உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g87 2/8 பக். 16-19
  • மதுபானமும் வாகனம் ஓட்டுவதும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மதுபானமும் வாகனம் ஓட்டுவதும்
  • விழித்தெழு!—1987
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மதுபானமும் பார்வையும்
  • மதுபானமும் தீர்மானமும்
  • மதுபானமும் பிரதிபலிப்புகளும்
  • இரத்தத்தில் மதுபானத்தின் அளவும் நடத்தையும்
  • மதுபானமும் நீங்களும்
    விழித்தெழு!—1987
  • குடிப்பழக்கமும் ஆரோக்கியமும்
    விழித்தெழு!—2005
  • மதுபானத்தைப் பற்றி பிள்ளைகளிடம் பேசுங்கள்
    குடும்ப ஸ்பெஷல்
  • குடித்தல்—ஏன் கூடாது?
    இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1987
g87 2/8 பக். 16-19

மதுபானமும் வாகனம் ஓட்டுவதும்

ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து என்ஜினை இயக்குகிறீர்கள், புறப்பட்டு செல்கிறீர்கள். வாகனத்தை ஓட்டுவது உங்களுக்கு பல வருட அனுபவமாக இருக்குமானால் அது ஒருவேளை அவ்வளவு பெரிய காரியமாக இருக்காமலிருக்கக் கூடும். ஆனால் அது அவ்வளவு சாதாரணமான காரியம் அல்ல.

நீங்கள் ஓட்டிச்செல்லும் ஒவ்வொரு மைல் தூரத்துக்கும் நீங்கள் சாதாரணமான சூழ்நிலையில் 20 முக்கியமான தீர்மானங்களை செய்யவேண்டியிருக்கிறது என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. மற்ற வாகனங்கள் சம்பந்தமாக நீங்கள் பார்க்கும் கேட்கும் காரியங்கள் சார்ந்த தீர்மானங்கள், சாலை போக்குவரத்து விதிகள், வாகனத்தை நிறுத்துவதை உட்படுத்தும் நடைபாதை மக்களின் செயல்களை நிதானித்தல், ஆக்ஸலரேட்டர், கிளச் மற்றும் ஓட்டுதல் போன்ற தீர்மானங்களை உட்படுத்துகிறது. தீர்மானம் எடுப்பதற்கு உங்களுக்கு அதிக நேரம் இருப்பதில்லை,—அநேகமாக ஒரு வினாடிக்குள் தீர்மானங்களை எடுக்கவேண்டியதாயிருக்கும்.

ஆக வாகனங்களை ஓட்டுதல் தீர்மானங்களுக்கும் செயல்களுக்குமிடையே ஒத்திசைவை தேவைப்படுத்துகிறது. இந்த வாகன ஓட்டுதலை மதுபானம் அதிக ஆபத்தான ஒன்றாக ஆக்குகிறது. ஏன்? ஏனென்றால் அவன் பத்திரமாக ஓட்டும் திறமையை குறிப்பிடத்தக்கவிதத்தில் பல வழிகளில் பாதிக்கிறது.—“இரத்தத்தில் மதுபானத்தின் அளவும் நடத்தையும்” என்ற பக்கம் 18-லுள்ள பெட்டியைப் பார்க்கவும்.

மதுபானமும் பார்வையும்

நீங்கள் வாகனத்தை ஓட்டும்போது, சாலை போக்குவரத்து நிலவரம் குறித்த 85 முதல் 90 சதவிகித செய்தி கண்கள் மூலமாகக் கிடைக்கப்பெறுகிறது. உங்களுடைய பார்வை, உங்களுடைய பார்வை, உங்களுடைய கண்களை அசையச்செய்து குறிப்பிட்ட காரியத்தைப் பார்க்கச்செய்யும் ஒரு மென்மையான தசை மண்டலத்தால் இயக்கவிக்கப்படுகிறது. மதுபானம் இந்தத் தசைகளின் செயலைத் தாமதப்படுத்திப் பார்வையைப் பல வழிகளில் பாதிக்கிறது.

