விசிடி-யில் வீடியோ நிகழ்ச்சிகள்
இரத்தமில்லா மாற்று சிகிச்சை முறைகள்—செய்திப்படங்கள் என்ற விசிடி தொடரில் மூன்று வீடியோ நிகழ்ச்சிகள் உள்ளன. இரத்தமில்லா மாற்று சிகிச்சை திட்டங்கள்—எளிமையானவை, பாதுகாப்பானவை, பயனுள்ளவை என்ற வீடியோ டாக்டர்களுக்காகவும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்காகவும் தயாரிக்கப்பட்டது. எனவே, மற்ற இரண்டு வீடியோக்களைவிட மருத்துவக் காட்சிகள் இதில் சற்று அதிகமாகவே உள்ளன. உடல்நல பராமரிப்புக்கான இரத்தமில்லா மாற்று சிகிச்சை முறைகள்—நோயாளியின் தேவைகளையும் உரிமைகளையும் மதித்தல் என்ற வீடியோ மருத்துவ செய்தியாளர்களுக்காகவும், உடல்நல பராமரிப்பாளர்களுக்காகவும், சமூக சேவகர்களுக்காகவும் நீதிபதிகளுக்காகவும் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டது. நோயாளிகளின் சட்டப்பூர்வ உரிமைகளை மனதிற்கொண்டு அவர்களுடைய மருத்துவ தேவைகளை எவ்வாறு கவனித்துக் கொள்ளலாம் என்று அது கலந்தாராய்கிறது. இரத்தமின்றி சிகிச்சை—மருத்துவம் இந்தச் சவாலை சந்திக்கிறது என்ற வீடியோ முக்கியமாக பொது ஜனங்களுக்கென்று தயாரிக்கப்பட்டது. இந்த வீடியோக்கள் தற்சமயம் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கின்றன. விசிடி பிளேயர்களை வைத்திருக்கும் குடும்பங்கள் தங்கள் ஆர்டர்களை அனுப்பலாம். உங்களுடைய டாக்டர், உங்களோடு பைபிள் படிக்கிறவர்கள், அவிசுவாசியான துணை, உறவினர்கள், ஆசிரியர்கள், சக வேலையாட்கள், பள்ளி சகாக்கள் போன்றவர்களுக்கு இந்த வீடியோக்களை நீங்கள் தாராளமாக காண்பிக்கலாம்.