உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g86 7/8 பக். 18-24
  • “கடவுள் யார் பக்கம் இருக்கிறார்?”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “கடவுள் யார் பக்கம் இருக்கிறார்?”
  • விழித்தெழு!—1986
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • குண்டு வீசுவதற்கு எங்கள் முறை வந்தது
  • மனச்சாட்சியின் உறுத்தல்கள்
  • “கடவுள் யார் சார்பாக இருக்கிறார்?”
  • மதிய உணவு குறுக்கிடப்பட்டது
  • கடவுள் இருக்கும் பக்கம்
  • ஒரு வித்தியாசப்பட்ட உச்ச உயர்வான சேவை
  • அவை வானில் பவனிவர என்ன தேவை?
    விழித்தெழு!—1999
  • சாவின் பாதையிலிருந்து சமாதான பாதைக்கு
    விழித்தெழு!—2003
  • பாகம் 5: 1943-1945 இரண்டாம் உலகப் போர்—அதன் கொடிய மற்றும் கோரமான முடிவு
    விழித்தெழு!—1988
  • மக்கள் எவ்வாறு சமாதானத்தில் ஒன்றுசேர்ந்து வாழலாம்
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1986
g86 7/8 பக். 18-24

“கடவுள் யார் பக்கம் இருக்கிறார்?”

மே 30, 1942 மாலைப் பொழுதன்று இங்கிலாந்திலிருந்து ஆயிரம் போர் விமானங்கள் வெடிகுண்டுகளைத் தாங்கியவையாய்ப் புறப்பட்டன. வரலாற்றிலேயே அதுவரையிலிருந்தவற்றை காட்டிலும் அது மிகப் பெரிய விமானதாக்குதலாக இருந்தது. நான்கு இன்ஜின்களை கொண்ட லான்காஸ்டர் குண்டு வீச்சு விமான படைபிரிவுக்கு நான் சமிக்கை தலைவனாக இருந்தேன். ஒவ்வொரு விமானமும் 8000 பவுண்டுகள் (3,600 கிலோ கிராம்) குண்டுகளை சுமந்து சென்றது. ஒரு மிகப் பெரிய தொழிற்சாலை முழுவதையும் அல்லது அநேக குடியிருப்பு பகுதிகளையும் அழித்துப் போடுவதற்கு சக்தி வாய்ந்த போதுமான வெடிகுண்டுகளை சுமந்து சென்றது.

20,,000 அடி உயரே பறந்து நாங்கள் ஜெர்மானிய கொலோன் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தோம். அந்த குழுவின் அங்கத்தினர்கள் இன்ஜின்கள், எரிப்பொருட்கள், வானொலி, திசைதிருப்பி இயக்கம் மேலும் இது போன்றவற்றை பரிசோதிப்பதில் அதிக சுறுசுறுப்புடனிருந்தனர். தங்களுடைய இயந்திர துப்பாக்கிகளை பரிசோதிப்பதற்கும் மேலும் சுடுவதற்கும் மூன்று துப்பாக்கி மனிதரும் தங்கள் தலைவரிடம் அனுமதி கேட்டனர். எதிர் எல்லைக்குள் பிரவேசிப்பதற்கு இப்பொழுது எல்லாம் தயாராக இருந்தது.

நாங்கள் டச் கரையோரத்தை கடந்து கொண்டிருக்கையில் விமான கலத்தின் கூறையில் பார்வையிடுவதற்குரிய இடத்தில் எனக்குரிய நிலையில் நிற்பதற்கு நான் எழுந்து கொண்டேன். அங்கிருந்து நான் எல்லா திசைகளிலும் பார்வையிட முடியும். அங்கே நான் நின்று கொண்டு எதிராளிகளின் இரவுநேர சண்டை வீரர்களுக்காக உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தேன். அதை முறியடிக்கும் நடவடிக்கையை எடுக்கவும் துப்பாக்கி வீரர்களுக்கு கட்டளைகளை கொடுக்கவும் அப்படி செய்தேன். தொலை தூரத்தில் ஆங்காங்கே சிவப்பான ஒளியை கண்டேன். அது வானத்தை பிரகாசிக்கச் செய்து கொண்டிருந்தது. காரணம் எங்களுக்கு முன்சென்ற பெரும்பாலான குண்டுவீச்சு படையினர் கொலோன் நகர் மீது எற்கனவே குண்டுகளை வீசி கொழுந்து விட்டு எறியும்படி செய்துவிட்டனர்.