ஒன்று விழித்திரைக்குச் செல்லும் ஒளி அளவைக் கட்டுப்படுத்தும் கண்களின் திறமையை மதுபானம் மட்டுப்படுத்திவிடுகிறது இது விஷேசமாக இரவு சமயங்களில் நிலைமையைக் கடினமாக்கிவிடுகிறது. ஏன்? ஏனென்றால் எதிரே வந்துகொண்டிருக்கும் வாகனங்களின் விளக்கு ஒளிக்கு கண்கள் பழகிக்கொன்வதற்கு நேரம் இருக்கிறது. அமெரிக்க வாகனக் கழகத்தால் விநியோகிக்கப்பட்ட மதுபானமும், பார்வையும் ஓட்டுவதும் என்று பிரதி பின்வருமாறு விவரிக்கிறது: “எதிரே வந்துகொண்டிருக்கும் வாகனங்களின் விளக்கு ஒளிக்குக் கண்பார்வை தன்னை பக்குவப்படுத்திக்கொள்வதற்கு ஒரு வினாடி எடுக்கிறது மீண்டும் அந்தக் கண்பார்வை வெளிச்சத்தைப் பார்த்தபின்பு இருண்ட சூழ்நிலைக்குத் தன்னை பக்குவப்படுத்திக்கொள்வதற்கு ஏழு வினாடிகள் ஆகின்றன. இப்படியாக அது பழைய நிலைக்குவரும் செயல் தாமதப்படுகிறது.

இதில் உட்பட்டிருக்கும் அபாயத்தை சிந்தித்துப் பாருங்கள்: இரவு நேரம் வளைந்து வளைந்து செல்லும் ஒரு நெடுஞ்சாலையில் வாகனத்தை ஓட்டிச் செல்கிறீர்கள்—சாலையின் ஒரு பக்கத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். சாலையின் இருபக்கங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் எதிரே வரும் வாகனங்களின் விளக்கு ஒளி கண்ணைக் குருடாக்குகிறது. எதிரே வரும்வாகன ஓட்டி குடித்திருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்களானால் எந்தளவுக்குப் பாதுகாப்பாக உணருவீர்கள்.

கண்களின் பக்க பார்வைத் திறனையும் மதுபானம் மட்டுப்படுத்திவிடுகிறது. அதாவது நேராக எதிரில் பார்த்துக்கொண்டிருக்கும் உங்கள் இரு பக்கங்களில் நடப்பதை உணரும் திறனை மட்டுப்படுத்துகிறது. விசேஷமாக மதுபானத்தையும் அதிவேகமாக ஓட்டுவதையும் ஒன்று சேர்ப்பது அதிக ஆபத்தானது. மது பானமும், பார்வையும், ஓட்டுவதும் பின்வருமாறு விவரிக்கிறது: “மணிக்கு 30 மைல் (48 கி.மீ.) வேகத்தில் வாகனத்தை ஓட்டும்போது ஓட்டுநர் தனது பக்க பார்வையை 25% குறைத்துக்கொள்கிறார் என்பதை அநேக ஓட்டுநர்கள் உணரத் தவறுகின்றனர். மணிக்கு 45 மைல் (72 கி. மீ.) வேகத்தில் ஓட்டும்போது பக்க பார்வை 50% குறைத்துக்கொள்கிறான். மணிக்கு 60 மைல் (97 கி.மீ.) வேகத்தில் ஓட்டும்போது அவன் ஒரு ‘கற்பனைக் குகையில்’ ஓட்டிச்செல்கிறான்.”

மதுபானம் அருந்திய ஒரு வாகன ஓட்டி குறுக்குச் சாலைகளில் அல்லது திடீரென்று ஒரு குழந்தை குறுக்கேவரும் வாய்ப்புகள் மிகுந்த நிறுத்தப்பட்ட வாகனங்களை வேகமாகக் கடந்து செல்லும்போது விளைவுகள் என்னவாக இருக்கக்கூடும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்.

