டிசம்பர் 17-23
அப்போஸ்தலர் 15-16
பாட்டு 114; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது”: (10 நிமி.)
அப் 15:1, 2—விருத்தசேதன பிரச்சினை, ஆரம்பக் கால கிறிஸ்தவ சபையில் பிரிவினையை ஏற்படுத்துமளவுக்கு அச்சுறுத்தலாக இருந்தது (bt பக். 102-103 பாரா 8)
அப் 15:13-20—ஆளும் குழு எடுத்த முடிவு வேதவசனங்களின் அடிப்படையில் இருந்தது (w12 1/15 பக். 5 பாரா. 6-7)
அப் 15:28, 29; 16:4, 5—ஆளும் குழு எடுத்த முடிவால் சபைகள் பலப்பட்டன (bt பக். 123 பாரா 18)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
அப் 16:6-9—நம்முடைய ஊழியத்தை விரிவாக்குவது சம்பந்தமாக இந்தப் பதிவிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? (w12 1/15 பக். 10 பாரா 8)
அப் 16:37—நல்ல செய்தி பெரியளவில் பரவுவதற்கு, தனக்கிருந்த ரோமக் குடியுரிமையை அப்போஸ்தலன் பவுல் எப்படிப் பயன்படுத்தினார்? (“நாங்கள் ரோமக் குடிமக்கள்” என்ற அப் 16:37-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
அப்போஸ்தலர் 15, 16 அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) அப் 16:25-40
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள்.
முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்துங்கள்; பிறகு, அதைப் பற்றி வீட்டுக்காரரிடம் கலந்துபேசுங்கள் (ஆனால், நடிப்பில் வீடியோவைப் போட்டுக் காட்டாதீர்கள்).
இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“பாடல்கள் பாடி யெகோவாவைச் சந்தோஷமாகப் புகழுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். பிள்ளைகள் யெகோவாவைப் புகழ்ந்து பாடுகிறார்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்தப் பகுதியின் முடிவில், எல்லாரையும் எழுந்து நிற்கச் சொல்லுங்கள்; பிறகு, பாட்டு 084 தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை என்ற வீடியோவைப் போட்டுவிட்டு, அதோடு சேர்ந்து எல்லாரையும் பாடச் சொல்லுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 12 பாரா. 9-15 பெட்டிகள் “கண்காணிக்கும் விதத்தில் ஏற்பட்ட மாற்றம்”, “கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தமாக ஆளும் குழு செய்யும் வேலைகள்”
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 125; ஜெபம்