நீரிழிவு நோய்—அதோடு வாழ்வது எப்படி
கேத்தி ஓர் இளம் பெண். அவள் தனது உணவு பழக்கத்தையும் எடையையும் அவ்வப்போது திட்டமுறையின்படி கவனித்து வந்தது மட்டுமின்றி போதுமான அளவு உடற்பயிற்சியையும் மருத்துவரின் சகல ஆலோசனைகளையும் கடைபிடித்து வருகிறாள். தினந்தோறும் இன்சுலின் என்ற கணையச் சுரப்பி நீர் ஊசியைத் தானே போட்டுக் கொள்கிறாள். பல இலட்சக்கணக்கான நீரிழிவு நோயாளிகளில் கேத்தியும் ஒருத்தி.
தான் மேற்கொண்ட முன்னெச்சரிப்பு முறைகளின் மத்தியிலும் கேத்தி பின்வருமாறு ஒப்புக் கொள்கிறாள்: “என்னுடைய இரத்தத்தில் சர்க்கரைச் சத்து எந்தளவில் இருக்கிறது என்பதை நான் சொல்ல முடியவில்லை. ஒரு மதியம் 300-ஆக இருக்கக்கூடும். மறுநாள் அதே நேரம் அது 50-ஆக இருக்கக்கூடும். அது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.” சில காலத்துக்கு முன்பு குணப்படாத ஓர் நோய் தொற்றி பல வாரங்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியதாக இருந்தது.
மேய் என்பவள் வயது முதிர்ந்த ஒரு பெண். அவள் தனது உணவு திட்டத்தைக் கடைபிடிக்காததால் 50 பவுண்டு (23 கிலோ) கூடுதல் எடை கொண்டவள். தனது மருத்துவரின் ஆலோசனைகளைத் தான் முழுவதுமாகக் கடைபிடிப்பதில்லை என்று ஒப்புக் கொள்கிறாள். தனது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 300-க்கும் அதிகமாக ஏறிவிடுகிறது என்ற உண்மையை அவள் அசட்டை செய்கிறாள், இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள மறுக்கிறாள். நீரிழிவு நோய்க்கான மாத்திரை ஒன்றை தினந்தோரும் எடுத்துக்கொள்கிறாள். என்றாலும், அவள் தனது நோயைக் குறித்து அவ்வளவு அக்கறை எடுப்பதில்லை என்பது ஆச்சரியமாயிருக்கிறது.
இந்த இரண்டு பெண்களும் இவ்வளவு வித்தியாசமாக இருந்தபோதிலும், இவர்கள் இருவருக்குமே அதே நோய்தான் இருக்கிறது. இது இரத்தத்திலும் சிறுநீரிலும் சர்க்கரைச் சத்து மிகுதியாகக் காணப்படும் நீரிழிவு நோய் (diabetes mellitus) என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் இருவரிலும் ஏன் அவ்வளவு வித்தியாசம்? அதைவிட முக்கியமாக, தங்களுக்கிருக்கும் அந்த நீரிழிவு நோயோடு வாழ்வதற்கு அவர்கள் என்ன செய்யக்கூடும்?
நீரிழிவு நோய்—அது என்ன?
நீரிழிவு நோய் என்றால் என்ன என்பதை நாம் முதலாவது அறிந்துகொள்ள வேண்டும். உடலில் இன்சுலின் அல்லது கணையம் சுரக்கும் ஒரு நீரோடு சம்பந்தப்பட்ட ஒரு நோயாகும். இன்சுலின் அல்லது கணையச் சுரப்பி நீர் உடல் இரத்த ஓட்டத்திலிருந்து சர்க்கரைச் சத்தை எடுத்து சக்திக்காக பயன்படுத்தபடும் அல்லது சேகரித்து வைக்கப்படும் செல்களுக்குள் சேர்க்கிறது.