குண்டு வீசுவதற்கு எங்கள் முறை வந்தது

இப்பொழுது எங்கள் குறியிலக்கை நோக்கி பறப்பதற்கு நாங்கள் ஆயத்தமாக இருந்தோம். ஜெர்மானிய போர் விமானம் எங்களை தாக்குவதற்கு ஆயத்தமாக குண்டு வீசவேண்டிய அந்த பிராந்தியத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அன்றிரவு அந்த கொலோன் நகர்மீது படையெடுத்து ஒருமுனை துவக்கி மறுமுனை மட்டும் கொளுத்திவிட்ட ஆயிரம் குண்டு வீச்சு குழுக்களில் நாங்களே கடைசி குழுவாக இருந்தோம். ஏற்கனவே குண்டு விச்சினால் எறிந்து கொண்டிராத பிராந்தியத்தை தேடி கண்டுபிடித்து அவ்விடத்தில் குண்டு வீசுவதற்காக நாங்கள் 10,000 அடி கீழே பறக்க வேண்டியதாக இருந்தது.

பிரதான தபால் நிலையம் தானே குறியிலக்கு என்று எங்களுக்கு சொல்லப்பட்டது. “அங்கே தெருக்களின் இடையே ஆயுத தொழிற்சாலைகள் இருப்பதாக” எங்களுக்கு சொல்லப்பட்டது. பெரும்பாலான இடங்களில் பிரதான தபால் நிலையத்தை சுற்றி தொழிற்சாலைகள் கிடையாது என்பதை நாங்கள் அறிந்திருந்ததன் காரணமாக பொதுமக்கள் மீதே குண்டு வீசுகிறோம் என்று எங்களில் அநேகர் நம்பினோம்.

வெடிகுண்டுகள் இருக்குமிடத்தை விமான ஓட்டி திறந்தபோது விறுவிறுப்பு அதிகரித்தது. விமான கலத்தின் இரைச்சல் தீவிரமடைந்தது. இதுவே எங்களுடைய அதிக ஆபத்தான கட்டமாக இருந்தது. நான்கு இன்ஜின்களை கொண்ட விமான கலத்தை போன்றே ஏறத்தாழ நீண்டதாக தோன்றிய எங்களுடைய குண்டு இப்பொழுது வெளியே தயாராக இருந்தது. பல வண்ணங்களில் சென்றவழியே புகைப்படலம் விட்டு செல்லும் துப்பாக்கி குண்டுகள் விண்வெளியில் ஒரு வளைவை ஏற்படுத்தியவாறு சென்றது. ஏதாவதொன்று அந்த குண்டை மோதுமானால் நாங்கள் அவ்வளவுதான் உயிரிழந்துவிடுவோம்!

குண்டை குறிபார்ப்பவர் இப்பொழுது விமானத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்தினார். குண்டு வீசப்பட வேண்டிய இடத்தை சுட்டிக் காட்டி விமான இயக்குநருக்கு கட்டளைகள் கொடுத்தார்: “இடது.இடது பக்கம்; வலது-வலது பக்கம் சீராக; கொஞ்சம் இடது பக்கம்—அதேநிலையில்—சீராக—சரியாக இருக்கிறது. குண்டை வீசிவிடு!” விமான கலத்திலிருந்து நான்கு டன் குண்டு கீழே விழுந்தபோது விமானம் அதிர்ந்தது. “உஷ்” என்ற சப்தத்தை நான் கேட்டேன். முடிவுறாத அந்த நிமிடம் கடந்து சென்றது. நாங்கள் குண்டு வீசின அந்த இடத்தை புகைப்பட விளக்கொளி பிரகாசிக்க செய்யும் வரையில் காத்திருந்தோம். நாசமாக்கப்பட்ட அந்த இடம் புகைப்படமெடுக்கப்பட்ட உடனே நாங்கள் வீடு திரும்ப புறப்பட்டோம்.