மேலும், மதுபானம் இரட்டைப் பார்வையை ஏற்படுத்தக்கூடும், அதாவது தனக்கு எதிரே ஒரு கார் வந்துகொண்டிருக்க அதை இரட்டையாக பார்க்கக்கூடும். அத்துடன், தூரத்தை நிதானிக்கும் திறமையை மட்டுப்படுத்தவும் கூடும். இவற்றைக் கவனிக்கும்போது, எண்ணையும் தண்ணீரும் எப்படி ஒன்று சேராதோ, அதுபோல மதுபானமும் வாகனம் ஓட்டுவதும் ஒன்று சேரமுடியாது. ஆம், பைபிள் சரியாகவே பின்வருமாறு சொல்கிறது: “யாருக்கு இரத்தங்களின் கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கே.”

ஆனால் உங்களை சுற்றியிருக்கும் போக்குவரத்து நிலையை சரியாக பார்ப்பது என்பது, ஒரு வாகனத்தை பத்திரமாக ஓட்டுவதில் உட்பட்டிருக்கும் ஒரு அம்சம்தான்.

மதுபானமும் தீர்மானமும்

போக்குவரத்து நிலையை பார்க்கும் நீங்கள் உடனே தீர்மானிக்கவேண்டும், நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்பதை தீர்மானிக்கவேண்டும். உதாரணமாக, இரு வழி பாதையில் நீங்கள் சென்றுகொண்டிருந்தால், உங்களுக்கு முன்பு செல்லும் வாகனம் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தால், அதைக் கடந்துசெல்ல நினைத்தால் பத்திரமாக எப்பொழுது கடக்கவேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்திலும் மதுபானம் அதிக ஆபத்தானதாக இருக்கக்கூடும். எப்படி? ஒரு மதுபானம் அருந்திய வாகன ஓட்டியின் இரத்தத்தில் மதுபான அளவு பெருகும்போது, அவனுடைய தன்னம்பிக்கையும் பெருகுகிறது. மதுபானமும் மதுபான விபத்துதவிர்ப்பும் என்ற பிரதி பின்வருமாறு கூறுகிறது: “இந்த நிலையில் (இரத்தத்தில் சாராயச்சத்து .04 முதல் .06 சதவிகிதம்) இருக்கும் ஒருவர் தான் அதிக கவனமுள்ளவராக இருப்பதாகவும் எப்பொழுதும் இருப்பதைவிட அதிக திறமையுடையவராக இருப்பதாகவும் உணரக்கூடும்; பிரதிபலிக்கும் நேரம், தீர்மானித்தல் மற்றும் அவசர நிலைக்குப் பிரதிபலிக்கும் தன் திறமை ஆகியவற்றில் குறைவுபட்டிருந்தாலும் அப்படி உணரக்கூடும். இப்படியாக செயல்படும் விஷயத்தில் அவருடைய உண்மையான திறமை குறைவுபட, இந்தத் திறமையில் அவருடைய நம்பிக்கை அதிகரிக்கிறது.”—நீதிமொழிகள் 20:1;23:29-35.

இதன் பலனாக, முன் நிற்கும் அல்லது செல்லும் வாகனத்தைக் கடப்பதில் அல்லது வேகமாகச் செல்வதில் மதுபானம் அருந்திய ஓட்டுநர் அதிக அனுபவமற்றவராக இருந்தால் அல்லது நன்கு ஓட்டுபவராக இல்லாவிட்டால், தீர்மானமெடுப்பதில் சிறிய தவறும்கூட அதிக ஆபத்தானதாக இருக்கக்கூடும்.

மதுபானமும் பிரதிபலிப்புகளும்

மதுபானம் அருந்திய ஓட்டுநர் பார்வையில் பிரச்னைகள் எதிர்பட்டு அதிக ஆபத்தானவிதத்தில் ஓட்டும் நிலைக்குள்ளாவதே மோசம். இதை இன்னும் அதிக மோசமாக்கும் காரியம். மதுபானம் அவனுடைய பிரதிபலிப்பு நேரத்தை தாமதப்படுத்துகிறது. இதனால். தனது காலை ஆக்ஸலரேட்டரிலிருந்து அல்லது வேக மிதியிலிருந்து நிறுத்துவதற்குரிய தடைமிதிக்கும் மாற்ற ஒரு வினாடி கூடிவிடுகிறது.