என்றபோதிலும் உடலில் போதுமான அளவு இன்சுலின் அல்லது கணையச் சுரப்பி நீர் சுரக்காவிட்டால், சக்தியை ஊட்டுவதற்கு அல்லது சேர்த்து வைப்பதற்கு தேவையான சர்க்கரை மிகக் குறைந்த அளவில்தான் செல்களுக்குள் செல்லும். மாறாக, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாகி பிரச்னைகளை உண்டாக்கக்கூடும். இதை சாதராணமாக சொல்லவேண்டுமானால், இதுதான் நீரிழிவு நோய். கேத்தி மற்றும் மேய் என்பவர்களின் காரியத்தில் பார்த்ததுபோல இந்த நோய் இரண்டு முக்கியமான வகையைக் கொண்டது.
கேத்தியின் விஷயத்தில் கணையச் சுரப்பி நீர் சார்ந்த இரத்தத்திலும் சிறுநீரிலும் சர்க்கரைச் சத்து மிகுதியாகக் காணப்படும் நீரிழிவு நோய் [Insulin Dependent Diabetes Mellitus] அல்லது முதல் வகை நீரிழிவு நோயாகும். இதில் பிரச்னை என்னவென்றால் கணையம் இன்சுலின் அல்லது கணையச் சுரப்பி நீரை சுரக்க முடியாததே. சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வுகள், இந்த வகையான நீரிழிவு நோய் சில சமயங்களில் கிருமிகளினால் ஏற்படும் தொற்று நோய்களால் ஏற்படக்கூடும் என்பதைக் காண்பிக்கிறது. இந்த வகை நீரிழிவு நோயை உடையவர் சாதாரணமாக இளம் வயதில் (30 வயதுக்குக் கீழாக) இதைப் பெறுகிறவராக, பொதுவாக மெலிந்தவராக இன்சுலின் அல்லது கணையச் சுரப்பிநீர் ஊசி தேவைப்படுபவராக இருக்கிறார்.
மேயின் விஷயத்தில் கணையச் சுரப்பி நீர் சாராத இரத்தத்திலும் சிறுநீரிலும் சர்க்கரைச் சத்து மிகுதியாகக் காணப்படும் நீரிழிவு நோய் [Non Insulin Dependent Diabetes Mellitus] அல்லது இரண்டாவது வகை நீரிழிவு நோயாகும். இது சாதாரணமாக வயதில் பெரியவர்களுக்கு வரும் நீரிழிவு நோய் என்று குறிப்பிடப்படுகிறது. இங்கு பிரச்னை என்னவென்றால், கணையம் இன்சுலினை அல்லது கணையச் சுரப்பி நீரை சுரக்காமலிருக்கிறது என்பதல்ல, ஆனால், போதுமான அளவு சுரப்பதில்லை என்பதுதான். அது சுரக்கும் சுரப்பி நீரில் கொழுப்பு மிகுந்த செல்களால் மிகுந்துவிடுகிறது. அதை மேற்கொள்ளும் அளவுக்கு தேவையான கணையச் சுரப்பிநீரை கணையம் உற்பத்தி செய்ய முடியாத நிலை, ஆதலால் இரத்தத்தில் சர்க்கரைச் சக்தி அதிகமாகிவிடுகிறது. இந்த வகையான நீரிழிவு நோய் சாதாரணமாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எற்படுகிறது. அவர்கள் எடை மிகுந்தவர்களாகவும், சில சமயங்களில் இன்சுலின் ஊசி அல்லது கணையச் சுரப்பி நீர் ஊசி இல்லாமலேயே இருந்துவிடக்கூடும். இவர்களும்கூட நீரிழிவு நோயை பெற்றோர் வழியாய் சுதந்தரித்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள்.
முதல் வகை நீரிழிவு நோய்க்கு சிகிச்சை
கேத்தியின் நீரிழிவு நோய், முதல் வகை நீரிழிவு நோய் சாதாராணமாகக் காணப்படும் ஒன்றாக இல்லாவிட்டாலும் அதிக கவலைக்குரிய ஒன்று. முதல் வகை நோய்க்குப் பரிகாரம் மிக எளியதொன்றாக தோன்றக்கூடும்—இன்சுலினை அல்லது கணையச் சுரப்பி நீரை ஏற்றுவது. இன்சுலின் ஊசி ஒரு நீரிழிவு நோயாளியை உயிருடன் வைக்கும் என்றாலும், உடலில் நிமிடத்திற்கு நிமிடம் கணையச் சுரப்பி நீரின் தேவை அளவில் மாறுபடுவதால், அதற்கு இது ஈடு செய்ய முடியாது.