மனச்சாட்சியின் உறுத்தல்கள்

நாங்கள் செங்குத்தாய் மேல்நோக்கி பறந்து திரும்பியபோது கீழே காணப்பட்ட கொலோன் நகரம் முழுவதும் தீப்பற்றி எரிவதை என்னால் பார்க்க முடிந்தது. தங்கள் உயிரை இழந்த ஆண்கள் பெண்கள் மற்றும் பிள்ளைகள் ஆகியோரைப்பற்றி நான் யோசித்தேன். “இந்த மாபெரும் நகரத்திலிருக்கும் ஆயிரக்கணக்கான குற்றமற்ற குடிமக்களை படுகொலை செய்வதில் நான் ஏன் பங்குகொள்கிறேன்?” என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். அது அடால்ஃப் ஹிட்லரின் துன்மார்க்க ஆட்சிக்கெதிரான போர் என்ற எண்ணத்தில் நான் என்னை ஆறுதல் படுத்திக்கொள்ள முயன்றேன்.

நாங்கள் வீடு திரும்புகையில் என்னுடைய 60 குண்டு வீச்சு பணியின்போது என்னை மீண்டும் மீண்டுமாக தொல்லைப்படுத்திய அந்த நினைவுகளுக்கு திரும்பி செல்ல வேண்டியதாக இருந்தது. லிங்கன் இங்கிலாந்துக்கு அருகில் ஒரு விமானதாக்கு புகலிடத்தின் மீது போரின் ஆரம்பத்தில் ஒரே ஒரு ஜெர்மன் விமானகலம் அதன் நீள் தொடர் தொகுதியான குண்டுகளை எறிந்தது. அந்த புகலிடத்தில் தங்கியிருந்த ஒரு பெண்ணின் சிதைந்துபோன உடலின் பாகங்களை வெளியே எடுப்பதற்கு நான் உதவினேன். பல மாதங்களாக இதைப்பற்றிய கோரக்கனவுகளைக் கொண்டிருந்தேன். மிகத்திரளான ஜனத்தொகையுள்ள நாடான கொலோன் மீது ஆயிரக்கணக்கான குண்டுகள் வெடித்ததன் காரணமாக இன்றிரவு எத்தனை தடவைகள் இப்படிப்பட்ட பயங்கரங்கள் திரும்ப திரும்ப வந்தன? மேலும் இப்படிப்பட்ட பயங்கரமான வேலையை கடவுள் எப்படி கருதுகிறார்? என்பதை நான் இப்பொழுது சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

இதை குறித்து நான் அடிக்கடி சிந்தனை செய்வதற்கு காரணம், நான் இன்வெர்னஸ் ஸ்காட்லாந்தில் ஒரு மதபற்றுள்ள பிண்ணனியிலிருந்து வந்தவன். ஸ்காட்லாந்து சர்ச்சில் என் குடும்பத்தினர் நீண்டகால அங்கத்தினர். நான் ஞாயிற்றுகிழமை வேதபாட பள்ளியில் ஆசிரியராகவும் சர்ச்சின் இளைஞர் ஐக்கிய குழுவின் தலைவனாகவும் இருந்து வந்திருக்கிறேன். சனிக்கிழமை மாலை வேளைகளில் எங்களில் ஒரு தொகுதியினர் இன்வெர்னஸ் டவுன் ஹால் முனையில் நின்றுகொண்டு எங்களுடைய விசுவாசத்தைக் குறித்து ஒரு பொதுசாட்சி கொடுப்பது வழக்கம். இப்படிப்பட்ட சமயங்களில், நான் மத உணர்ச்சி வேகத்தாலும் ஒரு ஊழியனாக வேண்டும் என்ற ஆசையாலும் நிறைந்திருந்தேன்.

