மதுபானம் அருந்துவதும் வாகனம் ஓட்டுவதும்—என்ன செய்யப்படலாம்?
நியார்க்கில் கடற்கரை நகரமாகிய சௌத்ஹம்ப்டன் வாகனங்களை மதுபானம் அருந்திய நிலையில் ஓட்டுவதற்கு எதிராக போர்த்தொடுத்திருக்கிறது. இந்தப் போர் திட்டத்தின் ஒரு பாகம் என்ன? நியமிக்கப்பட்ட ஓட்டுநர் திட்டம். அது எப்படி செயல்படுகிறது? இந்தத் திட்டத்தின் கீழ், ஏதாவது ஒரு உல்லாச தொகுதியாக செல்லும்போது, அன்று மாலை யார் வாகனம் ஓட்டவேண்டும் என்பதை அந்தத் தொகுதியினரே தீர்மானிக்கின்றனர். நகரின் மதுபானவிடுதிகளும் ஹோட்டல்களும் அப்படித் தெரிந்துகொள்ளப்பட்டவருக்கும் “நியமிக்கப்பட்ட ஓட்டுநர்” பட்டன ஒன்றை கொடுக்கிறது.
பின்பு என்ன? இந்தத் திட்டத்தின் செயல் நிர்வாகிகளின் ஒருவராகிய பெட்ரீஷியா நியுமன் விழித்தெழு! நிருபரிடம் பின்வருமாறு விளக்கினார்ச அந்த பட்டனை அணிந்திருக்கும் நபர் மற்றவர்களை அன்று மாலை பரத்திரமாக வீடு சேர்ப்பார் என்ற நம்பிக்கையுடன் போதை தராத பானங்களை இலவசமாகப் பெறும்தகுதியைர் பெறுகிறார்.”
அந்த நகர் இதைவிட அதிகத்தைச் செய்கிறது. மகளிர் சங்கத்தைச் சேர்ந்த நியுமன் தொடர்ந்து கூறுகிறார்: மதுபானம் அருந்திய நிலையில் வாகனம் ஓட்டிய நபரின் பெயரையும் வயதையும் விலாசத்தையும் எமது உள்ளூர் செய்தித்தாள் ஒவ்வொருவாரமும் பிரதானமாக அச்சடிக்கிறது.” பலன்? அவர் தொடர்ந்து கூறுகிறார்: “சாலையில் வாகன ஓட்டுநர்களை கைது செய்தனர், இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்தது. மூன்று காரியங்கள் இணைந்து—சாலையில் வாகனஓட்டுநர்களை சோதனையிடுதல், செய்தித்தாள்களில் பெயர்கள் அச்சடித்தல் மற்றும் நியமிக்கப்பட்ட ஓட்டுநர் திட்டம்-உதவியிருக்கிறது என்று நினைக்கிறேன்.”
இதைத்தான் ஒரு நகர் செய்திருக்கிறது. இப்படிப்பட்ட முயற்சிகள் விபத்துக்களைக் குறைக்கக்கூடும் என்றாலும் பிரச்னையை முழுவதுமாக தீர்த்திடாது என்பது உண்மைதான். இப்படியிருக்கு, உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்? அநேகம் இருக்கின்றன.
மதுபானம் அருந்துவதையும் வாகனம் ஓட்டுவதையும் குறித்து பொறுப்புணர்ச்சியோடிருங்கள்
பைபிள் நீதிமொழி ஒன்று பின்வருமாறு கூறுகிறது: “திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிப்பண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.” (நீதிமொழிகள் 20:1) மதுபான வகைகளை உபயோகிப்பதன் சம்பந்தமாக பொறுப்புணர்ச்சியுள்ள மனநிலைகொண்டவர்களாக இருக்கவேண்சும். நீங்கள் மதுபானம் அருந்தும்போது நடந்ததைக் கண்டு வருத்தப்படவேண்டிய நிலை ஏற்படாதவாறு செயல்படுதலை அது சிபாரிசு செய்கிறது.