நீரிழிவு நோயிலிருக்கும் சிக்கலைக் குறைப்பதற்கு, அதாவது பார்வை இழப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறுகளைக் குறைப்பதற்கு, இரத்தத்திலும் சிறுநீரிலும் சர்க்கரைச் சத்தின் அளவைக் குறைப்பது மிகவும் அவசியம். உடல் சாதாரணமாக அதே சமயத்தில் அடிக்கடி கணையச் சுரப்பி நீரின் அளவில் வித்தியாசப்படுவதால் அதே நிலையைப் பின்பற்றுவது அவசியம். ஆனால் கேள்வி, அதை எப்படிச் செய்வது? இருவகை சிகிச்சை உண்டு: (1) நோய்த் தடுக்கும் தற்காப்பு முறை (2) மாற்று கணையச் சுரப்பி நீர் சிகிச்சை முறை.
நோய்த் தடுக்கும் தற்காப்பு முறையைக் குறித்ததில், கணையச் சுரப்பி நீருக்கான உடலின் அனுதின தேவையிலிருக்கும் அளவு வித்தியாசத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவர் அருந்தும் உணவு ஒரு முக்கியமான அம்சம், ஏனென்றால் அதைத்தானே சீரண மண்டலம் இரத்தத்தில் சர்க்கரைச் சத்துக்களாக மாற்றுகின்றது. முதல் வகை நோயை உடைய விவேகமான ஒருவர் தான் நன்கு திட்டமிட்ட அளவான உணவு முறைப் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை சீக்கிரத்தில் கற்றுக்கொள்கிறார். இது அதிக சிக்கலான மாச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து, புரதச்சத்துக்களையும் உட்படுத்துகின்றது. இந்த உணவு திட்டம் சர்க்கரை, தேன், மாப்பண்டங்கள், இனிப்புப் பானங்கள் மற்றும் அவற்றையொத்து இனிப்பு உணவு வகைகளைத் தவிர்க்கிறது. இந்த மாச்சத்துக்கள் மிக எளிதில் இரத்த ஓட்டத்தில் கலந்துவிடுகிறது.
இந்தத் திட்ட உணவு உடலுக்கு ஒழுங்கான இடைவெளியில் அளிக்கப்பட வேண்டும். நீரிழிவு நோயாளி கவலையீனமாக இருந்துவிடுவாரானால், தனக்குப் பிரியமான எதையும் எந்த நேரத்திலும் சாப்பிடும்போது, கணையச் சுரப்பி நீரின் அளவும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்தின் அளவும் சீக்கிரத்தில் சமநிலை இழந்துவிடுகிறது. இந்த காரியம் அந்த நபரை வேகமாக படுமோசமான நிலைக்குள்ளாக்கிவிடுகிறது அல்லது, நீண்டகால சிக்கலான நோய்க்குள்ளாக்கிவிடுகிறது.
உடற்பயிற்சி இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. எனவே விவேகமான முதல் வகை நீரிழிவு நோயாளி தனது தினசரி காரியங்களில் உடற்பயிற்சியையும் உட்படுத்திக்கொள்கிறார், தன்னுடைய உடற்பயிற்சியினால் இரத்ததில் சர்க்கரைச் சத்து குறைபடுமானால், அதை ஈடுசெய்வதற்கு உடனடியாக சர்க்கரைகொண்ட எதையாவது (ஒரு கற்கண்டு கட்டியை) உட்கொள்ள கவனமாயிருக்கிறார். அது நீரிழிவு அதிர்ச்சிக்கு வழிநடத்தக்கூடும். உணர்ச்சிகளுங்கூட இரத்தத்தில் சர்க்கரைச் சத்தை பாதித்து, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், இது தனது உணவு திட்டத்தைக் குறித்ததில் கட்டுப்பாடு இல்லாததில் ஏற்படக்கூடும். எந்தத் தொற்று நோயும் வியாதியும் உடனடியாக சிகிச்சையளிக்கப்பட வேண்டும், காரணம், அவை இரத்ததில் சர்க்கரைச் சத்து சமநிலையை இழக்கும்படிச் செய்யக்கூடும்.