“கடவுள் யார் சார்பாக இருக்கிறார்?”

அந்த ஆறு ஆண்டுகால (1939-1945) போர் சமயத்தில் நான் படைப்பிரிவிலிருந்த தனி மத குருக்களிடம் அடிக்கடி பேசி அவர்களிடம், “இந்த போரில் கடவுள் யார் பக்கம் இருக்கிறார்?” என்று நான் கேட்டேன். “நம்முடைய பக்கம்தான்!” என்ற ஒரே பதிலையே கொடுத்தார்கள். “உலக ஆதிக்கத்திற்காக உள்ள ஒரு பொல்லாத கொடுங்கோலாட்சியை நாம் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய கிறிஸ்தவ படை மட்டுமே அதை ஒழிக்க முடியும்!” என்றபோதிலும் இது என்னை திருப்திபடுத்தவில்லை.

ஒருநாள் நான் படையணிப் பிரிவின் கத்தோலிக்க பாதிரியோடு அதிகாரிகளின் உணவருந்துமிடத்தில் உட்கார்ந்தேன். நான் அவரிடம்: “பாதிரி அவர்களே, நம்முடைய விண் கலத்தில் நமது குழு அங்கத்தினரில் ஒருவன் கத்தோலிக்கன் ஜெர்மனியின் மீது குண்டு வீசும் பணியில் நாங்கள் செல்வதற்கு முன்பு நீர் அவனை ஆசீர்வதிக்கிறீர். இப்பொது நமது நாட்டை நாசஞ்செய்ய வரக்கூடிய ஒரு ஜெர்மானிய விமானத்தில் கத்தோலிக்க குழுவினரை ஜெர்மனியிலுள்ள கத்தோலிக்க மதம் ஆசீர்வதித்து அனுப்புகிறது. எனவே நான் கேட்கும் கேள்வி என்னவெனில் ‘கடவுள் யார் பக்கம் இருக்கிறார்?’”என்று கேட்டேன்.

“அது கடினமான ஒரு கேள்வியாயிற்றே” என்று பதிலளித்தார். “ஹிட்லர் உலகத்தை ஆளுவதற்கு நாம் அனுமதித்தால் அவ்விடத்தில் உனக்கும் எனக்கும் அல்லது எந்த ஒரு கிறிஸ்தவனுக்கும் இடமே இருக்காது. எனக்கு தெரிந்ததெல்லாம் இதுவே,” என்றார் அவர். இதுவும்கூட என் கேள்விக்கு விடையளிக்கவில்லை. வேறு வழியில்லாமல் நான் பின்வருமாறு யோசித்தேன்: “அப்படியானால் ஜெர்மன் கத்தோலிக்கர்களும் அவர்களுடைய சர்ச்சும் ஏன் ஹிட்லருக்கு ஆதரவு கொடுப்பதிலிருந்து பின்வாங்கவில்லை?” போர் முடியும் வரையில் என் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

மே 18, 1945-ல் லண்டன் பக்கிங்ஹாம் மாளிகையில் ஜார்ஜ் VI அரசர் முன்பாக நின்றேன். ஐரோப்பாவில் மிக பலத்த தற்காப்புள்ள தொழிற்சாலை மற்றும் நகரங்கள் ஆகிய குறியிலக்குகள் மீது சுமார் 60-க்கு மேற்பட்ட குண்டு வீச்சு பணிகளை நான் பூர்த்தி செய்துவிட்டதன் காரணமாக சிறப்படையாளமாக விளங்கும் பறக்கும் சிலுவையை (Flying Cross) பெற்றேன். நகரங்கள் பட்டணங்கள் மற்றும் உயிர்கள் ஆகியவற்றை அழித்ததற்காக ஒரு பதக்கம்! தங்களுடைய இரண்டாவது சுற்று பணியை முடித்துவிட்டு திரும்பிய 13 படைப்பிரிவு அங்கத்தினர் மத்தியில் நான் ஒருவன் மட்டுமே சிறிதும் காயமுறாமல் திரும்பி வந்தேன்.

