தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
அக்டோபர் 27, 2003-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 27, 2003 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. ‘சீரான உடை’ உடுத்துவதைப் பற்றி 1 தீமோத்தேயு 2:9-ல் (NW) கொடுக்கப்பட்ட புத்திமதி எதை அர்த்தப்படுத்துகிறது, இது மேடையில் அல்லது வெளி ஊழியத்தில் நம் பிரசங்கங்களை எப்படி பாதிக்கலாம்? [be-TL பக். 132 பாரா. 4-5]
2. நம்முடைய தனிப்பட்ட தோற்றத்தை, 1 யோவான் 2:15-17, எபேசியர் 2:2, ரோமர் 15:3-லுள்ள நியமங்கள் எப்படி பாதிக்க வேண்டும்? [be-TL பக். 133 பாரா. 2-4]
3. நிதானம் ஏன் முக்கியம், மேடையிலிருந்து பேசுகையிலோ ஊழியத்தில் கலந்துகொள்கையிலோ நாம் எப்படி நிதானத்தைப் பெறலாம்? [be-TL பக். 135 பெட்டி; பக். 136 பாரா. 5, பெட்டி]
4. “உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சி”யான இயேசு, ஊழியத்தில் பைபிளைப் பயன்படுத்துவதில் எந்த விதத்தில் முன்மாதிரி வைத்தார்? (வெளி. 3:14) [be-TL பக். 143 பாரா. 2-3]
5. பைபிளை பயன்படுத்துவதில் நாம் எப்படி அதிக திறம்பட்டவர்கள் ஆகலாம்? (தீத். 1:9) [be-TL பக். 144 பாரா 1, பெட்டி]
பேச்சு நியமிப்பு எண் 1
6. படிப்பு எதை உட்படுத்துகிறது, கடவுளுடைய வார்த்தையை தவறாமல் படிப்பதால் விளையும் சில நன்மைகள் யாவை? [be-TL பக். 27 பாரா 3; பக். 32 பாரா 4]
7. யாக்கோபு 1:5, 6-க்கு இசைய, முக்கிய தீர்மானம் செய்ய வேண்டிய நிலையை எதிர்ப்படுகையில் எது அவசியம்? [w-TL01 9/1 பக். 28 பாரா 4]
8. மையத் தேதிகள் என்றால் என்ன, அவை ஏன் அதிக மதிப்புமிக்கவை? [si-TL பக். 282 பாரா 27]
9. ‘புறங்கூறுகிறவர்’ எந்த விதத்தில் மதிகேடராய் இருக்கிறார்? (நீதி. 10:18) [w-TL01 9/15 பக். 25 பாரா 3]
10. புதிய உலகில், காலத்தைப் பற்றிய யெகோவாவின் நோக்கை மனிதர் எப்படி இன்னும் முழுமையாக மதித்துணருவார்கள்? [si-TL பக். 283 பாரா 32]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. சரியா தவறா: 1 கொரிந்தியர் 2:9-ல் யெகோவா தம்முடைய உண்மையுள்ள ஜனங்கள் சுதந்தரமாய் பெறுவதற்காக ஆயத்தம் செய்திருக்கும் காரியங்களைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார். விளக்கவும். [ip-2-TL பக். 366 பெட்டி]
12. ஒன்று கொரிந்தியர் 10:13-லுள்ள வார்த்தைகள் எந்த சோதனைகளைக் குறிக்கின்றன, யெகோவா எப்படி ‘தப்பிக்கொள்ளும்படியான போக்கை உண்டாக்குகிறார்’? [w-TL92 1/1 பக். 10-11 பாரா. 11-14]
13. தயாள குணத்தைக் காட்டுவதில் இயேசுவின் முன்மாதிரி கிறிஸ்தவர்களை என்ன செய்ய தூண்டுகிறது? (2 கொ. 8:9) [w-TL92 4/15 பக். 16 பாரா 10]
14. நியாயப்பிரமாணம் “கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய்” எப்படி இருந்தது? (கலா. 3:24) [w-TL02 6/1 பக். 15 பாரா 11]
15. வழிதவறிப் போகாமல் நம்மை காத்துக்கொள்ள வேண்டிய ‘உலக வழிபாடுகள்’ யாவை? (கொலோ. 2:8)