ஆலயத்தின் உயரமான இடம்
சாத்தான் “ஆலயத்தின் உயரமான இடத்தில்” இயேசுவை உண்மையிலேயே நிற்க வைத்திருக்கலாம்; அங்கிருந்து குதிக்கும்படிதான் அவன் இயேசுவிடம் சொன்னதாகத் தெரிகிறது. ஆனால், சரியாக எந்த இடத்தில் இயேசு நின்றிருப்பார் என்று தெரியவில்லை. இங்கே ‘ஆலயம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை அந்த முழு வளாகத்தையும் குறித்திருக்கலாம். அதனால், இயேசு ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில் (1) அல்லது ஆலய வளாகத்தின் வேறொரு மூலையில் நின்றிருக்கலாம். இதில் எந்த இடத்திலிருந்து குதித்திருந்தாலும் கண்டிப்பாக உயிர் போயிருக்கும், யெகோவா மட்டும் காப்பாற்றாமல் இருந்திருந்தால்!
சம்பந்தப்பட்ட வசனங்கள்: