பைபிளில் இருக்கும் புதையல்கள் | எஸ்தர் 1-5
கடவுளுடைய மக்களுக்காக எஸ்தர் துணிந்து செயல்பட்டாள்
எஸ்தரின் உறுதியான விசுவாசமும் தைரியமும் கடவுளுடைய மக்களை காப்பாற்றியது
கடந்த 30 நாட்களாக எஸ்தரை ராஜா அழைக்கவில்லை. ராஜா அழைக்காமல் அவரிடம் போனால் மரண தண்டனைதான்
அகாஸ்வேரு ராஜா—இவர் முதலாம் சஷ்டாவாக இருந்திருக்கலாம். இவர் முன்கோபக்காரர். ஒரு சமயம், இவர் ஒரு மனிதனின் உடலை இரண்டு துண்டாக வெட்டச் சொன்னார்; மக்களை எச்சரிக்க அந்த உடலைப் பார்வைக்கு வைத்தார். தன் அழகு மனைவி வஸ்தியை ராணி பதவியில் இருந்து நீக்கினார்
எஸ்தர், தான் ஒரு யூதப் பெண் என்பதையும் ராஜாவின் நம்பிக்கைக்குரிய ஆலோசகன் அவரை ஏமாற்றிவிட்டான் என்பதையும் ராஜாவுக்கு புரியவைக்க வேண்டும்