பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 87-91
உன்னதமானவரின் மறைவில் தொடர்ந்து இருங்கள்
யெகோவாவின் ‘மறைவில்’ இருப்பது அவரோடுள்ள பந்தத்தை பாதுகாக்கும்
இன்று, யெகோவாவின் மறைவில் இருப்பதற்கு நம்மை அவருக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்
கடவுள்மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் அந்த மறைவிடத்தை பற்றி புரிந்துகொள்ள முடியாது
நாம் யெகோவாவின் மறைவில் இருந்தால், அவர்மேல் நாம் வைத்திருக்கிற அன்பையும் நம்பிக்கையையும் யாராலும் எதுவாலும் கெடுத்துப்போட முடியாது
‘வேடன்’ கண்ணி வைத்து பிடிக்கப் பார்க்கிறான்
பறவைகள் ரொம்ப கவனமாக இருக்கும்; அதனால் அவற்றைப் பிடிப்பது கஷ்டம்
ஒவ்வொரு வேடனும் பறவைகளை பற்றி நன்றாக தெரிந்துகொண்ட பிறகு சரியான கண்ணியை வைத்து அதை பிடிக்க முயற்சி செய்வான்
அதேமாதிரி சாத்தானும் யெகோவாவின் மக்களை பற்றி நன்றாக தெரிந்துகொண்டு, யெகோவாவோடு அவர்களுக்கு இருக்கும் பந்தத்தை கெடுக்க பல கண்ணிகளை பயன்படுத்துகிறான்
சாத்தான் பயன்படுத்தும் ஆபத்தான நான்கு கண்ணிகள்:
மனித பயம்
பொருளாசை
மோசமான பொழுதுபோக்கு
மனஸ்தாபங்கள்