அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் செப்டம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். ஏற்கெனவே இந்தப் புத்தகம் வீட்டுக்காரரிடம் இருந்தால் பைபிள் படிப்பிலிருந்து எவ்வாறு பயனடையலாம் என்பதை அவருக்குச் சுருக்கமாய் நடித்துக் காட்டுங்கள். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளியுங்கள். ஆர்வம் காட்டுபவர்களிடம் பைபிள் படிப்பைத் தொடங்கும் நோக்கத்தோடு பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியை அளித்துவிட்டு கலந்துபேசுங்கள். நவம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். பைபிள் படிப்பை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். பிள்ளைகள் இருந்தால் பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளியுங்கள்.
◼ நவம்பர் மாதத்தில் ஐந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகள் உள்ளதால் துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கு அது மிகச் சிறந்த மாதம்.
◼ 2009-ம் ஆண்டின் நினைவுநாள் ஆசரிப்புக் காலத்தில் விசேஷப் பேச்சு ஏப்ரல் 20, 2009, ஞாயிற்றுக்கிழமை அன்று கொடுக்கப்படும். அந்தப் பேச்சின் தலைப்பு பின்னர் அறிவிக்கப்படும். சபைகளில் வட்டாரக் கண்காணியின் சந்திப்பு இருந்தாலோ, அந்த வாரக் கடைசியில் மாநாடு ஏதாவது இருந்தாலோ, அதற்கு மறுவாரத்தில் விசேஷப் பேச்சு கொடுக்கப்படும். ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு முன் எந்தச் சபையிலும் விசேஷப் பேச்சு கொடுக்கப்படக் கூடாது.
◼ சபைகள் அடுத்த முறை பிரசுரங்களுக்காகக் கேட்டெழுதும்போது, ஆங்கிலத்தில் உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன் இன்டெக்ஸ் 2008-யும், சிடி-ராமில் உவாட்ச்டவர் லைப்ரரி-2008-யும் கேட்டெழுதலாம். உவாட்ச்டவர் லைப்ரரி-2008 சபையிலுள்ளவர்களுக்காக மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதை சபை மூலமாகவே பெற்றுக்கொள்ள முடியும்.
◼ நடத்தும் கண்காணியால் நியமிக்கப்பட்ட ஒருவர் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான சபைக் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கைகளை ஒரே நபரே அடுத்தடுத்து செய்யக்கூடாது. தணிக்கை முடிந்த பிறகு அடுத்த முறை கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்டபின் சபைக்கு அதை அறிவிக்க வேண்டும்.—சபை கணக்குகளுக்கான அறிவுரைகள் (S-27-TL) என்பதைக் காண்க.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
என்னுடைய பைபிள் கதை புத்தகம் (பெரியது) —பஞ்சாபி