என்றபோதிலும், இந்த அம்சங்களை எல்லாம் கவனத்தில் கொண்டபோதிலும், கேத்தியைப் போல் முதல் வகை நீரிழிவு நோயை உடையவர் தன்னுடைய இரத்தத்தில் சர்க்கரைச் சத்தை சமநிலையில் வைப்பது கடினமாக இருக்கக்கூடும். அப்பொழுது என்ன?
சிகிச்சையின் இரண்டாவது முக்கிய அம்சம் கணையச் சுரப்பி நீர் ஊசிகளைப் போட்டுக் கொள்ளுதல். 60 ஆண்டுகளுக்கு முன்பு கணையச் சுரப்பி நீர் உற்பத்தி செய்யப்பட்டபோது அது அநேக நீரிழிவு நோயாளிகளுக்கு உயிர்காக்கும் ஒன்றாக இருந்துவந்தது. அதற்குப் பின்பு நாள் ஒன்றுக்கு ஒரு ஊசி என்ற காரியம் நன்கு வரவேற்கப்பட்டது.
தினந்தோறும் ஊசி போட்டுக்கொள்வது அதிக வசதியாக இருக்கிறது என்றாலும், வெகு நாட்களுக்குப் பின்பு நெடுநாளைய கோளாறுகள், உதாரணமாக தமனிக்கன் கடினமாகுதல் போன்ற கோளாறுகள் ஏற்படக்கூடும். இப்படியாக குறைவாக செயல்படும் கணையச் சுரப்பி நீர் ஊசியை அடிக்கடி போட்டுக்கொள்வது, அந்த நாளினூடே இரத்தத்தில் சர்க்கரைச் சத்தை நல்ல விதத்தில் பலமாகக் கட்டுப்படுத்தக்கூடும் என்று சிலர் சிபாரிசு செய்கின்றனர். சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் இதைக் கூடிய காரியமாகவும் அதே சமயத்தில் நடைமுறையானதாகவும் ஆக்கியிருக்கிறது.
வீட்டிலேயே இரத்தத்தில் சர்க்கரைச் சத்து அளவை நிர்ணயித்து கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கான ஒரு நவீன சிகிச்சை முறை பின்வருமாறு விவரிக்கப்பட்டது: “கணையச் சுரப்பி நீர் ஊசி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து முதல் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்ட சிகிச்சை முறை.” எளியதோர் சிறிய இயந்திரத்தைக் கொண்டு நீரிழிவு நோயாளி தனது இரத்தத்தில் சர்க்கரைச் சத்தின் அளவை ஒரு நாளில் பல முறைகள் பரிசோதித்துக் கொள்ளலாம். இப்படியாக இன்சுலின் அல்லது கணையச் சுரப்பி நீர் எந்த அளவுக்கு ஏற்றிக் கொள்ளப்பட வேண்டும் என்பதை தானே தீர்மானித்துக்கொண்டு தனது இரத்தத்தில் சர்க்கரைச் சத்தின் அளவை சரியான நிலையில் வைத்துக் கொள்ளலாம்.
வீட்டிலேயே செய்துகொள்ளும் இந்த சிகிச்சை முறையில் இருக்கும் ஒரு பிரச்னை என்னவெனில், இரத்த பரிசோதனைக்காகத் தானே தன் விரலை ஊசியினால் குத்திக் கொள்ள வேண்டும்.. ஆனால் அதற்காக விசேஷ கூர் சாதனங்கள் இருக்கின்றன, இவற்றைப் பயன்படுத்தி பழக்கப்பட்டவர்கள் அது அவ்வளவு பிரச்னையாக அல்லது கஷ்டமாக இல்லை என்று சொல்கின்றனர். மற்றொரு குறைபாடு, அந்த இயந்திரத்தின் விலை. என்றபோதிலும், முன்னேற்றமடைந்த தொழில்நுட்பம் காலப்போக்கில் அவற்றை மலிவாக்கக்கூடும்.