பின்பு அந்த ஆண்டில் நான் படைத்துறையினின்று விடுப்பு பெற்று இங்கிலாந்து டான்காஸ்டர் பட்டணத்தில் என் மனைவியோடும் எங்கள் இளம் மகனோடும் குடியேறினேன். இந்த காலப்பகுதியின் போதுதான் நான் மிதமிஞ்சி மனசோர்வடைந்தேன். மனவுறுதியை இழுந்தேன். ஜெர்மனி, மற்றும் இத்தாலி மீது நடத்தப்பட்ட எங்களுடைய குண்டு வீச்சுகளில் மக்களை கொல்லுவதற்கு நான் வகித்த எல்லா பாகமும் எனக்கு நடுக்க உணர்ச்சியை ஏற்படுத்தியது. நான் என்னையே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டது என்னவெனில் ‘கடவுள் என்னை மன்னிப்பாரா?’ நான் அடிக்கடி மன்னிப்புக்காக ஜெபித்தேன்.

மதிய உணவு குறுக்கிடப்பட்டது

ஒருநாள் நான் என் மதிய உணவை அருந்தி கொண்டிருந்தபோது வீட்டின் மணியோசை கேட்டது. அதை விசாரிக்க என் மனைவி எழுந்து சென்றாள். அங்கே கதவண்டையிலே அவள் சிறிதுநேரம் இருந்துவிட்டாள். மறுபடியும் எனக்கு உணவு பரிமாற அவள் இல்லாமையால் நான் பொறுமையை இழந்தேன். எனவே மேசையிலிருந்து கோபமாக எழுந்துசென்று அவள் ஒரு மனிதனோடு உரையாடிக் கொண்டிருந்த உரையடலில் “இதெல்லாம் என்ன?” என்று அதிக மூர்க்கமாக குறுக்கிட்டேன்.

“உங்கள் மனைவி கடவுளே சத்தியபரர் (Let God Be True) என்ற இந்த ஆங்கில புத்தகத்தில் ஆர்வமாயிருக்கிறாள்” என்று அந்த மனிதன் தயவுடன் பதிலளித்தான். “நான் ஒரு யெகோவாவின் சாட்சி, நான் உங்கள் அயலகத்தார் அனைவரையும் சந்தித்து வருகிறேன்” என்றான் அவன்.

“நன்றி, வேண்டாம்!” என்று கோபமாக பதிலுரைத்தேன். அவன் யெகோவாவின் சாட்சி என்று சொன்னதுதானே என்னை எரிச்சல்படுத்தியது. “இவர்கள் நம்முடைய யுத்தத்தில் பங்குபெறாத ஆட்கள், ஆனால் எங்களுடைய கப்பலோட்டிகளால் கொண்டுவரப்படும் நமது உணவை மட்டும் சாப்பிடுவதில் திருப்தியடையும் ஆட்கள்! அவர்கள் மீது எங்களுக்கு அக்கறையில்லை,” என்று சொன்னேன்.

“சரி சார்,” என்று கதவண்டை இருந்த அந்த மனிதன் அதிக சாந்தமான குரலில் பதிலுரைத்தான். “ஒரு காரியத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். யுத்த காலத்தின்போது யெகோவாவின் சாட்சிகள் எங்கெல்லாம் வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் அவர்கள் நடுநிலை வகித்தார்கள். அதில் பங்குகொள்ளவில்லை. என்றபோதிலும் நீங்கள் அறிந்திருக்கிறபடி அதே யுத்தத்தில் புராட்டஸ்டாண்டினர் புராட்டஸ்டாண்டினரையும், கத்தோலிக்கர் கத்தோலிக்கரையும் எந்தவித மனசாட்சியின் உறுத்தலுமில்லாமல் கொன்றனர். ஆனால் அவ்விஷயத்தில் யெகோவாவின் சாட்சிகள் ஒருவரையொருவர் கொல்வதில்லை, அல்லது வேறு எவரையும்கூட கொல்லுவதில்லை.”

