வைராக்கியமான நாஜியனாக இருந்ததிலிருந்து கிறிஸ்தவ கண்காணியாக
அட்டென்ஷன்! வலது பக்கம் பாருங்கள்! ஹிட்லரின் வாலிப தொகுதி, பாப்லிங்கன் மாவட்டம், அறிக்கை செய்கிறது.” பயிற்றுவிப்பு நிகழ்ச்சிகளின்போது, படையணிப்புகளில், இன்னும் மற்ற நிகழ்ச்சிகளின்போது மேலதிகாரிகளிடம் நான் என்னுடைய பையன்களை ஒப்படைத்தபோது எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன். அவர்களுடைய கீழ்ப்படிதலையும் சீர்மிகு நடையையும் நான் பார்த்தபோது கிளர்ச்சியடைந்தேன். புதிய சகாப்தத்தின் கிளர்ச்சியில் நான் பிடிபட்டிருந்தேன். 1930-வது பத்தாண்டுகளின் ஆரம்பத்தில், நமக்கு ஒன்று தேவையாக இருந்ததைக் குறித்துச் சிறிது சந்தேகம் இருந்தது.
ஜெர்மனி முதல் உலக யுத்தத்தின் பின்விளைவுகளிலிருந்து அதாவது அரசியல் பிளவுகளும் மற்றும் ஸ்திரமின்மையையும் அநேக வருடங்களாக அதிகமாய் அனுபவித்திருந்தது. வியப்பிற்குரிய விதமாக, வேலையில்லாமை உயர்ந்தது; அந்தச் சமயத்தில் நான் ஸ்டட்கார்ட் தையல்காரரிடம் வேலைச் செய்தேன், அவர் ஒரு வாரத்திற்கு நான்கு மார்குகளைச் (ஜெர்மன் பணம்) சம்பளமாக கொடுத்தார், அது, காலை உணவிற்கும் மத்தியானம் சிறிது சூப்பு வாங்குவதற்கு மட்டுமே போதுமானதாயிருந்தது. என்னுடைய சூழ்நிலையும் வித்தியாசமான ஒன்றாக இருக்கவில்லை. ஜெர்மனி அமைதியற்ற நிலையில் இருந்து கொண்டிருந்தது ஆச்சரியமில்லை. நிச்சயமாக, எதிர்காலம் மங்கலான ஒன்றாகத் தோன்றியது.
பிறகு “அவர்” வந்தார்! கடைசியில், தான் செய்து கொண்டிருந்ததை நன்றாக அறிந்த ஒரு மனிதன்! நிச்சயமாகவே, எல்லோரும் அவனோடு ஒத்துக்கொள்ளவில்லை, ஆனால் அவன் அதிகாரத்தோடு நடத்தினான். அதன் விளைவுகளையும் அடைந்தான் என்பதை ஒருவராலும் மறுக்க முடியாது. பொருளாதாரம் உயர்ந்தது; வேலையில்லாமை குறைந்தது. ஒருவரும் பட்டினியாக இருக்கவில்லை. காரியங்கள் மேல்நோக்கி சென்று கொண்டிருந்தன. இது வெற்றியாக இருந்தது, அவன் சொன்ன காரியத்திற்கு நம்பிக்கை அளித்தது.
வைராக்கியமான ஆதரவைக் கொடுப்பது
நான் ஹோலஸ் ஜெர்லிங்கனில் பிறந்து, அங்கே வளர்க்கப்பட்டேன். இது ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கார்ட்டுக்குச் சிறது வெளியே இருக்கும் சிறிய கிராமமாக இருந்தது. உள்ளூர் விளையாட்டுக் கிளப்பின் ஒரு அங்கத்தினனாக இருந்தேன், அதன் அங்கத்தினர்களில் அநேகர் ஹிட்லரை ஆதரித்தபோது நானும் அவர்களைச் சேர்ந்து கொண்டேன். பார்க்கப்போனால், அவன் என்னைக் கவரக்கூடியவனாக இருந்தான், நிலைமைகளை அபிவிருத்தி செய்யும் வாய்ப்பில் பங்கெடுப்பது எனக்குச் கவர்ச்சிகரமாக இருந்தது.