பைபிள் மதுபானத் தடையை ஆதரிக்கிறது என்று குறிப்பிடுவதற்காக இது சொல்லப்படவில்லை. மதுபானத்தை அளவோடு பயன்படுத்துவதை இது கண்டனம் செய்வதில்லை. (சங்கீதம் 104:15; 1 தீமோத்தேயு 3:2,3,8) ஆனால் முன்கட்டுரை கான்பித்ததுபோல், ஒருவருடைய வாகனம் ஓட்டும் திறமை பாதிக்கப்படுமளவுக்கு குடித்திருக்கவேண்டிய அவசியமில்லை. எனவே வாகன ஓட்டுநரின் இருக்கையில் அமருவதற்கு முன்பு ஒரு கிறிஸ்தவன் ஜாக்கிரதையாயிருக்கவேண்டும். ஒளிவுமறைவின்றி குறிப்பிட, குடிப்பதையும் ஓட்டுவதையும் ஒன்று சேர்ப்பதிலிருக்கும் ஆபத்தை ஏன் வருவித்துக்கொள்ளவேண்டும்?
பைபிள் காலங்களில் இராஜாக்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆலோசனையிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்: நீதிமொழிகள் 31:4 பின்வருமாறு கூறுகிறது: “[தலைமைத் தாங்குகையில்] திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல. அது ராஜாக்களுக்குத்தகுதியல்ல.” ஏன் இந்த தடை? அடுத்த வசனம் விளக்குகிறது: “மதுபானம் பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புறட்டுவார்கள்.” அது சொல்லுவது என்ன? மதுபானம் அருந்துவதைத் தவிர்ப்பது சரியாக இருக்கும் சமயங்கள் இருக்கக்கூடும், விசேஷமாக, மற்றவர்களுடைய உயிர் சம்பந்தப்பட்டகாரியங்களில் நேரடியாக சம்பந்தப்படும் சமயங்களில் அப்படி இருக்கக்கூடும்.—லேவியராகம் 10:8,9-ஐயும் பாருங்கள்.
ரோமர் 14:21-லுள்ள பைபிள் வார்த்தைகளையும் கவனியுங்கள்: “மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.” எனவே, மற்றவர்களுடைய உணர்ச்சிகளின் பேரில் கரிசனையுடையவர்களாக கிறிஸ்தவர்கள் மதுபானத்திற்கு விலகியிருக்கவேண்டிய சந்தரப்பங்கள் இருக்கலாம். குடிப்பதையும் ஓட்டுவதையும் ஒன்று சேர்ப்பதை தவிர்ப்பதன் மூலம் மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்காக கரிசனைகாட்டுவதுமல்ல ஆனால் அவர்களுடைய உயிருக்கே கரிசனை காட்டவேண்டும் என்பதை பலமாகக் குறிப்பிடுவதாக இல்லையா?
பின்பு, மற்றவர்களுக்கு, விசேஷமாக இளைஞருக்கு முன்மாதிரியாயிருக்கவேண்டியகாரியம் இருக்கிறது. நீங்கள் ஜாக்கிரதையாயிருப்பதற்கு விசேஷ காரணம் இருக்கிறது. குடிப்பதையும் ஓட்டுவதையும் குறித்து இளைஞரை எச்சரிப்பதற்கு முன்பு, உங்களுடைய செயல்கள்தானே உங்களுடைய சொல்லுக்கு இசைவாக இருக்கிறதா என்பதைக் குறித்து நிச்சயமாயிருங்கள். நான் சொல்லுவதை செய், செய்வதை செய்யாதே என்று தத்துவம் பிள்ளைகளில் எந்தவிதத்திலும் செயல்படுவதில்லை. அவர்கள் சாதாரணமாக நீங்கள் சொல்லுவதைவிட நீங்கள் செய்வதற்கே அதிக கவனம் செலுத்துகின்றனர்.—நீதிமொழிகள் 20:7
நீங்கள் விருந்தளிப்பவராக இருக்கும்போது
உபசரிப்பு என்பது உங்களுடைய விருந்தினருக்கு உணவும் பானமும் கொடுப்பதைவிட அதிகத்தை உட்படுத்துகிறது. மற்றவர்களை உங்கள் வீட்டிற்கு அழைக்கும்போது, அந்த மாலைக்கான திட்டத்தை நீங்கள்தான் செய்யவேண்டும். அவர்களுடைய பாதுகாப்புக்குரிய பொறுப்பு உங்களுடையது.
