அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் மே: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களையும், சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவுநாள் ஆசரிப்புக்கோ வேறு ஏதாவது தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கோ மட்டுமே வந்துபோகிற நபர்களையும் மீண்டும் சந்திக்கையில், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே நம் குறிக்கோளாய் இருக்க வேண்டும். ஜூன்: பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளியுங்கள். வீட்டுக்காரரின் மொழியில் இந்தப் புத்தகம் இல்லாவிட்டால் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தையோ என்னுடைய பைபிள் கதைப் புத்தகத்தையோ அளியுங்கள். ஜூலை, ஆகஸ்ட்: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில், விழிப்புடன் இருங்கள்! ஆகிய 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம். சில இடங்களில் பின்வரும் சிற்றேடுகளை அளிப்பது பொருத்தமாய் இருக்கலாம்: எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), திருப்தியான வாழ்க்கைக்கு வழி.
◼ ஜூலை மாதத்தில் ஐந்து சனி-ஞாயிறுகள் இருப்பதால், துணைப் பயனியர் சேவை செய்ய அது மிகச் சிறந்த மாதம்.
◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் ஜூன் 1 அல்லது அதற்குப் பிறகு கூடுமானவரை சீக்கிரத்திலேயே சபையின் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். பராமரிப்பு, கட்டுமானம் போன்ற பணிகளுக்காகத் தனி அக்கௌண்ட் இருந்தால் அவற்றையும் தணிக்கை செய்ய வேண்டும். கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டபின், அடுத்த முறை சபையில் கணக்கு அறிக்கை வாசிக்கப்படும்போது அதை சபையாருக்கு அறிவிக்க வேண்டும்.
◼ எந்தத் தேதியிலிருந்து ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய விண்ணப்பதாரர்கள் தீர்மானிக்கிறார்களோ அந்தத் தேதியிலிருந்து 30 நாட்கள் முன்பாகவாவது கிளை அலுவலகத்திற்கு அவர்களுடைய விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். அவை முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதை சபை செயலர் உறுதிசெய்துகொள்ள வேண்டும். விண்ணப்பதாரருக்கு அவர் முழுக்காட்டுதல் எடுத்த தேதி சரியாக நினைவில்லாதிருந்தால் உத்தேசமாக ஒரு தேதியை எழுத வேண்டும், அதை அவர் குறித்தும் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தேதியை செயலர், சபை பிரஸ்தாபி அட்டையில் (S-21) குறித்து வைக்க வேண்டும்.