ஹிட்லர் 1933-ல் அதிகாரத்திற்கு வந்தபோது நான் அந்தச் சமயத்தில் 24 வயதாக இருந்தேன்—நான் ஏற்கெனவே ஒரு நாஜிய அரசியல் கட்சியின் அங்கத்தினனாக இருந்தேன். என்னுடைய வைராக்கியத்தைக் கண்ட நண்பர்கள் பின்வருமாறு கூறினர்: “வில்லி, இதை அல்லது அந்த வேலையை நீ எடுத்துக்கொள்வதற்குச் சிறந்த ஒருவனாக இருப்பாய்.” எனவே சிறிது காலத்திற்குள்ளாக, கட்சியில் ஆறு வித்தியாசமான உத்தரவாதமுள்ள ஸ்தானங்களை நான் எடுத்துக் கொண்டேன். அதை மகிமைப் பொருந்தியதாக கருதினேன்.
உதாரணமாக, எங்களுடைய சமுதாயத்தின் கட்சியின் புயல்வேக துருப்புகள் “மர வண்ணச் சட்டை” (Brown-shirt) என்று அழைக்கப்பட்டன. அதற்குத் தலைவன் என்ற ஸ்தானத்திற்கு நான் நியமிக்கப்பட்டேன். பிறகு நான் 2,000 ஹிட்லர் இளைஞருக்கு அதிகாரியாக இருக்க என்னை இது அனுமதித்தது. வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் கட்சியின் சேவையிலிருந்து எல்லோரும் நிச்சயமாக பயன்பெறும் ஒரு காரியத்திற்காக முழு இருதயத்தோடு சேவிப்பது எவ்வளவு கிளர்ச்சியடையும்படி செய்கிறதாக இருந்தது! மூட அபிமானியின் ஆர்வத்தை நான் உடையவனாக இருந்தேன். என்னுடைய எண்ணங்களுக்கு யாராவது முரணாக இருந்தால் அவர்களுக்கு ஐயோ!
தலைவரே ஆஜராயிருக்கும் ஒரு ஸ்டட்கார்ட் வரவேற்பிற்கு நான் நியமிக்கப்பட்டதால் என்னுடைய கிளர்ச்சி எவ்வாறு இருந்திருக்கும் என்று நீங்கள் கற்பனைச் செய்து பாருங்கள். என்னே ஒரு காட்சி! 70,000 நாஜிய துருப்புகள் மற்றும் ஹிட்லர் இளைஞர்கள், மர வண்ணச் சட்டை அணிந்த ஆட்கள் அணி அணியாக ஒரே இயந்திரம் போன்று நகர்ந்து கொண்டிருந்தனர். அதன் உச்சக்கட்டம் வந்தபோது, அந்தத் திரளான ஜனங்களுக்கு முன்பாக “அவருடைய” கையைக் குலுக்கும் கனத்தை நான் பெற்றேன்.
இடையில் குழப்பம்
எனக்கும் மார்த்தாளுக்கும் 1932-ல் திருமணமானது. என்னுடைய குறிக்கோள்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒருதுணைவியைக் கொண்டிருப்பதைப் பற்றி மகிழ்ச்சியடைந்தேன். நான் செய்தவற்றை அவள் ஒத்துக்கொள்ளாத நிலை ஏற்படும்வரை காரியங்கள் நன்றாக சென்று கொண்டிருந்தன. இடையில் யாரோ குழப்பத்தை ஏற்படுத்தினர். இக்குழப்பத்திற்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை—மீனா, என்னுடைய மைத்துனி. அவள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக இருந்தாள், அவள் “புதிதாக கண்டடைந்த சத்தியங்களை” அவளுடைய சகோதரியிடம் சொல்ல தயங்கவில்லை. நான் ஒரு நாஜியனாக இருந்ததினால், இது நிச்சயமாக எனக்கு ஒத்துவரவில்லை.