கடவுள் இருக்கும் பக்கம்

அவருடைய பதில் யுத்த காலத்தில் நான் கேட்ட கேள்விக்கு என் மனதை திருப்பிக்கொண்டு சென்றது. “கடவுள் யார் பக்கம் இருக்கிறார்?” எனவே இந்த கேள்வியை நான் அவரிடம் கேட்டேன்.

“நல்லது, அது அதிக சுலபமான கேள்வி” என்று அவர் பதிலளித்தார். யோவான் 13:34, 35 எனக்கு காண்பித்து அதை வாசித்தார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.”

“தெளிவாகவே, நாம் உண்மையிலேயே ஒருவரையொருவர் நேசிப்போமேயானால் நாம் எங்கு வாழ்ந்தாலும் அரசியல்வாதிகள் என்ன சொன்னாலும் நாம் ஒருவரையொருவர் நிச்சயமாகவே கொல்ல மாட்டோம். யுத்தத்தில் பங்குபெறாமல் நடுநிலை வகித்ததன் காரணமாக ஜெர்மனியில் கான்சென்ட்ரேஷன் முகாம்களில் அநேகர் மரித்தபோதிலும் மேலும் என்னைப்போன்று பலர் இந்த நாட்டில் சிறையிலடைக்கப்பட்ட போதிலும் யெகோவாவின் சாட்சிகள் இயேசுவின் அந்த கட்டளைகளை பின்பற்றுகின்றனர். உண்மையிலேயே ஒருவரையொருவர் நேசிக்கும் ஆட்கள் பக்கமாகவே கடவுள் இருக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம்.”

அவர் நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசினார். எனவே நாங்கள் அந்த புத்தகத்தை ஏற்றுக்கொண்டோம். நானும் என் மனைவியும் படுக்கைமீது அமர்ந்து விடியும்வரையில் அந்த புத்தகத்தை வாசித்து அதிலுள்ள வேத வசனங்களை எடுத்துப் பார்த்தோம். போர்கள் அதாவது நான் கலந்துகொண்ட உலக போரை போன்றவைகள் ஒரு அடையாளத்தின் பாகமாக இருக்கிறதென்றும், கடவுளுடைய அரசாங்கம் விரைவில் இந்த கொடுங்கோலாட்சிக்கும் ஒரு முடிவை ஏற்படுத்தி இந்த பூமியை கிறிஸ்தவர்கள் வாழ்வதற்குரிய சமாதானமுள்ள இடமாக மாற்றுவதற்குரிய நிரூபணமாக இருக்கிறதென்றும் கற்றுக் கொண்டோம்.—மத்தேயு 24:3-14.

சுமார் ஒரு வாரத்துக்கு பின்பு புத்தகத்தையும் தன் விலாசத்தையும் விட்டு சென்ற மனிதனுக்கு நாங்கள் கடிதம் எழுதி வரவழைத்தோம். அவரிடம் கேட்பதற்கு எங்களிடம் அநேக கேள்விகள் இருந்தன. அநேக நாட்களுக்கு பின்பு அவர் திரும்பிவந்தார். அவரோடு வேதத்தைப் படிக்க ஆரம்பித்தோம். இரண்டாம் படிப்பிற்கு பின்பு யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்கு ஆஜரானோம். இறுதியில் நானும் என் மனைவியும் 1948-ல் முழுக்காட்டுதல் பெற்றோம்.

