ஆகஸ்ட் 10-16
யாத்திராகமம் 15-16
பாட்டு 132; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவைப் பாடிப் புகழுங்கள்”: (10 நிமி.)
யாத் 15:1, 2—மோசேயும் இஸ்ரவேல் ஆண்களும் யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்கள் (w95 10/15 பக். 11 பாரா 11)
யாத் 15:11, 18—நாம் யெகோவாவைப் புகழ வேண்டும். அதற்கு அவர் மட்டும்தான் தகுதியானவர் (w95 10/15 பக். 11-12 பாரா. 15-16)
யாத் 15:20, 21—மிரியாமும் இஸ்ரவேல் பெண்களும் யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்கள் (it-2-E பக். 454 பாரா 1; பக். 698)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
யாத் 16:13—இஸ்ரவேலர்களுக்கு வனாந்தரத்தில் யெகோவா ஏன் காடைகளை உணவாகக் கொடுத்தார்? (w11-E 9/1 பக். 14)
யாத் 16:32-34—மன்னா இருந்த ஜாடி எங்கே வைக்கப்பட்டிருந்தது? (w06 1/15 பக். 31)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாத் 16:1-18 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: சகோதரி லின்டா கேள்விகளை எப்படி நன்றாகப் பயன்படுத்தினார்? வசனத்தை எப்படிச் சரியாகப் பொருத்திக் காட்டினார்?
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 3)
முதல் சந்திப்பு: (5 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்திவிட்டு, அதைப் பற்றி வீட்டுக்காரரிடம் கலந்துபேசுங்கள் (நடிப்பில் வீடியோவைப் போட்டுக் காட்ட வேண்டாம்). (th படிப்பு 9)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“பயனியர் ஊழியம் செய்யுங்கள், யெகோவாவைப் புகழுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். மங்கோலியாவில் மூன்று சகோதரிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். தற்போது பயனியராகச் சேவை செய்யும் ஒரு சகோதரரையோ சகோதரியையோ அல்லது முன்பு பயனியராக இருந்த ஒருவரையோ பேட்டி எடுங்கள். அவரிடம் இப்படிக் கேளுங்கள்: பயனியர் சேவையில் உங்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் இருந்திருக்கின்றன? உங்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கின்றன?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 77, 78
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 141; ஜெபம்