எங்களுடைய விவாக உறவு அதிக கடினமானது. உதராணமாக, ஒரு நாள் நான் ஸ்டட்கார்டில் கூட்டத்தை முடித்து தலைவரோடு கைகுலுக்கி கிளர்ச்சியடைந்தவனாக வீடு திரும்பியது என் நினைவிற்கு வருகிறது. மார்த்தாள் சிரித்தவாறு என்னைப் பார்த்துச் சொன்னாள்: “இனிமேல் உங்கள் கைகளைக் கழுவ மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.” அது என்னைக் கொஞ்சம் குலுக்கியது. அவ்வகையான கனத்தை அல்லது சிலாக்கியத்தைக் குறித்து அவள் எப்படித் தமாஷாகப் பேச முடியும்? அவள் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லையா?
நான் அடிக்கடி அவளிடம் எரிந்துவிழுந்தேன், ஆனால் அவளோ அமைதலாக பிரதிபலித்தாள், இது என்னை அதிகமாகக் கோபப்படுத்தியது. என்னுடைய கோபத்திற்கும் திட்டுதலுக்கும் மத்தியில், இவ்விதமாக உள் பலத்தை அவள் எங்கிருந்து பெற்றாள்? ஒருமுறை அவளை நான் உண்மையிலே வீட்டைவிட்டுத் துரத்திவிட்டேன். அது உண்மையில் காரியங்களை அபிவிருத்தி செய்யவில்லை, இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. அடுத்த நாள் தாக்குதலான என் பெருமைக்கு மத்தியில், நான் அவளை மறுபடியும் வீட்டிற்குக் கூட்டி வந்தேன். அவளுடைய நடத்தை முன் போலவே இருந்தது—பிழையற்றதாயிருந்தது.
அவள் இல்லை, நான் தானே ஒருவேளை தவறில் இருப்பதை இது காட்டியதா? அந்த எண்ணமே எனக்கு வருத்தத்தை உண்டாக்கிற்று. ஏன், என்னுடைய தனிப்பட்ட கொள்கைகளுக்கும் என்னுடைய உலகத்திற்கும் முடிவாக இருந்தது.
என்னுடைய வாழ்க்கையை மாற்றிய அந்த மூன்று மணி நேரங்கள்
இளைஞர் பட்டாளத்தின் பயிற்சிகளை விட்டு வீடு திரும்பியபோது, காய்ச்சலாக இருந்தேன். நான் படுக்கைக்குச் சென்று, அங்கு மேஜையின் மேல் இருந்த என்னுடைய மனைவியின் பைபிளைக் கண்டேன். அது அசாதாரணமாக இருந்தது. ஏனென்றால் நான் என்னுடைய வெறியான வைராக்கியத்தால் அதை நான் எரித்து விடுவேன் என்று அவள் அறிந்திருந்தாள். என்னுடைய கெளரவத்திற்குக் குறைவாக இருந்தபோதிலும், ஏதோ ஒரு காரணத்திற்காக நான் பைபிளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அங்கே வெளிப்படுத்துதல் 17 மற்றும் 18-ம் அதிகாரத்தில், மகா பாபிலோன் என்று அழைக்கப்பட்ட மகா வேசியைக் குறித்த ஒத்து வசனங்களைப் பார்த்தேன். மார்த்தாள் முன்பு உபயோகித்ததன் காரணமாக அந்தப் பதம் எனக்கு பழக்கப்பட்டதாயிருந்தது, ஆனால் அதனுடைய விளக்கத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ள அதிக பெருமையுடையவனாக இருந்தேன். அது எங்கிருந்து வந்தது என்பதையாவது இப்போது அறிந்து கொண்டேன். ஆனால் அதனுடைய அர்த்தம் எனக்கு இன்னும் தெரியவில்லை.
