பழக்கம் எதிர்ப்பை புதைத்துவிடுகிறது
பழக்கத்தை விட்டுவிட விரும்பாமல், அரை மனதுடன் தயங்குகிற ஒரு மனிதனைப்போல, சிகரெட் சந்தை, சில சமயங்களில் புகைப் பிடித்தல் கேடானதாகவும் ஒருவரை இந்த பழக்கத்துக்கு அடிமையாக்கிவிடவும் கூடும் என்ற பயத்தில் அதின் பயனீட்டளவை குறைத்திருக்கிறது. ஆனால் அது என்றையும்விட அதிகமான அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உறுதியோடுதானே மீண்டும் வந்திருக்கிறது. இத்தகைய பயங்களை அடக்கி வைப்பது என்ன? விளம்பரங்களும் போருமே! சரித்திராசிரியர் ராபர்ட் சோபலின் பிரகாரம், இவை தானே “சிகரெட் உபயோகத்தை பரப்புவதில் அதிமுக்கியமான இரு வழிமுறைகளாக இருந்திருக்கின்றன.
முதல் உலகப் போரில் ‘ஜனத்துக்கு விரோதமாய் ஜனம்’ எழும்பியபோது, சிகரெட்டின் உபயோகம் வேகமாக அதிகரித்தது. (மத்தேயு 24:7) 1914-ல் 1800 கோடியாக இருந்த அமெரிக்க சிகரெட் உற்பத்தி 1918-க்குள் 4700 கோடியாக உயர்ந்ததற்கு காரணம் என்ன? போர் வீரர்களுக்கு இலவச சிகரெட்டுகளை வழங்க ஒரு தீவிர நடவடிக்கை! போர் முனையில் தனிமையைப் போக்க மயக்கமூட்டும் இதன் பாதிப்பு பயனுள்ளதாக இருப்பதாக கருதப்பட்டது.
“உங்கள் சிகரெட்டை பற்ற வைக்க ஒரு தீக்குச்சு உங்களிடம் இருக்கும்போது, உங்கள் தொல்லைகளையெல்லாம், பழைய ஆடை அணிமணிப் பையில் மூட்டைக்கட்டி வைத்துவிடுங்கள்” என்பதாக பிரிட்டிஷ் தேசத்துப் போர்கால பாடல் ஒன்று உற்சாகப்படுத்தியது. அரசாங்க ஏஜென்ஸிகளும் தேசப்பற்றுள்ள தனியார் தொகுதிகளும் போர் செய்து கொண்டிருந்த வீரர்களுக்கு இலவசமாக சிகரெட்டுகளை வழங்கியபோது, சிகரெட்டை எதிர்த்து கிளர்ச்சி செய்பவர்கள்கூட குறைசொல்ல துணிவுகொள்ளவில்லை.
பிடிப்பை இறுக்கமாக்கிக் கொள்ளுதல்
புதிதாக புகைப் பிடிக்க ஆரம்பித்திருந்தவர்கள் போருக்குப் பின்பு நம்பகமான வாடிக்கையாளர்களாக மாறிவிட்டார்கள். 1925-ல் மட்டுமே அமெரிக்க தேசத்தினர், சராசரியாக நபருக்கு 700 சிகரெட்டுகளை புகைத்திருந்தார்கள். யுத்தத்துக்குப் பின் கிரீஸ் நாட்டவர், ஐக்கிய மாகாணங்களில் ஒரு நபர் புகைத்த மொத்த சிகரெட்டில் பாதி அளவு சிகரெட்டை புகைத்தனர். அமெரிக்க நாட்டு சிகரெட்டுகள் அநேக தேசங்களில் பிரபலமாயின. ஆனால் இந்தியா, சீனா, ஜப்பான், இத்தாலி மற்றும் போலந்து போன்றவை தங்களுடைய தேசங்களில் பயிரான புகையிலையை வைத்தே தங்கள் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்துகொண்டன.
