தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
டிசம்பர் 31, 2012-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். கீழேயுள்ள கேள்விகள் எந்த வாரத்தில் சிந்திக்கப்படும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக தேதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் பள்ளிக்காகத் தயாரிக்கும்போது ஆராய்ச்சி செய்ய அது உதவும்.
1. யோவேல் 2:1-10, 28 லுள்ள பூச்சிகளின் படையெடுப்பைப் பற்றிய தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது? [நவ. 5, காவற்கோபுரம் 07 10/1 பக். 13 பாரா 1]
2. ஆமோஸ் 9:7-10-ல், இஸ்ரவேலர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? [நவ. 12, காவற்கோபுரம் 07 10/1 பக். 15 பாரா 6]
3. ஏதோமியர் மிதமீறிய தன்னம்பிக்கையுடன் இருந்ததற்குக் காரணம் என்ன, எதை நாம் மறந்துவிடக்கூடாது? (ஒப. 3, 4) [நவ. 19, காவற்கோபுரம் 07 11/1 பக். 14 பாரா 1]
4. நினிவே மக்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டதை யெகோவா எவ்விதத்தில் காண்பித்தார்? (யோனா 3:8, 10) [நவ. 19, காவற்கோபுரம் 07 11/1 பக். 14 பாரா 14]
5. கடவுளுடைய பெயரில் நடப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? (மீ. 4:5) [நவ. 26, காவற்கோபுரம் 03 8/15 பக். 17 பாரா 19]
6. நாகூம் 2:6-10-லுள்ள தீர்க்கதரிசனம் நிறைவேறியது நமக்கு என்ன உறுதியை அளிக்கிறது? [டிச. 3, w07 11/15 பக். 9 பாரா 2; காவற்கோபுரம் 89 8/1 பக். 30 பாரா 8]
7. ஆகாய் 1:6-ன் அர்த்தம் என்ன, அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? [டிச. 10, காவற்கோபுரம் 06 4/15 பக். 22 பாரா. 12-15]
8. “உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும் இருங்கள்” என்று சகரியா 7:10-ல் உள்ள அறிவுரையை நாம் எப்படிப் பின்பற்றலாம்? [டிச. 17, காவற்கோபுரம் 07 12/1 பக். 11 பாரா 3]
9. சகரியா 4:6, 7-லுள்ள வார்த்தைகள் இன்றைய யெகோவாவின் வணக்கத்தாருக்கு எப்படி ஆறுதலாக இருக்கிறது? [டிச. 17, காவற்கோபுரம் 07 12/1 பக். 11 பாரா 1]
10. மல்கியா 3:16-ல் சொல்லப்பட்டதுபோல், கடவுளுக்குத் உத்தமமாய் நடக்க வேண்டுமென்ற நம் தீர்மானத்தில் ஏன் உறுதியாய் இருக்க வேண்டும்? [டிச. 31, காவற்கோபுரம் 07 12/15 பக். 29 பாரா 3]