பைபிளில் இருக்கும் புதையல்கள் | சகரியா 1-8
‘ஒரு யூதனுடைய உடையை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளுங்கள்’
மற்ற தேசங்களைச் சேர்ந்த எல்லா பாஷைக்காரர்களிலும் பத்துப் பேர் ஒரு யூதனுடைய உடையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, “நாங்களும் உங்களோடு வருகிறோம்” என்று சொல்வார்கள். இந்தக் கடைசி நாட்களில், எல்லா தேசங்களையும் சேர்ந்த மக்கள், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்குவதற்காகத் திரண்டு வருகிறார்கள்
பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு இன்று வேறே ஆடுகள் என்னென்ன வழிகளில் ஆதரவு தருகிறார்கள்?
பிரசங்க வேலையை மனப்பூர்வமாகச் செய்கிறார்கள்
பிரசங்க வேலைக்கு மனப்பூர்வமாக நன்கொடை தருகிறார்கள்