அமெரிக்க சந்தையில் தங்களுடைய பிடிப்பை இன்னும் உறுதி செய்துகொள்ள விளம்பரதாரர்கள் பெண்களை குறியாக வைத்தார்கள். “1920-ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் புகையிலை விளம்பரங்கள் அதன் உச்சக்கட்டத்தை எட்டின” என்பதாக ஜெரோம் E. ப்ரூக்ஸ் குறிப்பிடுகிறார். ஆனால் விளம்பரங்களின் காரணமாக 1929-ல் ஏற்பட்ட பொருளாதார தொய்வு காலத்தின்போதும், அதற்கு பின்பும், அமெரிக்க தேசத்தவர் தொடர்ந்து சிகரெட்டுகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். சர்க்கரைக்கு மாற்று வகையாக, ஒல்லியாக இருப்பதற்கு சிகரெட் உதவுகிறது என்ற கருத்தை ஊக்குவிக்க பெரும் பணம் (1931-ல் சுமார் 90 கோடி ரூபாய்) செலவழிக்கப்பட்டது. மர்லின் டயட்ரிச் போன்ற புகை பிடிக்கும் திரைப்பட நட்சத்திரங்களை புகழும் திரைப்படங்கள் நவநாகரீகமான ஒரு உருவத்தை தோற்றுவிக்க உதவியது. 1939-ல் புதிய உலகப் போருக்கு முந்தின தினத்தில், அமெரிக்கப் பெண்கள், 18,000 கோடி சிகரெட்டுகளை புகைப்பதில் ஆண்களை சேர்ந்து கொண்டார்கள்.
மற்றொரு போர்! போர்க்கால அன்றாட உணவுப் படியிலுங்கூட போர்வீரர்கள் மறுபடியுமாக இலவசமாக சிரெட்டுகளை பெற்றுக் கொண்டார்கள். தேசாபிமான போர்க்கால மனநிலையை ஆதாயப்படுத்திக்கொண்டு ஒரு விளம்பரம் “லக்கி ஸ்டிரைக் கிரீன் என்னும் சிகரெட், போர்களம் புகுந்துவிட்டது” என்பதாக வாசித்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குள் ஐக்கிய மாகாணங்களின் வருடாந்தர சிகரெட் பயனீட்டளவு 40,000 கோடியை எட்டிவிட்டிருக்க, உலகில் புகையிலையின் இடத்தை யார் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடும்.
ஆம், யுத்தத்துக்குப் பின்னான காலத்தில், ஐரோப்பாவில் சிகரெட்டுகளின் முக்கியத்துவத்தைக் குறித்து யார் கேள்வி கேட்க முடியும்? ஒரு கட்டத்தில் ஐரோப்பாவின் கள்ள சந்தையில், தாள் நாணயத்துக்கு பதிலாக, அட்டைப் பெட்டிகளில் சிகரெட்டுகள் இடம் பெற்றன. அமைதி காலத்தில் ஐரோப்பாவில் தங்கியிருந்த அமெரிக்க போர்வீரர்கள், ஒரு பாக்கட் 60 பைசா என்ற அத்தனை மலிவான சலுகை விலைக்குங்கூட வாங்கி, அதை விற்று, அதில் கிடைத்த பணத்தை வைத்து பெண் சிநேகிதிகள் முதற்கொண்டு புதிய காலணிகள் வரையாக—அனைத்தையும் வாங்கினார்கள். வரி விலக்களிக்கப்பட்டிருந்த இராணுவ சிகரெட்டுகளின் விற்பனை நபருக்கு 1945-ல் 5,400 ஆக இருந்தது இரண்டே வருடங்களில் 21,250 ஆக உயர்ந்தது.
பல பத்தாண்டுகளாக, புகையிலை உபயோகத்தின் ஆட்சேபத்துக்குரிய அம்சங்கள் பொதுமக்களிடமிருந்து வெற்றிகரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இது தீங்கானது என்பது நிரூபிக்கப்படவில்லை. பிரபலமான ஒரு பழக்கத்தின் தணியாத வளர்ச்சியினால் இது மறைத்து வைக்கப்பட்டிருந்தது. என்றபோதிலும் தனிமுறைப்பட்ட விதத்தில், புகைப்பிடிப்பது தீங்கானதா? அது சுத்தமானதா அல்லது அசுத்தமானதா என்ற கேள்விகள் விடையளிக்கப்படாமல் இருந்தன.
1952-ல் உடல்நலத்தைப் பற்றி புகைந்து கொண்டிருந்த கேள்வி திடீரென்று வெளிப்பட்டு வந்தது. பிரிட்டன் நாட்டு மருத்துவர்கள், புற்றுநோய்க்கு பலியாகிறவர்கள் அதிகமாக புகைப்பிடிப்பவர்களாக இருப்பதை காண்பிக்கும் புதிய ஆராயச்சி செய்தி ஒன்றை வெளியிட்டார்கள். ரீடர்ஸ் டைஜஸ்ட் இந்த செய்தியை தெரிந்து கொண்டது. இதை தொடர்ந்து எங்குகும் இது பற்றிய பேச்சு அடிப்பட்டது. 1953க்குள், சிகரெட் எதிர்ப்பு போராட்டம் ஒன்று, வெற்றியை நோக்கி முன்னேறிச் செல்வதாக தோன்றியது. உலகம் இந்த பழக்கத்தை உதறித்தள்ளுமா?