தெரிந்துகொள்ள தீர்மானித்து, அவளை இன்னொரு அறையிலிருந்து அழைத்தேன். நான் பைபிளைப் பிடித்திருந்ததைப் பார்த்து அதை நாசப்படுத்திவிடுவனோ என்ற பயத்துடன் காணக்கூடிய விதத்தில் அதிர்ச்சியடைந்தாள், என்னுடைய மனைவிக்குச் செவி கொடுக்க அதிக பெருமையுள்ளவனாக, நான் அதிகாரத்தோடு அவளிடம்: “மீனாவை கூப்பிட்டு, இந்தப் பாபிலோன் என்பது யார் என்பதை அவள் எனக்கு விளக்கக்கூடுமா என்று பார்?” என்றேன்.
கான்ஸன்ட்ரேஷன் முகாமிலுள்ள சிறைக்கு வழிநடத்தும் ஒரு வலையாக இது இருக்கக்கூடும் என்று அவளுடைய சகோதரி ஒருவேளை அச்சமயத்தில் நினைத்திருக்கக்கூடும். என்றபோதிலும், அவள் கொண்டிருந்த எவ்விதமான பயத்தையும் நீக்கிப் போட்டாள். மேலும் நாங்கள் பேசினோம். மூன்று மணி நேரம் பேசினோம், அந்த மூன்று மணி நேரம் என்னுடைய வாழ்க்கையையே மாற்றியது.
நான் புராட்டஸ்டன்ட் மதத்தைச் சேர்ந்தவனாக வளர்க்கப்பட்டு, சர்ச்சுக்கு அவ்வப்போது சென்று வந்தேன். ஆனால் உண்மையில் நான் மதப்பற்றுள்ளவனாக இருக்கவில்லை. என்றாலும் இப்போது, பைபிள் மகா பாபிலோனைப் பற்றி பேசுவதானது சர்ச்சுகளை அடையாளப்படுத்திக் காட்டுகிறது என்பதை நான் கவனித்தேன். எவ்வாறு ஜனங்களும் ஜாதிகளும் “அவளுடைய வேசித்தனத்தின் . . . மது”விற்கு அடிமையானார்கள் என்றும் “பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம் பண்ணினது” எப்படி என்றும் எனக்குப் படிப்படியாக உதித்தது. (வெளிப்படுத்துதல் 18:3) இது நாஜி ஜெர்மனியையுங்கூட உட்படுத்தியது.
மீனா எனக்கு அதிகமாக விளக்கினபோது, பைபிள் வார்த்தைகளையும் அதனுடைய நவீன பொருத்துதலையும் நன்றாக புரிந்து கொண்டேன். இத்தனை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இவையெல்லாம் எப்படித் தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டிருக்க முடியும்? அது, என்னை மின்னலைப் போன்று தாக்கியது. அப்போஸ்தலனாகிய பவுல் எவ்வாறு உணர்ந்திருப்பான் என்று நான் அறிந்தேன்—ஏன், இதுதானே சத்தியம்! (அப்போஸ்தலர் 9:1-19) ஒரு தீர்மானத்தைச் செய்ய அதிக நேரம் எடுக்கவில்லை.
அடுத்த நாள், அதிகக் காய்ச்சல் இருந்த போதிலும் நான் எழுந்திருந்து, கட்சி மற்றும் சர்ச்சில் அங்கத்தினனாக இருப்பதிலிருந்து ராஜினாமா செய்தேன். இது நாஜி காட்சியின் ஆறு உத்தரவாதமுள்ள பதவிகளிலிருந்து ராஜினாமா செய்வதையும் உட்படுத்தியது. நாஜி மக்கள் முழு அதிகாரத்தையுடையவர்களாக இருந்ததினால், அவர்களுடைய கருத்துகளோடு ஒத்துவராத எந்தக் காரியமும் இரக்கமில்லாமல் நசுக்கப்படுகிறது. இதை அறிந்துகொள்ள இந்தப் போக்கை ஆதரிக்கும் பேராவலுள்ள ஒரு ஆதரவாளனாக இதுவரையிலும் இருந்தேன். இப்போது என்னுடைய வியாபாரத்திற்கு என்ன நடக்கும்? எனக்கு என்ன நடக்கும்?