மற்ற முன்னேற்றங்கள், அதிக செலவில்லாத, உபயோகத்திற்கு பின்பு நிராகரிக்கப்படக்கூடிய மிகக் கூரிய இன்சுலின் அல்லது கணையச் சுரப்பி நீர் ஊசிகளை உட்படுத்துகின்றன. இவை இன்சுலின் ஊசியை விலைக்குறைவாக ஆக்கியிருக்கிறது. மற்றும் இன்று கிடைக்கப்பெறும் இன்சுலின் அல்லது கணையச் சுரப்பி நீர் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட வேண்டிய அவசியமில்லை, இப்படியாக பலமுறை மருந்து கடைக்குச் சென்று வாங்கி வரவேண்டிய கஷ்டம் தவிர்க்கப்படுகிறது.
மனிதனின் கணையச் சுரப்பி நீருக்கு ஒத்திருக்கும் இன்சுலின் அல்லது கணையச் சுரப்பி நீர் மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கக்கூடியதாயிருக்கிறது, மற்றும் இது முதல் வகை நீரிழிவு நோய் புதிதாகக் காணப்படும் நபருக்கு சிபார்சு செய்யப்படுகிறது. மற்றும் அழுத்தத்தின் அடிப்படையில் ஊசியில்லாமலேயே ஒரு விசைக்குழாய் மூலம் இன்சுலினை அல்லது கணையச் சுரப்பி நீரை உடலுக்குள் செலுத்துதல் முறையும் ஒரு புதிய முறை. இந்த விசைக்குழாயை ஒருவர் தன் அரைக்கச்சையில் கட்டிக்கொள்வார். வயிற்றுப் பகுதியிலுள்ள ஒரு ஊசியின் மூலம் தொடர்ந்து கணையச் சுரப்பி நீரை உள்ளே ஏற்றிக் கொண்டிருக்கிறது. இந்த விசைக்குழாய் முறை இன்று பயன்படுத்தப்பட்டு வருகிறபோதிலும், ஓரளவு ஆபத்தானவை என்றும் ஒரு மருத்துவ நிபுணரின் மேற்பார்வையில்தான் அவை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அநேக மருத்துவர்கள் கருதுகின்றனர்.
முதல் வகை நீரிழிவு நோயாளிகளாக இருக்கும் சிறு பிள்ளைகளைக் குறித்ததில், அவர்களுடைய உணவு திட்டத்தைப் பற்றி அதிக கவலை தெரிவிக்காமலிருக்கும் ஒரு பழக்கம் காணப்படுகிறது. அவர்கள் சாதாரணமாக சாப்பிடும் உணவு வகைகளை சாப்பிடலாம் என்றும், பின்பு அதற்கு ஈடுகட்ட வேண்டிய அளவு கணையச் சுரப்பி நீரை ஏற்றிக் கொள்ளலாம் என்றும் சிலர் உணருகின்றனர். இருந்தாலும் அந்தப் பிள்ளைகள் அதிகமான இனிப்பு சாப்பிடக்கூடாது. அவர்கள் ஓரளவு சுகமாக வாழ்வதற்கு உண்மையான அடிப்படையாக இருப்பது, இரத்தத்தில் இருக்கும் சர்க்கரைச் சத்தின் அளவை சமநிலையில் வைத்துக்கொள்ள கவனமாயிருப்பதும். கணையச் சுரப்பி நீரீன் அளவை நிலைப்படுத்திக் கொள்வதுமாகும்.
இரண்டாம் வகை நீரிழிபு நோய்க்கு சிகிச்கை
பொதுவாகக் காணப்படும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு சிகிச்சை முறைகளில் அவ்வளவு முன்னேற்றங்கள் இருந்ததில்லை. ஏற்கனவே குறிப்பிடப்பட்டபடி, இதில் பிரச்னைகளையும், கணையச் சுரப்பி நீரை சற்றும் சுரக்காமலிருக்கிறது என்பதல்ல. உடலுக்குத் தேவையான கணையச் சுரப்பி நீரைக் கணயம் உற்பத்திசெய்ய முடியாமலிருக்கிறது என்பதுதான் பிரச்னை. இந்தப் பிரச்னை சாதாரணமாகக் கூடுதலான எடையால் மோசமான நிலையை அடைந்துவிடுகிறது.
