பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 நாளாகமம் 33–36
தவறு செய்தவர் உண்மையாக திருந்தும்போது அவரை யெகோவா ஏற்றுக்கொள்கிறார்
மனாசே
அசீரியர்கள் அவனை சங்கிலிகளால் கட்டி பாபிலோனுக்கு கொண்டுபோக யெகோவா அனுமதித்தார்
பிடித்து செல்லப்படுவதற்கு முன்பு
பொய் தெய்வங்களுக்கு பலிபீடங்களை கட்டினான்
சொந்த மகன்களையே பலி கொடுத்தான்
அப்பாவி மக்களை கொலை செய்தான்
ஆவிகளுடன் பேசுவது, குறிசொல்வது போன்ற மாயமந்திர பழக்கங்களை செய்யும்படி ஜனங்களை தூண்டினான்
விடுதலையான பின்பு
மிகவும் தாழ்மையாக நடந்துகொண்டார்
யெகோவாவிடம் ஜெபம் செய்தார்; அவருக்கு பலிகளையும் செலுத்தினார்
பொய் தெய்வங்களுடைய பலிபீடங்களை இடித்துப் போட்டார்
ஜனங்கள் எல்லாரும் யெகோவாவை வணங்கும்படி கட்டளையிட்டார்
யோசியா
ஆட்சி காலத்தில்
யெகோவாவுக்குப் பிடித்ததை செய்ய விரும்பினார்
யூதாவிலும் எருசலேமிலும் பொய் வணக்கத்தை ஒழித்துக்கட்டினார்
யெகோவாவுடைய ஆலயத்தை பழுதுபார்த்தார். திருச்சட்ட புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டது