உத்தமத்தின் சோதனைகள்
கிராமத்தில் நான் சம்பாஷணையின் முதல் பொருளான பிறகு, மூன்று வாரங்கள் கழித்து, நானும் மாத்தாளும் எங்களுடைய முதல் பிள்ளை பிறந்தபோது மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் எங்களுடைய மகிழ்ச்சி சிறிது காலத்திற்கு மட்டுமே இருந்தது; சிக்கல்கள் ஏற்பட்டன, இரண்டு வாரங்கள் கழித்து பிள்ளை இறந்தது. மார்த்தாளின் உயிர் அடுத்த பல மணிநேரங்கள் ஊசல் ஆடிக்கொண்டிருந்தது. இது கடவுளிடமிருந்து வந்த ஒரு தண்டனையா? மற்றவர்கள் அவ்வாறு நினைத்திருக்கலாம், நாங்களோ அவ்வாறு நினைக்கவில்லை. அன்பின் தேவனாகிய யெகோவாவிடம் எங்களை நெருங்கி வரும்படி செய்தது. அவர் மார்த்தாள் அந்த அபத்துநிலையிலிருந்து வெளியே வரம்படிச் செய்தார். மேலும் உயிர்த்தெழுதலில் எங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தி, மறுபடியுமாக குழந்தை எஸ்தரை பார்க்கும் பலமான நம்பிக்கையை எங்களுக்குக் கொடுத்தார்.
இதற்கிடையில், அங்குள்ள கிராமத்தினர், வெகுகாலமாக என்னுடைய மிகவும் நம்பிக்கையான வாடிக்கையாளருங்கூட என்னுடைய தையல் கடையை விட்டுவிட ஆரம்பித்தனர். ஆனால் அவர்களுக்கு எப்போதுமே நன்றாக சேவை செய்தேன், நேர்மையுடன் உழைத்தேன், சிறந்த வேலையைச் செய்தேன், என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே சில வாரங்களுக்குப் பின்னர் கடைக்கு வராமல் இருந்த போக்கு நின்றுவிட்டது. வாடிக்கைக்காரர் மீண்டும் கடைக்கு வர ஆரம்பித்தனர், ஆகிலும் வேறு சிலர் காணாத வகையில் இரவு நேரங்களில் மட்டுமே வந்தார்கள். சிறிது காலத்திற்குள்ளாக, என் வியாபாரம் முன்பு இருந்ததைவிட அதிகம் முன்னேறியது!
அவ்வப்போது சாட்சிகளின் பிரசுரங்களைப் பெறும்போது, உடனே அவற்றைப் வாசித்துவிட்டு மற்றவர்களிடம் விரைவாகக் கொடுத்துவிடுவோம். ஆனால் இந்தப் பிரசுரங்களின் மீது தடை விதிக்கப்பட்டிருந்ததால், எங்களுடைய வீட்டில் சிலவற்றைக் கண்டுபிடிக்க எண்ணி, அடிக்கடி கெஸ்டாபோ என்ற இரகசிய போலிசார் எங்களுடைய வீட்டுக்கு விஜயம் செய்தனர். ஒருநாள் மத்தியானம் இரண்டு மணிக்கு எதிர்பாராத விதமாக இரண்டு கெஸ்டாபோ பிரதிநிதிகள் வந்தார்கள். அப்போதுதான் வரவேண்டுமா! அந்தச் சாயங்காலமே கொடுத்துவிட வேண்டிய ஒரு சிறு புத்தகத்தை முந்தின நாள்தான் நான் கிடைக்கப் பெற்றிருந்தேன். அவர்கள் தேட ஆரம்பித்தார்கள், ஆனால் திடீரென்று, விரைவாக அவர்கள் போய்விட்டார்கள். தங்கள் கண்களுக்கு முன்னாலேயே ரேடியோவின் மேலே கிடந்த அந்தச் சிறு புத்தகத்தைக் கவனிக்காமலேயே போய்விட்டார்கள்.