அதில் எவ்வளவு ஆபத்து இருக்கிறது என்பதை விளக்கிக்காட்ட, ஒரு மணி நேரத்திற்குள்ளாக இரண்டு 12 அவுன்ஸ் பியர் அருந்தியிருந்தால், உங்களுடைய பிரதிபலிப்பு வேகம் 0.4 வினாடியாக குறையக்கூடும். அது அவ்வளவு பெரியதாகக் தோன்றாமலிருக்கலாம். ஆனால் அந்த அறிக்கை குறிப்பிடுவதாவது: 0.4 வினாடியில், மணிக்கு 55 மைல் (90 கி.மி.) வேகத்தில் செல்லும் வாகனம் கூடுதலாக 34 அடிகள் (10.4 மீ) செல்லும்! ஏன், அது சற்று தப்பிய விபத்துக்கும் கடுமையான விபத்துக்குமுள்ள வித்தியாசமாக இருக்கக்கூடும்.

மதுபானம் எப்படி ஒருவருடைய பார்வையையும், தீர்மானத்தையும், பிரதிபலிப்பையும் பாதிக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கும்போது, மதுபானம் குடிப்பதும் வாகனம் ஓட்டுவதும் எந்தளவுக்கு ஆபத்தான ஒரு உறவிலிருக்கிறது என்பதை நீங்கள் மிக எளிதில் காணலாம். ஆனால் பிரச்னையைக் குறித்து என்ன செய்யலாம். அதிகமாகக் குடித்திருக்கும் ஒரு வாகன ஓட்டுனரிடமிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எப்படி பாதுகாத்துக்கொள்ளலாம்?

[பக்கம் 17-ன் அட்டவணை]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

[பக்கம் 14-ன் பெட்டி]

இரத்தத்தில் மதுபானத்தின் அளவும் நடத்தையும்

ஒருவர் தனது உடல் “எரிக்கக்கூடிய”தைக் காட்டிலும் மிஞ்சிய மதுபானம் அருந்துவரானால் அவருடைய இரத்த ஓட்டத்தில் சாராயச்சத்தின் அளவு அதிகமாகிறது. இதைத்தான் ஆய்வாளர்கள் இரத்தத்தில் சாராயச்சத்தின் அளவு [BAC (blood alcohol content)] என்று குறிப்பிடுகிறார்கள், உதாரணமாக 0.02 சதவிகித BAC என்பது ஒருவருடைய இரத்தத்தில் 0.02 சதவிகித சாராயச்சத்து இருக்கிறது என்பதை அர்த்தப்படுத்துகிறது. இரத்தத்தில் சாராயச்சத்து அதிகரிக்கும் போது அந்த நபருக்கு அதிக போதை ஏற்படுத்துகிறது என்பதைப் பின்வரும் பட்டியல் காண்பிக்கிறது.a

இரத்தத்தில் சாராயச்சத்து 0.02 சகவிகிதம்: இரத்தத்தில் சாராயச்சத்து 0.02 சதவிகிதத்தை எட்டும்போது நிதானிக்கும் அல்லது தீர்மானிக்கும் மையங்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டல மையங்கள், தளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது. இந்நிலை 154 பவுண்டு (170 கிலோ) சராசரி எடையுடைய ஒருவர் 1/2 அவுன்ஸ் [15 c.c.] சாராயம் சாப்பிடுவதால் ஏற்படும். இந்த அளவு தான் சாதாரணமாக ஒரு சமயம் அருந்தும் பியரில், அல்லது விஸ்கியில் அல்லது திராட்சரசத்தில் இருக்கிறது.”—மதுபானமும் மது பான பாதுகாப்பும், தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துப் பாதுகாப்பு நிறுவனத்திற்கும் மதுபான துர்ப்பிரயோகம் மற்றும் குடிவெறிகாரியங்களைக் கையாளும் தேசிய நிறுவனத்தினருக்கு தயாரிக்கப்பட்ட ஓர் சிற்றேடு.

