ஆப்பிரிக்க குடும்ப வாழ்க்கை—தொழில் மயத்துக்கு பலியாகிறது
தென் ஆப்பிரிக்காவிலுள்ள “விழித்தெழு!” நிருபர் எழுதியது
திறந்த ஒரு சுற்று கட்டு வெளியிடத்தைச் சுற்றி கூட்டமாக குடிசைகள் காணப்படுகின்றன, கோழிகளும் பன்றிகளும் கிராமத்தின் இருபுறங்களிலுமுள்ள தானிய பாத்தியில் தாராளமாகச் சுற்றித்திரிகின்றன. அனைத்தும் அமைதியாக இருக்கின்றது.
பல சந்ததிகளாக, ஆப்பிரிக்க குடும்பங்கள் இதுபோன்ற ஒரு சுற்றுப்புறச் சூழலில் வளமாக வாழ்ந்து வந்தன. கிராமப்புற வாழ்க்கை, நெருங்கி இணைக்கப்பட்ட குடும்பங்களை பிறப்பித்தது. பிள்ளைகள் பெரியவர்களானபோது, அவர்கள் தனியே பிரிந்து சென்று எந்த முயற்சியிலும் துணிந்து இறங்காமல் கிராமத்தில் தங்களுக்கென்று அதிலேயே குடிசைகளை அமைத்துக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் தகப்பனின் அல்லது பாட்டனின் கேள்விக்குட்படுத்தப்படாத குடும்பத்தலைவனின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் வாழ்ந்து வந்தார்கள். என்றபோதிலும், நவீன தொழில் துறை வளர்ச்சி கொண்டுவந்த தீவிர மாற்றங்களினால் இந்த எளிய வாழ்க்கை நொறுங்கிவிட்டது.
உண்மைதான். தொழில் மயம் ஆப்பிரிக்க குடும்பங்களுக்கு பொருளாதார நன்மைகளை கொண்டு வந்திருக்கிறது. கிராமப்புற வாழ்க்கையில் அடிக்கடி வறட்சியினாலும் முன்னறிந்து கூற முடியாத சந்தை நிலவரத்தினாலும் தொல்லைகள் ஏற்படுவதுண்டு. குடும்பங்கள் அத்தியாவசியமான தேவைகளையுங்கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதுண்டு. ஆனால் தொழில்துறை முன்னேற்றம் மேம்பட்ட குடியிருப்பு வசதிகளையும் தட்டுமுட்டு சமான்களையும் பெற்றுக்கொள்வதை கூடிய காரியமாக்கியிருக்கிறது. அது மேம்பட்ட கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை அளித்திருக்கிறது. ஆனால் இந்த நன்மைகளை அனுகூலப்படுத்திக் கொள்வதற்கு ஆப்பிரிக்கர்கள் அமைதி நிலவிய தங்கள் கிராமங்களை விட்டுவிட்டு பட்டணங்களுக்குச் செல்ல வேண்டியவர்களாக இருந்தார்கள். அங்கே அவர்கள் எளிதில் பெற முடியாத பணத்தைப் பெற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் கவலைக்குரிய பிரச்னைகளையுங்கூட எதிர்பட்டார்கள்.
ஜன நெரிசலுள்ள நகரங்கள்
குடியிருப்பு வசதியே முதன்மையான பிரச்னையாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்க செய்தித்தாள் தி ஸ்டார் குறிப்பிடும் விதமாகவே: “விக்டோரியா அரசி காலத்தின்போது பிரிட்டனில் தொழிற்துறைக்கென்று அமைக்கப்பட்ட சேரிகளும், தற்போது தென் ஆப்பிரிக்காவில் உரிமையின்றி பொதுநிலத்தில் மக்களின் குடியேற்றமும் ஒரே நோக்கத்துக்காகவே தோன்றின—ஜனங்கள் நகரங்களுக்கு வேலைதேடி வந்தார்கள், ஆனால் அங்கு இவர்களுக்கு இடவசதியளிக்க வீடுகள் இல்லை.”
