தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஆகஸ்ட் 27, 2012-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். கீழேயுள்ள கேள்விகள் எந்த வாரத்தில் சிந்திக்கப்படும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக தேதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
1. விசுவாசதுரோக யூதா பற்றி எசேக்கியேல் கண்ட தரிசனம் எதை முன்நிழலாகக் குறிப்பிட்டது, என்ன முக்கியமான பாடத்தை நமக்குக் கற்பிக்கிறது? (எசே. 8:15-17) [ஜூலை 2, காவற்கோபுரம்07 7/1 பக். 13 பாரா 6; காவற்கோபுரம் 93 4/15 பக். 27-28 பாரா. 7, 12]
2. இன்றைய மதத் தலைவர்கள் பெரும்பான்மையர் எவ்வாறு எசேக்கியேலின் காலத்திலிருந்த பொய்த் தீர்க்கதரிசிகளைப் போலவே இருக்கிறார்கள்? (எசே. 13:3, 7) [ஜூலை 9, காவற்கோபுரம் 99 10/1 பக். 13 பாரா. 14-15]
3. எசேக்கியேல் 17:22-24-ல் உள்ள தீர்க்கதரிசனத்தின்படி, ‘கொழுந்துகளில் இளசாயிருக்கிற ஒன்று’ யார்? அவர் நாட்டப்படுகிற ‘உயரமும் உன்னதமுமான ஒரு பர்வதம்’ எது? அவர் எவ்வாறு ‘மகிமையான கேதுருவாக’ ஆவார்? [ஜூலை 16, காவற்கோபுரம் 07 7/1 பக். 12-13 பாரா 6]
4. எசேக்கியேல் 18:2-ல் குறிப்பிடப்பட்டுள்ள பழமொழியின்படி, எசேக்கியேலோடு சிறையிருப்பிலிருந்தவர்கள் தங்களுடைய கஷ்டங்களுக்கு யாரைக் குற்றஞ்சாட்டினார்கள்? இதிலிருந்து என்ன முக்கியமான பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்? [ஜூலை 23, காவற்கோபுரம் 88 11/1 பக். 18 பாரா 10]
5. யெகோவாவின் நோக்கத்தை முறியடிக்க மனிதராலும் முடியாது, பேய்களாலும் முடியாது என்பதை எசேக்கியேல் 21:18-22-ல் பதிவாகியுள்ள சம்பவம் எவ்வாறு காட்டுகிறது? [ஜூலை 30, காவற்கோபுரம் 07 7/1 பக். 14 பாரா 4]
6. எசேக்கியேல் 24:6, 11, 12-ல் உள்ளபடி, கொப்பரையில் ஒட்டிக்கொண்டிருக்கிற நுரை [“துரு,” NW] எதை அர்த்தப்படுத்துகிறது, 14-ஆம் வசனத்தில் காணப்படுகிற நியதி என்ன? [ஆக. 6, காவற்கோபுரம் 07 7/1 பக். 14 பாரா 2]
7. தீரு நகரத்திற்கு எதிரான தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? [ஆக. 6, வேதாகமம் முழுவதும் பக். 133 பாரா 4]
8. எசேக்கியேல் 28:2, 12-17-ல் உள்ள எந்தச் சொற்றொடர்கள், ‘தீரு ராஜாவோடு’ கூட, முதல் துரோகியான சாத்தானுக்கும் பொருந்துகின்றன? [ஆக. 13, காவற்கோபுரம் 05 10/15 பக். 23-24 பாரா. 10-14]
9. எகிப்து 40 வருடமாகப் பாழாய்க் கிடந்தது எப்போது, அதை நம்புவதற்கு என்ன அத்தாட்சி உள்ளது? (எசே. 29:8-12) [ஆக. 13, காவற்கோபுரம் 07 8/1 பக். 8 பாரா 5]
10. எசேக்கியேல் சொன்ன செய்திக்கு மக்கள் அக்கறையற்றிருந்தபோது, அவரைக் கேலி செய்தபோது, செய்தியைக் கேட்காதபோது, அவர் எப்படிச் சமாளித்தார், யெகோவா அவருக்கு என்ன உறுதி அளித்தார்? (எசே. 33:31-33) [ஆக. 20, காவற்கோபுரம் 92 1/1 பக். 26 பாரா. 16-17]