ஒரு வித்தியாசப்பட்ட உச்ச உயர்வான சேவை

தொடர்ந்துவந்த ஆண்டுகளினூடே என் மனைவியும் நானும் முழுநேர ஊழியர்களாக சேவை செய்யும் ஆசையை எங்கள் முன்னால் கொண்டிருந்தோம். தென் அமெரிக்காவில் எங்கள் மகன் மிஷனரியாக ஆனபோது எங்கள் ஆசை இன்னும் அதிக பலமாக ஆனது. ஆனால் இதை செய்வது ஒரு பெரிய தீர்மானமாக இருந்தது. ஏனெனில் இதற்குள்ளாக நாங்கள் அதிக செளகரியமான நிலையிலிருந்தோம்; எங்களுக்கு ஒரு நல்ல சொந்த வீடு இருந்தது. நல்ல சம்பளம் கிடைக்கக்கூடிய தொழிலும் இருந்தது. இனிமேலும் நாங்கள் இளமையில் இல்லை. நாங்கள் எங்கள் உடல்நிலை பிரச்னைகளை பகிர்ந்துகொள்ள வேண்டியவர்களாக இருந்தோம். என்றபோதிலும் உண்மையில் இன்னும் அதிகத்தை நாங்கள் செய்யக்கூடும் என்பதை நான் அறிந்திருந்தேன்.

அதிக ஜெப சிந்தையோடு ஆலோசித்த பின்பு தீர்மானம் எடுக்கப்பட்டது. வீடு விற்கப்பட்டது, கண்ணீர் வடித்தோம். காரணம் 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்த வீட்டில் வசித்து வந்தோம். எனவே ஜூன் 1973-ல் லாபாஸ் (Lapaz) விமான நிலையத்தை நோக்கி, பொலிவியாவின் தரிசு நிலமான ஆல்டிப் பிளானோவின் மீது பறந்து கொண்டிருந்தோம்.

என் மகனும் அவனுடைய மனைவியும் எங்களை சந்திக்க காத்திருந்தார்கள். விமான நிலையத்தை விட்டு புறப்பட்ட சில நிமிடங்களில் நாங்கள் சற்று நின்றோம். எங்களுக்கு முன்னே நான் இதுவரையிலும் பார்த்திராத என்னே ஒரு கண்ணைக் கவரும் காட்சி. லாபாஸ்-ன் தலைநகரமானது ஆழமான கிண்ணத்தைபோன்ற சந்திர மண்டலத்தின் மேற்பறப்பில் காணப்படும் குழிகளைப் போன்ற ஒரு பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது. தட்டையான ஆல்டிப்பிளானோ மட்டத்திற்கு 1000 அடி கீழே இருக்கிறது. அது பொழுதுசாயும் வேளையாக இருந்தது. எங்களுக்கு கீழே நகரமுழுவதிலுமுள்ள விளக்கொளியின் மின்னலை நாங்கள் பார்க்க முடிந்தது. அதற்கும் மேலாக பனியால் மூடப்பட்டிருந்த இல்லிமனி மலை மாலை கதிரவனின் கடைசி ஒளிக்கதிரை பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

தேசீய மதிப்பு வாய்ந்த விமானப்படையில் நானிருந்த நாட்களில் 10,000 அடி உயரே பறக்கும்போது எப்பொழுதுமே பிராணவாயுவை பயன்படுத்தும்படி கற்பிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் இங்கேயோ நாங்கள் 12,000 அடி உயரமுள்ள ஒரு உச்சியில் வசிக்கப் போகிறோம்—எந்த பிராணவாயு முகத்திரையும் இல்லாமல்! வீட்டுக்கு வீடு ஊழியத்தின்போது லாபாஸ்-ன் செங்குத்தான மலைகளில் ஏறுகையில் காற்று மண்டலத்தின் அபூர்வ ஊட்டத்தால் நாங்கள் பிராணவாயுவுக்காக ஏக்கமுற்றோம். ஆ, என்னே ஒரு போராட்டம்! ஆனால் ஏறத்தாழ தொடர்ச்சியான சூரிய ஒளியும் எப்பொழுதுமே ஆண்டிஸ் மலையின் பனியால் மூடப்பட்ட உயரமான உச்சிகளின் காட்சியில் இருப்பதும் அதிக மகிழ்வூட்டுவதாயிருக்கிறது!