விரைவிலேயே ஆப்பிரிக்க நகரியங்களில் ஜனநெரிசல் அதிகமானபோது குடிசைகள் பெருக ஆரம்பித்தன. முன்பு சமாதானமாக இருந்த நகரியங்கள் குற்றச் செயல்களும் வன்முறைகளும் நிறைந்த இடங்களாக மாறிவிட்டன. இங்கு தொடர்ச்சியாக உட்புகுந்த ஜனங்களின் எண்ணிக்கைக் கேற்ப வீடுகள் வேகமாக கட்டப்பட முடியவில்லை. தொழிற்கூடங்களிலும் சுரங்கங்களிலும் வேலை செய்யும் ஆண்களுக்காக கட்டப்பட்ட உறைவிடங்கள், அவர்களின் மனைவிமார்கள், குழந்தைகள் வாழும் அளவுக்கு பெரிதாக இல்லை. எனவே அரசாங்கங்கள் வேறு வழியில்லாததால் ஜனங்கள் உட்புகுதலை நெறிப்படுத்துவதன் மூலம் பெருகி வருதலை கட்டுப்படுத்தினர். கைது செய்யப்படுவோம் என்ற பயத்தோடு எப்போதும் வாழ்ந்து கொண்டிருந்தபோதிலும், சட்டங்கள் கடுஞ்சினத்தை வளர்த்தப்படியால் அநேகர் அவைகளை எதிர்ப்பதை தெரிந்தெடுத்தனர்.
சீக்கிரத்திலே புதிய நகரவாசிகள், நகர்புற வாழ்க்கை முறை தங்கள் குடும்பங்களை பாதிப்பதை உணர்ந்தனர். ஆண்கள் அதிக மணிநேரம் வேலை செய்ய அடிக்கடி கட்டாயப்படுத்தப்பட்டனர். மனைவிகளுங்கூட தங்கள் குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டுவிட்டு வேலை செய்யத் துவங்கினர். கண்காணிக்கப்படாத குழந்தைகள் தெருக்களில் அலைந்ததன் காரணமாக இளங் குற்றவாளிகளின் எண்ணிக்கை பெருகியது.
முறிந்துபோன குடும்பங்கள்
நகரத்துக்கு புறப்பட்டவர்களோடு எல்லோருமே சேர்ந்துகொள்ளவில்லை. உதாரணமாக தென் ஆப்பிரிக்காவின் கறுப்பர்களின் ஜனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு, கிராமப்புறங்களில் இன்னும் வாழ்கின்றனர். என்றபோதிலும் தொழில் மயமாக்குதலின் தாக்குதலை இவர்களும் உணருகின்றனர். அநேக ஆண்கள் தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு, வருடாந்தர வேலை ஒப்பந்தத்தின் அடிப்படையில், மற்றொரு இடத்தில் பணியாற்றும் வேலையாட்களாக இருக்கின்றனர். இது தீங்கான விளைவுடையதாய் இருக்கிறது. இவர்களின் பிள்ளைகள் தகப்பனில்லாத பிள்ளைகளாக விடப்படுவது மட்டுமல்லாமல், ஆண்களும் அவர்களின் மனைவிகளும் ஒழுக்கயீனமான செயல்களுக்கு தூண்டப்படுகிறார்கள். அநேக பெரிய உறைவிடங்களில் வாழும் ஆயிரக்கணக்கான வேலையாட்கள், ஆண்புணர்ச்சி உட்பட, ஒழுக்கயீனமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
மேலுமாக அநேக ஆண்கள், தங்களின் வருவாயை பெருக்குவதற்காக அதிக மணி நேரம் வேலை செய்யும்படி தூண்டப்படுகிறார்கள். இந்த வருமானம் அவர்கள் விட்டுவந்த குடும்பங்களுக்கு உதவியாக இருக்கிறதா? எப்போதும் அல்ல. வெளிப்படையாகவே அநேகர் தங்கள் குடும்பங்களுக்கு குறைவான அக்கறையையே காண்பிக்கிறார்கள். அவர்கள் தங்கள் பணத்தை தங்களுக்காகவே செலவழிக்கிறார்கள். அவர்களின் தலைமை ஸ்தானம் தொலைவிலிருக்கும் குடும்ப ஆதரவாளர் என்ற நிலைக்கு குறைந்துவிடுகிறது.
