அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். இதற்குப் பதிலாக, யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தையோ குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தையோ அளிக்கலாம். ஜனவரி: 1991-க்கு முன்பு பிரசுரிக்கப்பட்ட ஏதாவது ஒரு புத்தகத்தை அல்லது 192 பக்க புத்தகங்களில் எவையேனும் பழுப்பேறியோ, நிறம் மாறியோ உள்ளன என்றால் அவற்றை அளிக்கலாம். இப்படிப்பட்ட புத்தகங்கள் சபைகளின் கையிருப்பில் இல்லையென்றால், அறிவு புத்தகத்தை (கையிருப்பில் இருந்தால்) பயன்படுத்தலாம் அல்லது விழிப்புடன் இருங்கள்! என்ற சிற்றேட்டைப் பயன்படுத்தலாம். பிப்ரவரி: உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? என்ற ஆங்கிலப் புத்தகத்தையோ குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தையோ அளியுங்கள். மார்ச்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தை அளித்து பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முயலுங்கள்.
◼ நடத்தும் கண்காணியால் நியமிக்கப்பட்ட ஒருவர் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான சபைக் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். அடுத்தடுத்த தணிக்கைகளை ஒரே நபர் செய்யக்கூடாது. தணிக்கை முடிந்த பிறகு அடுத்த முறை கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்டபின் சபைக்கு அதை அறிவிக்க வேண்டும்.—சபை கணக்குகளுக்கான அறிவுரைகள் (S-27-TL) என்பதைக் காண்க.
◼ 2009-ஆம் ஆண்டிற்கான நினைவு ஆசரிப்பு, ஏப்ரல் 9-ஆம் தேதி, வியாழக்கிழமை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நடைபெறும் என்பதைத் தயவுசெய்து கவனியுங்கள். இது முன்னதாகவே அறிவிக்கப்படுவதன் நோக்கம், ஒரே ராஜ்ய மன்றத்தை பல சபைகள் பயன்படுத்துகையில் சகோதரர்கள் வேறொரு மன்றத்தை ‘புக்’ செய்வதற்கே. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், நினைவு ஆசரிப்பு அமைதியாகவும் சுமுகமாகவும் நடப்பதற்காக, அந்தக் கட்டடத்தில் நடக்கும் மற்ற நிகழ்ச்சிகளால் எவ்வித இடையூறும் குழப்பமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதற்கு அந்த மன்றத்து நிர்வாகத்திடம் மூப்பர்கள் முன்னதாகவே ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்.
◼ கிடைக்கிற புதிய பிரசுரங்கள்:
என்னுடைய பைபிள் கதை புத்தகம்—சிறியது —நேப்பாளி
◼ அமெரிக்க சங்கேத மொழியில் கிடைக்கும் புதிய டிவிடி-கள்:
லூக்கா எழுதிய நற்செய்தி
யெகோவாவின் அதிகாரத்திற்கு மரியாதை காட்டுங்கள்
நம்மை எச்சரிக்கும் உதாரணங்கள்