கைது செய்யப்படுவோம் என்ற ஆபத்து எப்பொழுதுமே இருந்து கொண்டிருந்தது. நான் கட்சியிலிருந்து விலகினபோது: “வில்லி, நீ செய்கிறது என்னவென்று உனக்குத் தெரியுமா? நீ பைத்தியக்காரன்!” என்று உயர்வான நாஜி அதிகாரி ஒருவர் என்னிடம் சொன்னார். ஆனால் அவருடைய சகோதரன் என் மனைவியின் சகோதரிகளில் ஒருவரை விவாகம் பண்ணியிருந்ததால் குடும்ப பிணைப்பானது என்னைப்பற்றி அறிக்கை செய்யாதபடி நிச்சயமாகவே அவரைத் தடை செய்தது. பட்டணத்தில் என்னைப்பற்றி நன்றாக அறிந்திருந்தவர்களும், என் உண்மைத்தன்மையை உணர்ந்து எனக்கு மரியாதை கொடுத்தவர்களும், நிசப்தம் என்ற சூழ்ச்சியில் ஆழ்ந்துவிட்டதாகக் காணப்பட்டது.
சுயாதீனமான தேர்வு என்றழைக்கப்பட்ட 1935-ன் தேர்வை நான் மறக்கவே மாட்டேன். யெகோவாவின் ராஜ்யத்தின் பேரில் உள்ள பற்றுறுதியின் காரணமாக நடுநிலைமையை வகித்து அரசியலில் எங்களை ஈடுபடுத்திக்கொள்ள மறுத்தோம். அன்று சாயங்காலம் இரவு எட்டு மணிபோல் 80 நாஜிய சைனயத்தின் பகுதியினர் எங்கள் வீட்டுக்கு முன் படையிலிருந்து சென்று எல்லாரும் கேட்கும்படியாக கத்திக்கொண்டு சென்றனர்: “இங்கே வசிப்பவர்கள் ஜெர்மன் தேசத் துரோகிகள். இப்படிப்பட்டவர்களுக்கு ஜெர்மனியில் இடம் கிடையாது. நீங்கள் தூக்கில் இடப்பட வேண்டும். யூதாஸ் சென்றதுபோல சாத்தானிடம் ஓடுங்கள்!”
ஒரு சமயத்தில் நாஜி சேவையிலிருந்த நான், துரோகி என்றழைக்கப்பட நான் விரும்பவில்லை. இயேசு சொன்னதை ஞாபகத்துக்குக் கொண்டுவந்தேன்: “உலகம் உங்களைப் பகைத்தால் அது உங்களைப் பகைக்கிறதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.” (யோவான் 15:18) இந்த வெறுப்புதானே நாங்கள் சரியாக இருக்கிறோம் என்று நிரூபித்தது. இச்சேனையில் அநேகர் தங்களுடைய உயிர்களைத் தோல்வியுற்ற ஒரு காரணத்திற்குப் பலிகொடுத்தவர்களாக இருந்தனர். என்றபோதிலும் யுத்தத்திற்குப்பின் இன்னும் உயிரோடிருந்த இருவர் நேராகவே என்னிடம் வந்து தாங்கள் நடந்துகொண்ட விதத்திற்காக மன்னிப்புக் கேட்டனர்.
செயற்பட எழுந்தனர்
நாஜி ஆட்சியின் தடை ஒன்றுமில்லாமல் ஆனபிறகு உடனேயே ஜெர்மனியில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் மறுபடியும் தங்களை அமைத்துக்கொள்ள ஆரம்பித்தனர். அப்போது ஆறு பேர் மட்டுமே கொண்ட ஹோல்ஸ்ஜர்லிங்கனில் உள்ள எங்களுடைய சிறிய தொகுதி இன்றைக்கு நூறுபேருக்கும் அதிகமாக வளர நான் கண்கூடாக பார்க்கக்கூடியவனாக இருக்கிறேன். எங்களுடைய சொந்தக் குடும்பத்திலிருந்துதானே 28 பேர் பிரசங்கிக்கும் சேவையை எடுத்துக்கொண்டிருப்பதைக் காண்பது எவ்வளவு மகிழ்ச்சி தருவதாய் இருக்கிறது.