மாத்திரைகள் அதிகமாக பயன்படுத்தப்பகிறது என்றாலும், இந்த மாத்திரைகள் கணையச் சுரப்பி நீரை அதிகளவில் சுரக்கச் செய்கிறது. களைப்புற்ற மாட்டை அடிப்பதற்கு ஓர் அளவு இருக்கிறது, இந்தக் காரியத்தில் கணையம் களைப்புற்றிருக்கிறது. எடையைக் குறைத்திடும் ஒரு நல்ல உணவு திட்டம் மற்றும் சாதாரண இனிப்பு வகைகளை மட்டுப்படுத்தலோடுகூட விவேகமான உடற்பயிற்சி அதிக உதவியாக இருக்கக்கூடும்.
உணவுதிட்டமும், உடற்பயிற்சியும், இனிப்பும் இரத்தத்தில் சர்க்ககரைச் சத்தைக் குறைக்கவில்லையென்றால், அப்பொழுது மாத்திரைகள் கொடுக்கப்படலாம். இந்த இடத்தில் கருத்துகள் வேறுபடுகின்றன. சில மருத்துவர்கள் மாத்திரைகளுக்குப் பதில் கணையச் சுரப்பி நீரை சிபாரிசு செய்கின்றனர்; இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கும் இந்தச் சிகிச்சையை சிபார்சு செய்கின்றனர். மாத்திதைகளை எடுப்பதால் பக்க பாதிப்புகள் இருக்கக்கூடும். நீண்ட நாளைய சிக்கல்களை அல்லது கோளாறுகளை தீர்க்க அவை உண்மையிலேயே உதவியாக இருக்கின்றனவா என்பதில் ஐயப்பாடு இருந்து வருகிறது.
ஒவ்வொரு காரியத்திலும், ஒரு குறிப்பிட்ட சிகிச்சை முறை சிபார்சு செய்யப்படுவதற்கு முன்பாக அந்த சிகிச்சை முறையில் எல்லா அம்சங்களும் தகுந்த மருத்துவர்களால் நிதானிக்கப்பட்டு சிபார்சு செய்யப்பட வேண்டும். நீரிழிவு நோயாளி கொடுக்கப்படும் சிபார்சுகளை எல்லாம் நன்கு நிதானித்து, தான் என்ன செய்வான் என்பதன்பேரில் முடிவான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
உங்கள் நீரிழிவு நோயோடு வாழ்வது
இப்படியாக நீரிழிவு நோயை மேற்கொள்வது பல படிகளை உட்படுத்துகிறது. ஒருவருக்கு எந்த வகை நீரிழிவு நோய் இருக்கிறது என்பதை சார்ந்ததாயிருக்கிறது. இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்குப் பரிகாரம் உணவு திட்டமும் எடை குறைப்புமாகும். ஆனால் ஒரு மருத்துவர் சொன்னதாவது: “உண்மை என்னவெனில், அந்த நிலை ஏற்படும் சாத்தியம் குறைவாக இருக்கிறது என்பதை என் அனுபவம் காட்டுகிறது. சிலருடைய விஷயத்தில் நான் அவர்களுக்கு ஆரம்பமுதலே மாத்திரைகளையோ அல்லது கணையச் சுரப்பிநீர் ஊசியையோ அளித்து வருகிறேன்.”