இரத்தத்தில் சாராயச்சத்து 0.05 சதவிகிதம்: “ இரத்தத்தில் சாராயச்சத்து (.04-.05 சதவிகிதம்) கலக்கும்போது ஓட்டும் திறமைகள் பாதிக்கப்படுகிறது; வெறும் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று முறை குடித்ததற்கு பின்பு இந்நிலை ஏற்படுவதை ஒருவர் கவனிக்கக்கூடும்.”-மதுபானமும் ஆரோக்கியமும் குறித்து ஐ.ம காங்கிரஸுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஐந்தாவது விசேஷ அறிக்கை.

சில இடங்களில் வாகனத்தை ஓட்டும் திறமை பாதிக்கப்படும் இந்நிலையிலுள்ளவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

இரத்தத்தில் சாராயச்சத்து 0.01 சதவிகிதம்: “இரத்தத்தில் சாராயச்சத்து 0.10 சதவிகிதமாக இருக்கும்போது, (ஒரு மணி நேரத்தில் சராசரியாக ஐந்து முறை குடிக்கும்போது) தனது செயல்கள்—நடப்பது, கைகளை அசைப்பது, பேசுவது ஒழுங்கற்ற நிலைக்குள்ளாகும். இந்த நிலையில் பார்வை மங்கலாகக்கூடும். அல்லது இரட்டை பார்வையாக ஆகக்கூடும், அப்படியே ஒரு நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுகிறவர் அல்லது நடை பாதையில் நடந்து செல்கிறவர் தனக்கு முன் இருப்பதைத்தான் பார்க்கிறார், தனது இரு பக்கங்களிலும் இருக்கும் அபாயங்களைப் பார்ப்பதில்லை.”—டார்லீன் J. வின்டர் (PH.D.) எழுதிய பெரியவர்களுக்கும் போக்குவரத்து பாதுகாப்புக்கும் மதுபான திட்டத்தலைவருக்குமான துணை ஏடு.

அநேக இடங்களில் குடிவெறியில் வாகனம் ஓட்டுவதற்குக் கைது செய்யும் நிலை இந்நிலையாகவே இருக்கிறது.

ஒருவர் தனது ஓட்டும் திறமைகளை இழந்துபோகும் நிலைக்குக் குடித்து வெறிக்க அவசியமில்லை. ஆக குடிப்பதையும் ஓட்டுவதையும் ஏன் ஒன்று சேர்க்கவேண்டும்? பின்பற்றுவதற்குப் பாதுகாப்பான விதி: நீங்கள் வாகனம் ஓட்டினால் மதுபானம் அருந்தாதீர்கள்; நீங்கள் மதுபானம் அருந்தினால் வாகனம் ஓட்டாதீர்கள்.

[அடிக்குறிப்புகள்]

a இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் காரியங்கள் பொதுவாக இரத்தத்தில் சாராயச்சத்து கலந்திடும் அளவையும் செயல்பாட்டையுமே குறிப்பவை. ஒரே அளவான சாராயச் சத்து வித்தியாசமான ஆட்களில் வித்தியாசமான விளைவை ஏற்படுத்தக்கூடும். இது வயது, பால், வயிற்றிலிருக்கும் உணவு, அருந்தப்படும் மதுபான வகை ஆகியவற்றைப் பொருத்தது. மேலும் அதே அளவு நபரின் மனநிலை, கலைப்பு அல்லது போதை மருந்துகளின் உபயோகம் ஆகியவற்றை சார்ந்து வித்தியாசமான ஆட்களில் சற்று வித்தியாசமான செயல்களை உண்டுபண்ணக்கூடும்.

[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]

உங்களுக்கு எதிரே வரும் வாகனத்தின் ஓட்டுநர் குடித்திருக்கிறார் என்பதை அறிந்திருப்பீர்களானால் நீங்கள் எவ்வளவு பாதுகாப்பாய் இருப்பதாக உணருவீர்கள்?

[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]

உங்களுடைய பிரதிபலிப்புகள் மீது மதுபானத்தின் பாதிப்பு சற்று தப்பிய விபத்துக்கும் கடுமையான விபத்துக்குமுள்ள வித்தியாசத்தைக் குறிக்கக்கூடும்.

[படத்திற்கான நன்றி]

H. Armstrong Roberts

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்