அறிவிப்புகள்
◼ மார்ச்: பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைச் சிறப்பித்துக் காட்டுங்கள். பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். அந்தப் புத்தகத்தோடு சேர்த்து பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியையும் அளியுங்கள். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களையும், சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவு ஆசரிப்புக்கோ வேறு ஏதாவது தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கோ மட்டுமே வந்துபோகும் நபர்களையும் மீண்டும் சந்திக்கையில், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே நம் குறிக்கோளாய் இருக்க வேண்டும். ஜூன்: படைப்பாளர் என்ற ஆங்கிலப் புத்தகத்தையோ குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தையோ அளியுங்கள்.
◼ காவற்கோபுரம், விழித்தெழு!-வின் புதிய பத்திரிகைகளைச் சபைகள் பெற்றவுடன் பிரஸ்தாபிகளுக்குக் கொடுத்துவிட வேண்டும். இப்படிச் செய்கையில் பத்திரிகைகளை வெளி ஊழியத்தில் கொடுக்கும் முன்னே அவற்றிலுள்ள விஷயங்களின்பேரில் பிரஸ்தாபிகள் பரிச்சயமாவதற்கு ஏதுவாயிருக்கும்.
◼ பிரஸ்தாபி யாரேனும் வெளிநாட்டுக்கு மாறிச்செல்லும்போது, சபை ஊழியக்குழு கிளை அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். பிரஸ்தாபி செல்லும் புதிய இடத்திற்குத் தொடர்புகொள்ள முழு விவரங்களையும், முடிந்தால் அவர் தொடர்புகொள்ளவிருக்கும் சபையின் பெயரையும் அவர்கள் அனுப்ப வேண்டும்; இந்தத் தகவலுடன் பிரஸ்தாபி அட்டையையும் (அட்டைகளையும்) ஓர் அறிமுகக் கடிதத்தையும் கிளை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்; அப்படிச் செய்வது அந்தப் பிராந்தியத்தைக் கவனித்துக்கொள்ளும் கிளை அலுவலகத்திற்கு அதை அனுப்பிவைக்க ஏதுவாயிருக்கும். பிரஸ்தாபி தொடர்புகொள்ளவிருக்கும் புதிய சபை கேட்டு எழுதும்வரை காத்திராமல், அவர் மாறிச் சென்றதும் எவ்வளவு சீக்கிரம் இந்தத் தகவல்களை அனுப்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்பி வைக்க வேண்டும். (நம் ராஜ்ய ஊழியம், TL மார்ச் 1991-ன் கேள்விப் பெட்டியை பார்க்கவும்) அறிமுகக் கடிதங்களின் பேரில் தகவலுக்கு ஜூலை 1, 2006 தேதியிட்ட அனைத்து மூப்பர் குழுக்களுக்கும் கிடைத்த கடிதத்தைப் பார்க்கவும்.
◼ நடத்தும் கண்காணியோ அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான சபைக் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை முடிந்த பிறகு அடுத்த முறை கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்டபின் சபைக்கு அதை அறிவிக்க வேண்டும்.—சபை கணக்குகளுக்கான அறிவுரைகள் (S-27-TL).
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்—பாடல் வரிகள் மட்டும்—மலையாளம்
திருப்தியான வாழ்க்கைக்கு வழி—ஹிந்தி, மலையாளம், தமிழ்
விழிப்புடன் இருங்கள்!—அஸ்ஸாமி, ஆங்கிலம், கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், வங்காளி, ஹிந்தி
இறைவன் வழி—இன்பவனம் செல்லும் இனிய வழி —உருது
கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? —உருது
துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்! (துண்டுப்பிரதி எண் 27) —உருது