நாட்டுப்புறங்களிலிருக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் அவ்வளவு நன்றாக இராது என்பதை உணர்ந்தவர்களாய், தங்களின் பிள்ளைகளை நகரங்களுக்கு வேலை செய்யவோ அல்லது நல்ல கல்வியைப் பெறவோ அனுப்பினதன் காரணமாக குடும்பங்கள் பிளவுபட்டன.
ஆகிலும் முதிர் வயதான பெற்றோரை புறக்கணிப்பதனால்தானே குடும்பங்கள் அதிகப்படியான தீங்கை அனுபவித்திருக்கின்றன. வழக்கமாக, முதிர்வயதானவர்கள், குடும்ப அங்கத்தினர் தங்களை பராமரித்து வருவார்கள் என்று எதிர்பார்த்தனர். அதற்கு பதிலாக இவர்கள் குடும்பத்தின் ஆவிக்குரிய மற்றும் தார்மீக நலனுக்காக தங்கள் பங்கைச் செய்தனர். வயது முதிர்ந்தவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் மேற்கத்திய பழக்கம் நிச்சயமாகவே ஆப்பிரிக்காவில் அறியப்படாத ஒன்றாக இருந்தது. ஆனால் நகர்புற வாழ்க்கை, வயது முதிர்ந்தவர்களுக்கு வழக்கமாக காண்பிக்கப்பட்ட மரியாதையை குலைத்துப் போட்டது. அடிக்கடி, இளைஞர்கள் நகர்புற வாசத்தை நாடிப் போகும்போது வயது முதிர்ந்தவர்கள் பின்னால் விடப்படுகிறார்கள். “வேண்டப்படாதவர்களாயும் சமுதாயத்தின் பாகமாக இல்லாதவர்களாகவும் உணர்வதே வயது முதிர்ந்தவர்களின் சில பிரச்னைகளுக்கு காரணமாகும் என்பதாக நைஜீரியாவின் லாகோஸில் அண்மையில் நடந்த கூட்டத்தில் சுகாதார அதிகாரிகள் சொன்னார்கள்” என்று தி ஸ்டார் பத்திரிக்கை அறிக்கை செய்கிறது.
கிறிஸ்தவ குடும்பங்கள் எவ்விதமாக சமாளிக்கின்றன.
தெளிவாகவே தொழில் மயமாக்கப்படுதல் கிறிஸ்தவனுக்கு கவலைக்குரிய சவாலாக இருக்கிறது. பொருளாதார ஆதாயப் போட்டியின் கண்ணியில் சிக்கிக் கொள்ளாதபடி அவர்கள் எவ்விதமாக தங்களை காத்துக்கொள்கிறார்கள்? மத்தேயு 6:33-ல் இயேசுவின் வார்த்தைகளின்படி அநேகர் தங்களின் சிந்தனையை உருப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் [பொருளாதார காரியங்கள்] உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.”
இந்த நியமத்தை பின்பற்றுவது எளிதாக இருக்கவில்லை. ஆனால் கருத்தறிவிப்பவர்களுங்கூட அது நடைமுறையில் கொண்டுவரும் நன்மைகளை கவனித்திருக்கிறார்கள். வெப்ப மண்டல ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவம் என்ற புத்தகத்தில் நார்மன் லாங்க் இவ்விதமாக குறிப்பிடுகிறார்: “ஆனால் யெகோவாவின் சாட்சிகளோ உலகப்பிரகாரமான வாழ்க்கை முறையை அவர்களின் மதசம்பந்தமான வாழ்க்கையிலிருந்து வித்தியாசப்படுத்திப் பார்ப்பதில்லை. . . . அதில் ஒரு உறுப்பினராக இருப்பது . . . ஆவிக்குரிய முனேற்றத்தையும், புதிய வாழ்க்கையைப் பற்றிய வாக்குத்தத்தத்தை நம்புவதையும் உட்படுத்துகிறது. ஆனால் அது இந்த உலகில் வாழ்க்கையினிடமாக நடைமுறைக்கு உதவும் விழிப்புணர்வையுங்கூட அர்த்தப்படுத்துகிறது.”
