பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 74-78
யெகோவா செய்த நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள்
யெகோவா செய்த நல்ல விஷயங்களை ஆழ்ந்து யோசித்துப் பார்ப்பது ரொம்ப முக்கியம்
பைபிளில் படிக்கும் விஷயங்களை ஆழ்ந்து யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போது, அது நம் மனதில் ஆழமாக பதியும், யெகோவா சொல்லித்தரும் விஷயங்களுக்காக எப்போதும் நன்றியோடு இருப்போம்
யெகோவாவைப் பற்றி ஆழ்ந்து யோசிக்கும்போது, அவருடைய அதிசயமான செயல்களையும் எதிர்காலத்தில் அவர் தரப்போகிற ஆசீர்வாதங்களையும் நினைத்துப் பார்ப்போம்
யெகோவா செய்திருக்கும் நல்ல விஷயங்கள்:
படைப்புகள்
படைப்புகளைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ளும்போது, யெகோவாமீது நாம் வைத்திருக்கும் அன்பும் மதிப்பும் இன்னும் அதிகமாகும்
சபையில் இருக்கும் நியமிக்கப்பட்ட சகோதரர்கள்
நம்மை வழிநடத்த, யெகோவா நியமித்திருக்கும் சகோதரர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்
பாதுகாக்கும் செயல்கள்
யெகோவா அவருடைய மக்களை எப்படியெல்லாம் பாதுகாத்தார் என்பதை நினைத்துப் பாருங்கள். அப்போது, தன்னுடைய மக்களை பாதுகாக்க யெகோவாவுக்கு விருப்பமும் இருக்கிறது, சக்தியும் இருக்கிறது என்ற நம்பிக்கை உங்களுக்கு இன்னும் அதிகமாகும்