முதல் வகை நீரிழிவு நோயாளி அந்த நோயோடு வாழ்வது அவ்வளவு எளியதன்று. இங்கே, இதற்கான பதிலின் ஒரு பகுதி, உட்பட்டிருக்கும் மருத்துவ சிகிச்சையில் அல்ல, ஆனால் நீரிழிவு நோயினிடமாக நோயாளியின் நோக்குநிலையின் பேரில் சார்ந்ததாக இருக்கிறது. உண்மைதான், தினந்தோறம் ஊசி போட்டுக்கொள்வதோ, ஒருவேளை ஒவ்வொரு நாளும் பல முறை ஊசி போட்டுக்கொள்வதோ, அல்லது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கணிப்பதற்கு விரலைக் குத்திப் பார்ப்பதோ விரும்பத்தகுந்த காரியமல்ல. அதே சமயத்தில் குறிப்பிட்ட ஒழுங்கான இடைவெளியில் ஒரே விதமான உணவுகளை ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதையும் உடற்பயிற்சியும் மற்றும் ஓய்வும் சரியான விதத்தில் திட்டமிடப்பட்டிருப்பதையும் கொண்ட ஒரு வாழ்க்கையை நிச்சயப்படுத்திக் கொள்வதும் சுலபமான காரியமல்ல.
அதே சமயத்தில், ஒரு நேர்மையான உண்மையான நோக்குநிலை என்பது, நீரிழிவு நோய்க்கு இன்று பரிகாரம் இல்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. ஆனால் சிகிச்சை இல்லாமலிருப்பதைவிட கட்டுப்பாட்டை உட்படுத்தும் சிகிச்சை நீரிழிவு நோயாளியைக் கூடுதலாக பல ஆண்டுகள் உயிருடன் வைக்கும்.
தவிர்க்க வேண்டிய மனநிலைகள்
ஒருவர் மனநிலையின் இரு கடைகோடியையும் தவிர்க்க வேண்டும். ஒரு பக்கம், நீரிழிவு நோயாளி தன் பிரச்னையைக் குறித்து கவலையீனமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும், அதாவது, நல்ல மருத்துவ வழிநடத்துதலைப் பின்பற்ற தவறி, பிரச்னை தீர்ந்துவிடும் என்று ஒருவேளை நம்பியிருப்பதையும் தவிர்க்க வேண்டும். அது தீராது.
மறுபட்சத்தில், உணர்ச்சிகள் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து அளவை வெகுவாக மாற்றக் கூடுமாதலால், அந்தப் பிரச்னையைப் பற்றி அளவுக்கு மிஞ்சி கவலைக்குள்ளாவது சர்க்கரைச் சத்து அளவை வெகுவாக பாதித்துவிடக்கூடும். எப்பொழுது பார்த்தாலும் பயத்தில் ஆழ்ந்தவர்களாய் அனுதின வேலைகளை மறந்து நீரிழிவு நோய்க்குரிய சிகிச்சையின் பேரில் வற்புறுத்தப்பட்ட அல்லது கண்டிப்பான கவனிப்பை செலுத்துவது எந்த விதத்திலும் உதவியாக இராது.
நீரிழிவு நோயாவது அல்லது வேறு எந்த நோய்களாவது நிரந்தரமாகக் குணப்படுத்தப்பட முடியுமா? இருதயத்திற்கு இதமான விடையைக் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் அளிக்கிறது: ‘ஆம், நிச்சயமாக!’ அது சமீப எதிர்காலத்தில் நடக்கப்போகிறது! இந்தக் குணமடைதல் இயேசு ஜெபிக்கும்படியாகத் தமது சீஷர்களுக்குக் கற்பித்த கடவுளுடைய ராஜ்யத்தின், அந்த அரசாங்கத்தின் ஆட்சியின் கீழே சம்பவிக்கப்போகிறது. (மத்தேயு 6:9, 10) அந்தச் சமயத்தில், “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.”—ஏசாயா 33:24. (g85 10/8)
[பக்கம் 26-ன் சிறு குறிப்பு]
இரத்தத்தில் சர்க்கரைச் சத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு ஒரு நீரிழிவு நோயாளி இனிப்பு வகை உணவு பண்டங்களை அருந்துவதைத் தவிர்ப்பதற்காகத் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்
காரணமாக தவறாக வாசிப்பவர்களையும் இது உண்டுபண்ணுகிறது என்பதே இந்த முறைக்கு எதிராக கொடுக்கப்படும் முக்கிய காரணமாகும்.
[பக்கம் 27-ன் சிறு குறிப்பு]
பரிகாரத்தின் ஒரு பகுதி அந்தத் தனிப்பட்ட நபரின் மனநிலையைச் சார்ந்ததாயிருக்கக்கூடும்