என்றபோதிலும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்திக்கு மக்கள் காட்டும் மிகுதியான ஆர்வம் அதை காட்டிலும் அதிக மகிழ்வூட்டுவதாயிருந்தது. முதலில் ஸ்பானிய மொழியில் என்ன சொல்வது என்பதை நினைவில் வைப்பதற்கு உதவியாக நான் சொல்ல விரும்பின செய்தியை ஒரு அட்டையில் எழுதிக் கொண்டேன். ஆனால் அங்கு நான் செலவிட்ட 12 ஆண்டுகளுக்கு பின்பு ஸ்பானிய மொழியில் ஒரு பொதுப்பேச்சை கொடுக்க முடிந்தது. மேலும் ஒரு சபையின் மூப்பராகவும் சேவிக்க முடிந்தது. ஆண்டுகளினூடே நாங்கள் சில இன்பகரமான அனுபவங்களை கொண்டிருந்தோம். அதாவது நாங்கள் பைபிளைக் கற்றுக்கொடுத்த 20 ஆட்கள் முழுக்காட்டுதல் பெற்றார்கள். என்றபோதிலும் ஆரோக்கிய குறைவின் காரணமாக நானும் என் மனைவியும் இங்கிலாந்திற்கு திரும்ப வேண்டியதாயிற்று. அங்கே நாங்கள் கடவுளுடைய ராஜ்யத்தை குறித்து மற்றவர்களிடம் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.

நாங்கள் கொலோன் மீது குண்டு வீசிய அந்த பயங்கரமான இரவை நான் எண்ணிப் பார்க்கையில் நான் ஏற்படுத்திய அழிவும் மற்றும் வேதனைகளும் நினைவுக்கு வந்து இன்னமும் என்னை சஞ்சலப்படுத்துகிறது. ‘போரில் ஈடுபடுகிறவர்களை கடவுள் உண்மையில் ஆசீர்வதிக்கிறாரா?’ என்று நான் எப்பொழுதுமே யோசித்ததுண்டு. தேசங்கள் போரில் ஈடுபடும்போது கடவுள் எந்த பக்கத்திலும் இல்லை என்பதை அறிந்துகொண்ட நான் அதிக நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மாறாக அந்த சாட்சி எனக்கு விளக்கிகூறியபடி, “உண்மையாகவே ஒருவரையொருவர் நேசிக்கக்கூடியவர்கள் பக்கமாகவே கடவுள் இருக்கிறார்.” (யோவான் 13:34, 35)—டேவிட் வாக்கர் கூறியபடி. (g85 12/8)

[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]

விமானம் அதிர்ந்தது, நான்கு டன் எடையுடைய வெடிகுண்டு “உஷ்” என்ற சப்தத்துடன் விமானத்திலிருந்து விழுந்தது

[பக்கம் 20-ன் பெட்டி]

என்னுடைய 60 போர் விமானப் பயணங்களில் கொலோன் ஒரு குறியாக இருந்தது

[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]

ஆயிரம் போர் விமானங்கள் வெடிகுண்டுகளைத் தாங்கியவையாய் கொலோனுக்குப் புறப்பட்டன

[படத்திற்கான நன்றி]

RAF Museums, London

[பக்கம் 20-ன் சிறு குறிப்பு]

‘இந்தப் பிரமாண்டமான பட்டணத்தில் ஆயிரக்கணக்கான குற்றமற்ற குடிமக்களைக் கொல்லுவதில் நான் ஏன் பங்குகொள்கிறேன்?’ என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.

[படத்திற்கான நன்றி]

U.S. Army photo

[பக்கம் 21-ன் பெட்டி]

இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது தனது மனைவி பார்பராவுடனும் மகனுடனும் வாக்கர்

[படத்திற்கான நன்றி]

“Topical” Press Agency, LTD., London

[பக்கம் 23-ன் பெட்டி]

டேவிட் வாக்கரும் அவருடைய மனைவியும் பொலிவியா நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்