உண்மையில் பார்க்கப்போனால், சில பிராந்தியங்களில், குடிபோதையிலிருப்போருக்கு மதுபானம் அளிக்கப்பட்டு, அப்படிப்பட்டவர்களை உட்பட்ட விபத்துகள் ஏற்பட்டால். அவர்களுக்கு மதுபானம் வழங்கியவர்கள் தண்டிக்கப்படுவதற்கான சட்டங்களும் இருக்கின்றன. இப்படிப்பட்ட சட்டங்களை நிறைவேற்றுவதன் சம்பந்தமாக குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போரில் ஐக்கிய மாகாணங்களின் குடியரசு விசாரணைக் கமிஷன் குறிப்பிட்டதாவது: “இதோ சட்டங்கள் மதுபானம் விற்பனை செய்பவர் அல்லது பரிமாறுபவர் வியாபாரியாக இருந்தாலும் விருந்தளிக்கும் தனி நபராக இருந்தாலும் அவர்களைப் பொறுப்புள்ளவர்களாக ஆக்குவதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
தெளிவாகவே, அதற்கு எதிராக சட்டம் இருந்தாலுஞ்சரி, இல்லாமலிருந்தாலுஞ்சரி, உங்களுடைய வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களுக்கு மதுபான வகைகளை பரிமாறும்போது, காரியங்கள் கட்டுப்பாட்டிலிருப்பதைக் கவனித்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு உங்களுடையது.—“பொறுப்புணர்ச்சியுள்ள விருந்தளிப்பவராக இருங்கள்” என்ற பெட்டிப்பகுதியைப் பார்க்கவும்.
அரசாங்கங்கள் என்ன செய்கின்றன
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதில் ஆபத்து மிகுந்திருப்பதால் அரசாங்கங்கள் அந்தப் பிரச்னையைக் கையாளுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சிலர் செய்யும் காரியங்கள் பின்வருமறு:
குடிப்பதற்கான வயது வரம்பை உயர்த்துதல்: இது உண்மையிலேயே உதவியிருக்கிறதா? சில ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கியமாகணங்களிலும் கனடாவிலும் குடிப்பதற்கான வயது வரம்பு குறைக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். நெடுஞ்சாலை பாதுகாப்புக் காப்பீடு நிறுவனத்தின் ஓர் அறிக்கை பின்வருமாறு விவரிக்கிறது: “குடிக்கும் வயதை இருபத்தொன்றிலிருந்து பதினெட்டுக்குக் குறைத்த பல மாகாணஹ்களிலும் கனடாவின் மாநிலங்களிலும் செய்யப்பட்ட ஓர் சுற்றாய்வு, உயிரினாழப்புகளை உட்படுத்திய கடுமையான விபத்துகளின் எண்ணிக்கையில் உயர்வைக் காண்பித்திருக்கிறது.” ஆனால், 1976-ல் முதல் மதுபானம் அருந்துவதற்கான வயதைக் குறைத்த இடங்கள் அந்த வயது வரம்பை உயர்த்த ஆரம்பித்தன. பலன்? அதே அறிக்கை கூறுவதாவது: “மகாணங்கள் மதுபானம் அருந்துவதற்கான வயது வரம்பை உயர்த்தும் போது சட்டத்தினால் பாதிக்கப்படும் வாகன ஓட்டுநர்களில் கடுமையான விபத்துகள் இணையாகக் குறைந்திருக்கின்றன.”
