ஏய்ட்ஸிலிருந்து உங்களை எவ்விதமாக பாதுகாத்துக்கொள்வது
முதலாவதாக, தொற்றுக் கிருமிகளின் மூல காரணிகளைத் தவிர்த்திடுங்கள். அதை எவ்விதமாகச் செய்வீர்கள்? சர்வ வல்லமையுள்ள தேவன் கொடுத்திருக்கும் நடத்தைக்குரிய தராதரங்களுக்கிசைவாக வாழ்வதன் மூலம். இப்பொழுது ஏய்ட்ஸினால் மரித்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோரை இவை எவ்விதமாக பாதித்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
மிக அதிகமாக பாதிக்கப்படக்கூடிய தொகுதி
இவர்கள், விசேஷமாக எப்பொழுதும் புதிய துணைவர்களை நாடிக் கொண்டிருக்கும், பாலுறவில் சுறுசுறுப்பாக ஈடுபடும் ஆண்புணர்ச்சிக்காரர்கள். பைபிள் சொல்லுகிறது:
“பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ண வேண்டாம்; அது அருவருப்பானது.”—லேவியராகமம் 18:22.
“அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர் மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.”—ரோமர் 1:27.
“வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசி மார்க்கத்தாரும் விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும் சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் . . . தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.”—1 கொரிந்தியர் 6:9, 10.
வேறு எவர் பாதிக்கப்படலாம்?
ஏய்ட்ஸ் கிருமிகளுள்ள நபர், அவர் ஆணானாலும் பெண்ணானாலும் அவரோடு, பாலுறவுக் கொள்ளும் ஆட்கள். இதைக் குறித்து பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது:
“விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும் விவாக மஞ்சம் அசுசிப்பாடாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.”—எபிரேயர் 13:4.
“ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம் . . . ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள்.”—கொலோசெயர் 3:5, 6.
உயர் அபாய நிலையிலுள்ள மற்றவர்கள்
கிருமிகளுள்ள ஊசிகளின் மூலமாக போதை மருந்தை உட்செலுத்திக்கொண்டு அதைத் துர்ப்பிரயோகம் செய்யும் ஆட்கள். குடிவெறியைப் பைபிள் கண்டனம் செய்வது, குறைந்தபட்சம் சாராயம் உண்டுபண்ணும் அதே மாதிரியாக உணர்வுகளை மழுங்கச் செய்யும் அல்லது மனதை முடங்கச் செய்யும் பாதிப்புகளையுடைய நவீன கால போதை மருந்தின் துர்பிரயோகத்துக்கும் நிச்சயமாகவே பொருந்துவதாக இருக்கும்.
“மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக் கடவோம்.”—2 கொரிந்தியர் 7:1.
“வஞ்சிக்கப்படாதிருங்கள். வேசி மார்க்கத்தாரும் . . . வெறியரும் . . . தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.”—1 கொரிந்தியர் 6:9, 10.
மற்றொரு உயர் அபாயத் தொகுதி
இரத்தமேற்றுதலின் மூலமாக, தூய்மையற்ற இரத்தத்தைப் பெற்றுக்கொள்ளும் ஆட்கள். இரத்தத்தைப் புசிக்கக்கூடாது என்பதாகப் பைபிள் தடை செய்வது குறிப்பிடத்தக்கதாகும். அது சொல்லுகிறது:
“எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்க வேண்டாம். சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான்.”—லேவியராகமம் 17:14.
“இரத்தத்திற்கு . . . நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்பதே. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள் மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது.”—அப்போஸ்தலர் 15:28, 29.
இந்த விஷயங்களின் பேரில் பைபிள் நியமங்களைப் பின்பற்றவோ அல்லது எது சரி என்பதைச் சொல்ல கடவுள் உரிமையுள்ளவராக இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ளவோ எல்லோரும் மனமுள்ளவர்களாக இல்லை. ஆனால் அவ்விதமாகச் செய்திருப்பவர்கள் அதற்காக மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறார்கள். (g86 4/22)