கும் பிப்ரவரி மாத ஸ்டேட்மென்டுடன் வருடாந்தர ஐட்டங்களுக்கான விசேஷ ஆர்டர் படிவம் (Special Request Form for Annual Items) அனுப்பி வைக்கப்பட்டது. 2003-ம் வருடத்திற்கான மாவட்ட மாநாடு பேட்ஜ் கார்டுகளுக்கும் 2004-ம் வருடத்திற்கான வருடாந்தர ஐட்டங்களுக்கும் இது வரை ஆர்டர் செய்திராத சபைகள் தங்கள் ஆர்டர்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.
◼ இயர்லி காலண்டர் ஆஃப் லிட்டரச்சர் ஐட்டம்ஸ்படி, ஏப்ரல் மாதத்தில்தான் அடுத்த ஊழிய ஆண்டிற்கான படிவங்களை பிரசுர ரிக்வெஸ்ட் படிவத்தில் (S-14) ஆர்டர் செய்ய வேண்டும். ஆகவே, தயவுசெய்து பிரசுர ரிக்வெஸ்ட் படிவத்தில் பட்டியலிடப்பட்டுள்ள எல்லா படிவங்களிலும் ஒரு வருடத்திற்குத் தேவையானவற்றை ஏப்ரல் மாத பிரசுர ஆர்டரோடு சேர்த்து அனுப்புங்கள். தயவுசெய்து படிவங்களுக்கென்று தனியாக லெட்டரையோ பிரசுர ஆர்டரையோ அனுப்பாதீர்கள்; மாறாக, அதை உங்கள் பிரசுர ஆர்டரோடு சேர்த்து அனுப்புங்கள். உவாட்ச்டவர் லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் கைட்-ல் பாகம் 4, பக்கம் 1-ஐத் தயவுசெய்து காண்க.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
பேச்சுத் திறமையையும் போதிக்கும் திறமையையும் மேம்படுத்த வழி —அஸ்ஸாமீஸ், மிசோ
இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? (துண்டுப்பிரதி எண் 19) —மணிப்புரி
நிஜமாக உலகத்தை ஆளுவது யார்? (துண்டுப்பிரதி எண் 22) —மணிப்புரி