இன்று சுமார் 40 வருடங்களுக்கு மேலாக, சபையின் பொறுப்புகளைக் கண்காணிக்கும் கடமைகளை ஆற்றுவதில் நான் சந்தோஷம் அடைந்திருக்கிறேன். நிச்சயமாகவே நாஜி தலைவனாக இருந்தபோது விட்டுக்கொடுக்காத ஆணையிடும் சப்தத்தோடு நிச்சயமாகவே இல்லாமல் கிறிஸ்தவ உதவி மேய்ப்பர்களிடம் எதிர்பார்க்கப்படுகிற அன்பின் ஆவியோடும் தாழ்மையான மனப்பான்மையோடும் ஊழியம் செய்து வந்தேன்.—மத்தேயு 23:10, 11; 1 பேதுரு 5:2, 3.
அக்டோபர் 1934-ல், நாஜி கட்சி கோட்பாடுகளிலிருந்தும் மகா பாபிலோனிலிருந்தும் நான் என்னைத் துண்டித்துக்கொண்ட சமயத்திலிருந்து இப்போது அரை நூற்றாண்டு கடந்துவிட்டிருக்கிறது. அதே மாதத்தில்தானே உலக முழுவதுமான யெகோவாவின் சாட்சிகளின் சபைகள் ஹிட்லருக்கு பின்வரும் தந்தியை அனுப்பினார்கள் என்பதை பல ஆண்டுகளுக்குப்பின் நான் அறியவந்தேன்: “யெகோவாவின் சாட்சிகளை நீர் கொடுமையாக நடத்துவதானது பூமியிலுள்ள எல்லா நல்ல ஆட்களையும் திடுக்கிடச் செய்கிறது, மேலும் கடவுளுடைய பெயருக்கு நிந்தையைக் கொண்டு வருகிறது. யெகோவாவின் சாட்சிகளை தொடர்ந்து துன்புறுத்தாதீர்; இல்லையென்றால் கடவுள் உம்மையும் உம்முடைய தேசியக் கட்சியையும் அழித்துவிடுவார்.” அந்த வார்த்தைகள் நிறைவேறுவதைப் பார்க்க நான் உயிரோடு இருக்கிறேன்.
நாஜி கட்சியின் துரோகத்தனமான பிரச்சாரத்துக்கும் சங்கேத முழக்கங்களுக்கும் ஊடாக அவற்றின் மாய்மாலத்தைச் சரியான சமயத்தில் பார்க்கக்கூடியவனாக இருந்ததற்கு நான் எவ்வளவு சந்தோஷமுள்ளவனாக இருக்கிறேன்! இப்படியாக, என்னுடைய முந்திய கூட்டாளிகள் அனுபவித்ததுபோல, அவர்களுடைய பாவங்களில் பங்குகொண்டு, அதனுடைய வாதைகளின் ஒரு பங்கைப் பெறுவதிலிருந்து நான் தப்பித்துக் கொண்டேன்.—வில்லி உவானர் கூறியது. (g86 4/22)
[பக்கம் 16-ன் சிறு குறிப்பு]
நான் அடிக்கடி அவளிடம் எரிந்துவிழுந்தேன், ஆனால் அவளோ எப்பொழுதுமே அமைதலாகப் பிரதிபலித்தாள்
[பக்கம் 15-ன் படம்]
1928-ல் விளையாட்டுக் கழக நண்பர்கள், ஏற்கெனவே நாஜிகளாக இருந்தனர். இடது பக்கம் நிற்கும் வாலிபனும் (மத்தியில் உட்கார்ந்திருக்கும்) நானும் யெகோவாவின் சாட்சிகளானோம் ரூ.4.50-ம் அனுப்பியுள்ளேன்.
[பக்கம் 18-ன் படம்]
வில்லி வானர், அவருடைய மனைவி மார்த்தாள், மற்றும் அவளுடைய சகோதரி வில்ஹெமீனா