இதை விளக்க, லெஸோதோவைச் சேர்ந்த ஒரு சாட்சி, பொருளாதார சூழ்நிலைமையின் காரணமாக அருகாமையிலுள்ள ஒரு நாட்டின் சுரங்கத்தில் வேலையை தேடிக் கொண்டார். பின்பு அவரின் சொந்த ஊரான லெஸோதோவில் ஒரு பெண்ணை மணந்து கொண்டார். பின்பு அவளை அங்கு விட்டுவிட்டு சுரங்கத்துக்கு திரும்பினார். விரைவிலேயே அவரும் அவருடைய மனைவியும் இந்த ஏற்பாடு கிறிஸ்தவ நியமங்களுக்கு ஒத்திசைவாயில்லை என்பதாக உணர்ந்தார்கள்.
எனவே அவர் இரண்டு பழைய தையல் இயந்திரங்களை வாங்கி தன் மனைவிக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையில் உடன் வேலையாள் ஒருவர் துணிகளைத் தைக்க அவருக்கு கற்றுக் கொடுத்தார். சுரங்க வேலை ஒப்பந்தம் முடிந்த பிற்பாடு தன் மனைவியோடு சேர்ந்து வேலையில் ஈடுபட அவர் வீடு திரும்பினார். அவர் மனைவி, அனைவரும் விரும்பும் ஒரு வகையான ஆடையை ஏற்கெனவே தயாரிக்க ஆரம்பித்திருந்தாள். இந்த சிறிய முயற்சி வெற்றியடைந்தது. வெகு சீக்கிரத்திலேயே அவர்களோடுகூட ஐந்து கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் சேர்ந்து கொண்டார்கள். அவர்களின் குடும்பங்களோடு தங்குவதையும் பிராந்தியத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளடங்கிய சிறிய தொகுதி இரண்டு வளர்ச்சியடைந்த சபைகளாக மாறுவதையும் இது கூடிய காரியமாக்கியது.
ஆனால் நகர்புறங்களில் வாழும் கிறிஸ்தவ குடும்பங்களைப் பற்றியதென்ன? அவர்கள் எவ்விதமாக குடும்ப ஐக்கியத்தை காத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் நகர் புறங்களில் பகுதி நேர வேலையை பெறுவதை எளிதாக கண்டிருக்கிறார்கள். இந்த வாய்ப்புகளை அனுகூலப்படுத்திக் கொள்வதன் மூலமாக, சாட்சிகள் தங்களின் நேரத்தை நன்கு கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவும் தங்கள் குடும்பங்களுக்கு தேவையான கவனத்தை தரக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். முழு நேரமாக வேலை செய்யும் குடும்பத் தலைவர்களைப் பற்றியது என்ன? இவர்கள் அநேகமாக அதிக மணிநேரம் வேலை செய்வதை தவிர்ப்பவர்களாகவும் மனைவிமார்கள் வேலைக்குப் போவதை வற்புறுத்தாதவர்களாயும் இருக்கிறார்கள். இவ்விதமாக தங்கள் குடும்பங்களின் ஆவிக்குரிய தேவைகளை சரிவர பூர்த்திசெய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
எதிர்காலம்?
நகர மயமாக்குதலின் வல்லுநர்கள் முன்னறிவிக்கும் விதமாகவே, கோடிக்கணக்கான ஆட்கள் நகரங்களுக்குள் திரண்டு வருவார்கள். மேலுமாக, அதிகமான இடம் பெயர்ந்தவர்களின் வருகை, குறைந்த வாழ்க்கைத் தரம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வீட்டு வசதிக் குறைவு போன்ற பிரச்னைகளை முன்னேறும் நாடுகள் எதிர்படும் என்று சொல்லுகிறார்கள். எனவே ஆப்பிரிக்க குடும்பத்தின் எதிர்கால வாழ்க்கை இருண்டதாக தோற்றமளிக்கிறது.
தொழில் மயமாக்கப்படுதலின் அழுத்தங்களை சமாளிப்பதற்கு பைபிள் நியமங்களை பொருத்தி பிரயோகிப்பது உதவி செய்யக்கூடும். கடவுளின் பரலோக அரசாங்கம் பூமியின் விவகாரங்களின் நிர்வாகத்தை எடுத்துக்கொள்ளும்போதுதானே நிரந்தரமான பரிகாரம் கிடைக்கும். (g86 4/8)
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
கிராமப்புற ஆப்பிரிக்கா, தொழில்மயமான ஆப்பிரிக்காவாக மாறிவிடுகிறது?