எதிர்த்து வெல்லப்படமுடியாத சிகரெட் தொழில்துறை
சிகரெட்டுகளுக்கு எதிரான வழக்கு நிரூபிக்கப்படவில்லை என்றும் அது வெறும் புள்ளிவிவர தொகுப்பை ஆதாரமாகக் கொண்டதே என்றும் சிகரெட் தொழில்துறை அடித்துச் சொன்னது. ஆனால் திடீரென்றும்—வேடிக்கையாகவும்—ironically?அது அதனுடைய இரகசிய கருவியாக இருந்த, நச்சுத்தன்மை குறைவாயுள்ள சிகரெட்டை விற்பனை செய்ய ஆரம்பித்தது. பழக்கத்தை விட்டுவிட விரும்பாமல் அதே சமயத்தில் திகிலடைந்து போயிருந்தவர்களுக்கு, புதிய பொருள் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வது போன்ற தோற்றம் அளிக்கப்பட்டது. விளம்பரமானது ஒரு தோற்றத்தை விற்கக்கூடும் என்பதை இது மறுபடியுமாக நிரூபித்தது.
உண்மையில், நச்சுத்தன்மை குறைவாயுள்ள சிகரெட் தொழிற் சின்னம், புகைப்பிடிப்பவரின் உடல்நலத்தைக் காட்டிலும் அவருடைய மனசாட்சியையே அதிகமாக அமைதிப்படுத்துவதாக இருந்தது. புகை பிடிக்கும் அநேகர் எப்போதும்போல் அதிகமாக நிக்கோடீனை பெற்றுக்கொள்ளும் வரையாகவும் அதிக ஆழமாக உள்ளிழுத்து, நீண்ட நேரம் அதை நுரையீரலில் தங்க வைத்திருப்பதன் மூலம் இழப்பை ஈடுசெய்து கொண்டதை விஞ்ஞானிகள் பின்னால் கண்டுபிடித்தார்கள். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதை நிரூபிப்பதற்கு முன்னால் மற்றொரு கால்நூற்றாண்டு கடந்துவிடும். இதற்கிடையில் சிகரெட் தொழிற்சாலை உலகில் மிக அதிக லாபகரமான ஒன்றாக வெளிப்பட்டு தோன்றியிருக்கிறது. இப்பொழுது அதன் வருடாந்தர விற்பனையின் மதிப்பு 48,000 கோடி ரூபாயையும் மிஞ்சிவிட்டது.
பொருளாதார ரீதியில் இந்த தொழில் இன்று முன்னொருபோதும் இராத வகையில் ஸ்திரமாகவே இருக்கிறது. வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். வருடாந்தர பயனீட்டளவு, தொழில் மயமாக்கப்பட்ட தேசங்களில் 1 சதவிகிதமும் மூன்றாவது உலகிலுள்ள வளர்ந்துவரும் தேசங்களில் 3 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. பாக்கிஸ்தானிலும் ப்ரேஸிலிலும், பெரும்பாலான மேற்கத்திய தேசங்களில் இருப்பதைவிட, வளர்ச்சி, முறையே 6 மற்றம் 8 மடங்குகள் அதிகமாக இருக்கிறது. தாய்லாந்தின் தனி வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு சிகரெட்டுகளை வாங்க பயன்படுத்தப்படுகிறது.
எப்படியிருந்தாலும், அநேக சிந்திக்கும் ஆட்களுக்கு, உலகின் 100 ஆண்டு கால சிகரெட் காதல் விவகாரத்தின் உறுதியான பிடிப்பு கதையின் முடிவாக இல்லை. விசேஷமாக 1914 முதற்கொண்டு இருந்துவரும் புகையிலை உபயோகத்தின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பையும், பெரும்பாலும் இத்தனை அநேகர் இதை கண்மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வதையும் பார்க்கையில், கண்ணுக்குத் தெரிவதைக் காட்டிலும் இதில் அதிகம் இருக்கக்கூடுமா? பழக்கத்தின் நெறிமுறையைப் பற்றி அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளைப் பற்றி என்ன? புகைப்பிடித்தல் தார்மீக ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதா அல்லது அது கண்டிக்கப்படத்தக்கதா? எமது அடுத்த கட்டுரை இதன் பேரில் ஓரளவு உட்பார்வையைத் தருகிறது. (g86 4/8)
[பக்கம் 7-ன் படம்]
விளம்பரமும் போரும்—சிகரெட் உபயோகத்தை பரப்புவதில் அதிமுக்கியமான இருவழிகளாக இருக்கின்றன