அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் நவம்பர்: பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளியுங்கள். வீட்டுக்காரர் தனக்குப் பிள்ளைகள் இல்லையென்று சொன்னால், விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டை அளியுங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். இதற்குப் பதிலாக, யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தையோ குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தையோ அளிக்கலாம். ஜனவரி: பழுப்பேறியோ நிறம் மாறியோ உள்ளதும், 1991-ம் வருடத்திற்கு முன்பு வெளியிடப்பட்டதுமான 192 பக்க புத்தகம் ஏதாவது இருந்தால் அவற்றை அளிக்கலாம். சபையில் அப்படிப்பட்ட புத்தகங்கள் எதுவும் இல்லாவிட்டால், அதற்குப் பதிலாக, (கையிருப்பில் இருந்தால்) அறிவு புத்தகத்தையோ விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டையோ அளிக்கலாம். பிப்ரவரி: உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் ஒருவர் இருக்கிறாரா? (ஆங்கிலம்) அல்லது குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தை அளிக்கலாம்.
◼ டிசம்பர் மாதத்தில் ஐந்து சனி-ஞாயிறுகள் இருப்பதால், அது துணைப் பயனியர் சேவை செய்ய மிகச் சிறந்த மாதம்.
◼ வித்தியாசப்பட்ட கலாச்சார, மத பின்னணியினருக்குச் சாட்சி கொடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட பைபிள் சார்ந்த அநேக பிரசுரங்கள் கையிருப்பில் உள்ளன. பயனுள்ள இந்தப் பிரசுரங்களின் பட்டியல் ஒன்று பிரசுர ஊழியரிடம் இருக்கிறது.
◼ உலகளாவிய வேலைக்காக மாவட்ட மாநாடுகளில் நன்கொடையாக அளிக்கும் செக்கையும் கிளை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் செக்கையும் “The Watch Tower Bible & Tract Society of India” என்ற பெயரில் எடுக்க வேண்டும். இதை, நன்கொடை அளிப்பவரின் பெயர், முழு விலாசம், தன்னுடைய பணத்தை சங்கத்தின் உலகளாவிய வேலைக்காக கொடுப்பதன் நோக்கம் ஆகிய விவரங்கள் எழுதப்பட்ட கடிதத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும். உங்கள் நன்கொடை தொகை ரூ. 50,000-க்கும் அதிகமாக இருந்தால், உங்கள் வருமான வரிக்குரிய நிரந்தர வைப்பு எண்ணையும் (PAN) தெரிவியுங்கள். இது எங்களுடைய தணிக்கைப் பதிவுகளுக்குத் தேவைப்படுகிறது. இவற்றை, The Watch Tower Bible and Tract Society of India, 927/1, A V Pura, Post Box 6441, Yelahanka, Bangalore - 560 064 என்ற முகவரிக்கு தயவுசெய்து அனுப்பி வையுங்கள்.
◼ உடல்நலப் பராமரிப்பிற்குரிய நிரந்தர அதிகாரப் பத்திரம் (DPA) என்ற அட்டையை இதுவரை பூர்த்தி செய்திராவிட்டால், உடனடியாக அதைச் செய்யும்படி எல்லா பிரஸ்தாபிகளையும் ஊக்கப்படுத்துங்கள். இந்த DPA அட்டை இரத்தமேற்றுதலை மறுப்பதற்கான உங்கள் உரிமையை ஆதரிக்க உதவுகிறது. தேவைக்கேற்ப மூப்பர்கள் தனிப்பட்ட விதத்தில் உதவுவார்கள்.—நவம்பர் 2006 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையைக் காண்க.
◼ இனிமேல் பிரஸ்தாபிகள் மாதாமாதம் ஒவ்வொரு பைபிள் படிப்பையும் பைபிள் படிப்பு அறிக்கை (S-3-TL) படிவத்தில் அறிக்கை செய்ய வேண்டியதில்லை. ஆனால், எத்தனை பைபிள் படிப்புகள் நடத்துகிறார்கள் என்பதை வெளி ஊழிய அறிக்கை (S-4-TL) படிவத்தில் அதற்குரிய பகுதியில் குறிப்பிட வேண்டும். இது உடனடியாக அமலுக்கு வருகிறது. S-3-TL படிவம் சபை கூட்டங்களுக்கு வருவோரின் எண்ணிக்கையைப் பதிவுசெய்வதற்கே இனி பயன்படுத்தப்படும்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ் 2006 —ஆங்கிலம்
சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை (துண்டுப்பிரதி எண் 15) —சைனீஸ், பிரெஞ்சு, பெர்ஸியன், போர்ச்சுகீஸ்
மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? (துண்டுப்பிரதி எண் 16) —அரபிக், சைனீஸ், பிரெஞ்சு, பெர்ஸியன், போர்ச்சுகீஸ்
மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல் (துண்டுப்பிரதி எண் 20) —சைனீஸ், பிரெஞ்சு, பெர்ஸியன், போர்ச்சுகீஸ்
துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்! (துண்டுப்பிரதி எண் 27) —சைனீஸ், பிரெஞ்சு, பெர்ஸியன், போர்ச்சுகீஸ்
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருட்கள் —தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, வங்காளி, ஹிந்தி