தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
டிசம்பர் 26, 2011-ல் துவங்கும் வாரத்தின்போது பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும்.
1. நாம் யாரைப் புண்படுத்தினோமோ அவரை மேலுமாகக் கோபப்படுத்தாதபடி பார்த்துக்கொள்ள நீதிமொழிகள் 30:32-ல் உள்ள ஆலோசனை எப்படி உதவும்? [w87 10/1 பக். 29 பாரா 8]
2. எவ்வகையான ‘சந்தோஷம்’ ஒரு நபருக்கு வீணானதாக இருக்கும்? (பிர. 2:1) [g 4/06 பக். 5 பாரா. 5-6]
3. பிரசங்கி 3:1-9-லுள்ள சாலொமோனின் வார்த்தைகள், விதி என்ற கோட்பாட்டை ஆதரிப்பதாகச் சிலர் நினைத்தாலும், அது அப்படியல்ல என்பதை பிரசங்கி 9:11 எவ்வாறு தெளிவுபடுத்துகிறது? [w09 7/1 பக். 4 பாரா 4]
4. ‘மிஞ்சின நீதிமானாய்’ இருப்பதால் வரும் ஆபத்து என்ன? (பிர. 7:16) [w10 10/15 பக். 9 பாரா 8-9]
5. மணத்துணையை அவசரப்பட்டுத் தேர்ந்தெடுப்பது ஞானமல்ல என்பதை உன்னதப்பாட்டு 2:7 எப்படிக் குறிப்பிட்டுக் காட்டுகிறது? [w06 11/15 பக். 19 பாரா 2]
6. சூலேமியப் பெண்ணின் ‘உதடுகளிலிருந்து தேன் ஒழுகுவதும்’ அவளுடைய ‘நாவின்கீழ் தேனும் பாலும் இருப்பதும்’ எதை அர்த்தப்படுத்துகிறது? (உன். 4:11) [w06 11/15 பக். 19 பாரா 7]
7. பொல்லாத அரசனாகிய ஆகாசுக்கு யெகோவா ஏன் இரட்சிப்பை அளித்தார்? (ஏசா. 7:3, 4) [w06 12/1 பக். 9 பாரா 4]
8. “அவபக்தியான” அதாவது விசுவாசதுரோக இஸ்ரவேல் தேசத்தை இன்று எதற்கு ஒப்பிடலாம், அதை அழிக்க யெகோவா பயன்படுத்தப்போகிற ‘கோல்’ எது? (ஏசா. 10:5, 6) [ip-1 பக். 145 பாரா. 4-5; பக். 153 பாரா 20]
9. பாபிலோனில் ‘இனி ஒருபோதும் ஒருவரும் குடியேறுவதில்லை’ என்று ஏசாயா முன்னறிவித்தது ஏன் குறிப்பிடத்தக்கது, அதன் நிறைவேற்றம் இன்று நமக்கு என்ன உறுதியை அளிக்கிறது? (ஏசா. 13:19, 20) [g 11/07 பக். 9 பாரா. 4-5]
10. “தாவீதுடைய வீட்டின் திறவுகோலை” இயேசு எப்போது பெற்றார், அதை எவ்வாறு பயன்படுத்தி வருகிறார்? (ஏசா. 22:22) [w09 1/15 பக். 31 பாரா 2]