கடுமையான சட்டங்களை பிறப்பித்தல்: சில இடங்களில் குடிக்கும் வாகன ஓட்டுநர்கள் கடுமையான அபராதங்களையும், ஓட்டுவதற்கான அனுமதி எடுக்கப்படுதல் மற்றும் மீண்டும் மீண்டும் சட்டத்தை மீறுவதற்காக சிறை தண்டனையும் விதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட கடுமையான சட்டங்கள் தானே விடையாக இருக்கின்றனவா? மதுபானமும் ஆரோக்கியமும் ஆய்வு உலகமும் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “பிரிட்டனில் போக்குவரத்து விபத்துகள் ஆரம்பத்தில் 23 சதவிகிதமாகக் குறைந்தது; இது பரவலாக விளம்பரப்படுத்தப்பட்ட 1967-ன் சாலை பாதுகாப்பு விதிக்குரிய பிரதிபலிப்பாக இருந்தது. இந்த விதி வாகன ஓட்டுநர்கள் மதுபானம் அருந்தியிருக்கின்றனரா என்று அவர்கள் சுவாசம் பரிசோதிக்கப்படுவதை அனுமதித்தது கனடாவில் இப்படிப்பட்ட சட்டங்களைவிதித்து தானே விபத்துக்களில் ஏறக்குறைய 8 சதவிகித குறைப்பை ஏற்படுத்தியது.”a
ஆனால் சில காலத்திற்குள்ளாக இரு நாடுகளின் அறிக்கைகளுமே வித்தியாசமாக இருந்தது. அந்த அறிக்கா தொடர்ந்து கூறுவதாவது: “பின்னால் அனுபவத்திலிருந்து ஆபத்து அந்தளவுக்கு அதிகரிக்கவில்லை என்பதை உறுதிபடுத்தியிருப்பதால், அப்படி இருக்கிறது.” வேறுவார்த்தைகளில் குறிப்பிடவேண்டுமானால், கடுமையானவிதிகள் கடுமையாக வற்புறுத்தப்பட்டால்தான் அவை பலன் தரும், பைபிள் வெகு காலத்திற்கு முன்பே குறிப்பிட்டதற்கு இசைவாக இருக்கிறது: “துர்க்கிரியைக்குத்தக்கதண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால் மனுப்புத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.”—பிரசங்கி 8:11.
எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதன் கடுமையான பிரச்சனைக்கு, அவ்வளவு எளிதான தீர்வு கிடையாது. அரசாங்கங்கள் அதை சாதிக்க பல முயற்சிகளை எடுக்கின்றனர். குடிப்பதையும் ஓட்டுவதையும் சேர்த்து பார்ப்பதற்குமுன்பு நின்று யோசியுங்கள். உங்களுடைய சொந்த உயிரைக்குறித்தும் எண்ணிப்பாருங்கள். குடித்து ஓட்டும் ஓட்டுனரால் ஆயுசுகுறைக்கப்பட்டிருக்க, அன்பானவர்களின் வேதனையைக் குறித்து ஷர்லி பெரேரா கூறியதாவது: “29 வயதில் மரிப்பது அதிக இளம் வயதாக இருக்கிறது. அது உண்மையிலேயே அப்படித்தான் இருக்கிறது.
[பக்கம் 21-ன் பெட்டி]
பொறுப்புணர்ச்சியுள்ள விருந்தளிப்பவராக இருங்கள்
உங்களுடைய வீட்டில் விருந்தினருக்கு மதுபான வகைகளைப் பரிமாறுகிறவர்களாயிருந்தால், காரியங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறிவிடாதிருக்க நீங்கள் என்ன செய்யலாம்? ஒரு சில ஆலோசனைகள்:
வாகனத்தை ஓட்டிச்செல்லும் உங்கள் விருந்தினரிடம் தான் எந்த மதுபானவகையையும் அருந்துவதைக் குறித்து கவனமாயிருக்கவேண்டும் என்று சொல்லதயங்காதீர்கள்.
பரிமாற்றப்படும் மதுபானத்தை மட்டுப்படுத்துங்கள்
மதுபான வகையைச் சேராத மற்றபானங்களையும் பரிமாறுங்கள்.
கூடுமானால் உணவு அல்லது சிற்றூண்டி கொடுங்கள். உணவு மதுபானத்தின் செயல் சக்தியை குறைக்கிறது.
மதுபானம் அருந்த மற்றவர்களைக் கட்டாயப்படுத்தாதீர்கள்.
ஒருவர் அதிகமாகக் குடித்திருப்பாரானால், அவரை வாகனம் ஓட்டுவதற்கு அனுமதியாதீர்கள். அவர்கள் பத்திரமாக வீடு சேர வேறு ஏற்பாடுகள் செய்யுங்கள்.
