உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/06 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2006
நம் ராஜ்ய ஊழியம்—2006
km 3/06 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் மார்ச்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தைச் சிறப்பித்துக் காட்டுங்கள். பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். இந்தப் புத்தகத்துடன் பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? துண்டுப்பிரதியையும் கொடுங்கள். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களையும், சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவு ஆசரிப்புக்கோ வேறு ஏதாவது தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கோ மட்டுமே வந்துபோகும் நபர்களையும் மீண்டும் சந்திக்கையில், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே நம் குறிக்கோளாய் இருக்க வேண்டும். ஜூன்: பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளியுங்கள். வீட்டுக்காரரின் மொழியில் இந்தப் பிரசுரம் இல்லாவிட்டால் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தையோ என்னுடைய பைபிள் கதைப் புத்தகத்தையோ அளியுங்கள்.

◼ ஏப்ரலில் ஐந்து சனி-ஞாயிறுகள் வருவதால், துணைப் பயனியர் சேவை செய்ய அது மிகச் சிறந்த மாதமாகும்.

◼ நினைவுநாள் ஆசரிப்பு 2006, ஏப்ரல் 12, புதன்கிழமை நடைபெறும். உங்கள் சபையில் பொதுவாக புதன்கிழமை கூட்டங்கள் நடைபெற்றால், ராஜ்ய மன்றம் கிடைப்பதைப் பொறுத்து வேறொரு நாளுக்கு அக்கூட்டங்களை மாற்றி வைக்கலாம். இது சாத்தியமில்லை என்றால், அந்த ஊழியக் கூட்ட நிகழ்ச்சிகளில் உங்கள் சபைக்கு பொருத்தமான நிகழ்ச்சிகளை மாத்திரம் வேறொரு ஊழியக் கூட்ட நிகழ்ச்சியோடு சேர்த்துக்கொள்ளலாம்.

◼ நினைவுநாள் ஆசரிப்பின் தேதி, நேரம், விலாசம் போன்றவை அழைப்பிதழில் சரியாக ரப்பர் ஸ்டாம்பு அடிக்கப்பட்டிருக்கிறதா அல்லது தெளிவாக எழுதப்பட்டிருக்கிறதா என்பதை மூப்பர்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும். எழுத்து மறுபக்கம் தெரியாதபடி இருக்க வேண்டும், மை பரவி கறையாகிவிடாமல் எழுத்து தெளிவாக இருக்க வேண்டும்.

◼ காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் புதிய இதழ்களை சபை பெற்றவுடன் தாமதிக்காமல் அவற்றை சபையாருக்குக் கொடுத்துவிட வேண்டும். ஊழியத்தில் கொடுப்பதற்கு முன்பு அந்த பத்திரிகைகளில் உள்ள விஷயங்களைத் தெரிந்துகொள்ள பிரஸ்தாபிகளுக்கு இது உதவியாக இருக்கும். நம் ராஜ்ய ஊழியத்தையும் பெற்றவுடன் தாமதிக்காமல் கொடுத்துவிட வேண்டும். இதை சபை புத்தகப் படிப்பு கண்காணிகள் மூலம் வினியோகிக்கலாம்.

◼ நோவா​—⁠கடவுளோடு சஞ்சரித்தார் என்ற வீடியோ, மே மாத ஊழியக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படும். தேவைப்பட்டால் சீக்கிரத்தில் சபை மூலம் இதை ஆர்டர் செய்ய வேண்டும்.

◼ தனிப்பட்ட பிரஸ்தாபிகள் கிளை அலுவலகத்திற்கு கேட்டெழுதும் பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்படாது. சபை மாதாந்தர பிரசுர ஆர்டரை கிளை அலுவலகத்திற்கு அனுப்புவதற்கு முன் ஒவ்வொரு மாதமும் அதை சபையாருக்கு அறிவிக்க நடத்தும் கண்காணி ஏற்பாடு செய்ய வேண்டும். பிரஸ்தாபிகள் தங்களுக்குத் தேவையான பிரசுரங்களைப் பிரசுர ஊழியரிடம் முன்னதாகவே ஆர்டர் செய்ய இந்த ஏற்பாடு உதவும். விசேஷ ஆர்டரின் பேரில் அனுப்பப்படும் ஐட்டங்கள் எவை என்பதைத் தயவுசெய்து அறிந்திருங்கள்.

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

மரித்தோரின் ஆவிகள்​—⁠உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? ​—⁠ஆங்கிலம்

◼ ஆங்கிலத்தில் மீண்டும் கிடைக்கும் ஆராய்ச்சி புத்தகங்கள்:

‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’

வேதாகமங்களின் பேரில் உட்பார்வை

பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு​—⁠ஒத்துவாக்கியங்களுடன் (Rbi8)

வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்

உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ் 1986-2000

இவை விசேஷ ஆர்டரின்பேரில் அனுப்பப்படும் பிரசுரங்கள் என்பதை தயவுசெய்து கவனியுங்கள், இவை தேவையென பிரஸ்தாபிகள் கேட்டால் மட்டுமே ஆர்டர் செய்ய வேண்டும். அந்தப் பிரஸ்தாபிகளுக்கு இவை உண்மையிலேயே தேவையா என்பதை ஊழியக் குழுவினர் அவர்களிடம் பேசித் தெரிந்துகொள்ள வேண்டும்; இது சம்பந்தமான குறிப்பை எழுதி, பிரசுர ஆர்டருடன் சேர்த்து அனுப்ப வேண்டும். இத்தகைய விளக்கங்கள் இல்லாமல் அனுப்பப்படும் ஆர்டர்களுக்கு பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்படாது.

◼ கிடைக்கும் புதிய ஆடியோ காம்பேக்ட் டிஸ்க்குகள்:

ஆவிக்குரிய ஆஸ்தியை மதித்தல் (cdoh) ​—⁠தமிழ்

நம்மை எச்சரிக்கும் உதாரணங்கள்(cdwx) ​—⁠தமிழ், மலையாளம், ஹிந்தி

கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? (cdrq) ​—⁠தமிழ்

◼ அமெரிக்கன் சைகை மொழியில் புதிதாக கிடைக்கும் டிவிடிகள்:

நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு (dvkl-ASL)

பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? (dvbh-ASL)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்