[பக்கம் 21-ன் பெட்டி]
குடித்திருக்கும் ஓட்டுனரிடமிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி?
அதிகமாகக் குடித்துவிட்டிருக்கும் ஓட்டுனரிடமிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நீங்கள் எப்படி பாதுகாத்துக்கொள்ளலாம்? உங்கள் இருக்கையின் கச்சைகளைக் கட்டிக்கொள்வது உதவியாயிருக்கும், மற்றும் உங்களுக்கு முன் செல்லும் வானத்திற்கும் உங்களுக்குமிடையே பாதுகாப்பான தூரத்தைக் காத்துக்கொள்ளுங்கள். மற்றும் குடித்திருக்கும் ஓட்டுனரைக் குறித்து கவனமாயிருங்கள். பின்வரும் காரியங்களை செய்யும் ஓட்டுனரைக் குறித்து கவனமாயிருங்கள்:
● பரந்த விதத்தில் திருப்புகிறவர்.
● மஞ்சள் கோட்டை அல்லது சாலைக்கோட்டை மீறிமீறி ஓட்டுகிறவர்.
● ஏதோ ஒன்றை அல்லது ஒரு வாகனத்தை மோதிவிடும் நிலையில் ஓட்டுகிறவர்.
● வாகனங்களினூடே விரைகிறவர்.
● குறிப்பிட்ட சாலையில் செல்ல தவறுகிறார்.
● மிகக்குறைந்த வேகத்தில் ஓட்டுகிறவர் (மணிக்கு 10 மைல் வேகத்திற்குமேல், குறிப்பிட்ட வேகத்திற்குக்கீழ் ஓட்டுகிறவர்)
● வாகனம் செல்லும் பாதையில் காரணமின்றி வாகனத்தை நிறுத்துகிறவர்.
● சாலையை கடக்கும் வாகனங்களினூடே ஓட்டுகிறவர்.
● ஓட்டும் விதத்திற்கும் தான் கொடுக்கும் அறிகுறிகளுக்கும் சம்பதமில்லாதவிதத்திதல் ஓட்டுகிறவர்.
● சாலைக்குறி விளக்குகளுக்கு மெதுவாக பிரதிபலித்தல்
● திடீரென்று அல்லது விதிமுறைக்கு எதிராகத் திருப்புகிறவர்.
● வாகனத்தை வேகமாக துவக்குகிறவர் அல்லது வேகமாக நிறுத்துகிறவர்.
● இரவில் வாகனத்தின் பிரதான விளக்குகளை அனைத்துவிட்டு ஓட்டுகிறவர்.
● குடிப்போதையிலிருக்கும்போது வாகனம் ஓட்டுவதைக் கண்ணால் களித்தள் என்ற அனகேவா சயன்ஸஸால் தயாரிக்கப்பட்ட குறிப்புகளை சைர்ந்தது, ஐக்கியமாகாணங்களின் தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்துப் பாதுகாப்பு நிறுவனத்தினருக்கு (உவாஷிங்டன் D.C.) தயாரிக்கப்பட்டது.
[அடிக்குறிப்புகள்]
a “உயரிழப்பை ஏற்படுத்தக்கூடிய விபத்துக்களின்பேரில் குடிப்பதற்கான வயது வரம்பை கூட்டியிருப்பதன் பாதிப்பு” என்ற அறிக்கை சட்டக்கல்வி பத்திரிக்கை (ஆங்கிலம்) புத்தகம் XII-ல் (ஜனவரி 1983) பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 20-ன் படம்]
அநேக இடங்களில் குடிப்போதையிலிருக்கும் வாகன ஓட்டுனர்கள் கடுமையான அபாரதத்திற்கும், ஓட்டுனர் அனுமதி நீக்கப்படுதலுக்கும் சிறை தண்டனைக்கும் உட்படுத்தப்படுகின்றனர்
[பக்கம் 22-ன் சிறு குறிப்பு
ஏன் குடிப்பதையும் ஓட்டுவதையும் ஒன்று சேர்ப்பதிலிருக்கும் ஆபத்திற்குள்ளாகவேண்டும்?