உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g87 9/8 பக். 8-10
  • அந்த மர்மத்துக்கு விளக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அந்த மர்மத்துக்கு விளக்கம்
  • விழித்தெழு!—1987
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மரித்தோர் காரணமா?
  • அந்த மர்மத்திற்கு விளக்கம்
  • மாயவித்தை குறித்து எச்சரிக்கையாயிருங்கள்!
  • ஆவியுலகத்தொடர்பு தவறா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • மாயமந்திரம்—விளையாட்டா? வினையா?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
  • ஆவி உலக தொடர்பு
    விழித்தெழு!—2014
  • ஆவிக்கொள்கை
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1987
g87 9/8 பக். 8-10

அந்த மர்மத்துக்கு விளக்கம்

இயல்புக்கு அப்பாற்பட்ட அந்தச் சக்திகள் மக்கள் அசாதாரணமான செயல்களைச் செய்வதற்கு வழிநடத்தியிருக்கிறது என்ற காரியம் நன்கு ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கிறது. பிரையன் இங்லிஸ் குறிப்பிடுவதாவது: “வரலாற்றின் இடை நிலைகாலம் முதற்கொண்டு இருந்துவந்ததைக் காட்டிலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகள் முறைப்படியான அங்கீகரிப்புக்கு இப்பொழுது அதிக அருகாமையிலிருக்கிறது—அந்தக் காலங்களில் அவை மற்ற இயற்கை சக்திகளைப் போன்று அவ்வளவு இயல்பான ஒன்றாகக் கருதப்பட்டன. முன்னுரைக்கப்படக்கூடிய சில இயற்கை சக்திகளைப் போன்று அவை இல்லாத போதிலும் அச்சமயத்தில் அவற்றை இயல்பாகவே கருதினார்கள்.”

இந்த அசாதாரண சக்திகளுக்கு ஊற்று மூலம் எது? பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெரும்பாலான மனித குடும்பத்தினர் மரித்த ஆத்துமாக்கள் ஆவி உலகில் உயிர்வாழ்கின்றன என்பதை நம்பி வந்திருக்கின்றனர். மேலும் இந்த ஆத்துமாக்கள் அல்லது ஆவிகள் தானே இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு காரணமென்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் அவைதான் காரணமா?

மரித்தோர் காரணமா?

மரித்தோர் உணர்வற்றவர்களாக இருந்தால்—உண்மையாகவே மரித்த நிலையில் இருந்தால்—அப்போது அந்த மாய வித்தைக்குப் பின்னாலுள்ள மர்ம சக்தி மரித்தோரின் ஆவியாக இருப்பது கூடாத காரியம். அப்படியானால் மரித்தோரின் நிலையென்ன?

மனிதனின் சிருஷ்டிப்பை விவரிப்பதாய் வேத வசனம் சொல்வதாவது: “மனிதன் ஜீவ ஆத்துமாவானான்.” (ஆதியாகமம் 2:7) இங்கே மனிதனுக்கு ஒரு ஆத்துமா கொடுக்கப்பட்டது என்ற கருத்து சற்றேனும் இல்லை என்பதைக் கவனியுங்கள். மாறாக, ஆத்துமா தெளிவாக அந்த மனிதனேயாவன். எனவே மனிதன் மரிக்கையில் என்ன நேரிடுகிறது?

இயேசு கிறிஸ்துவைக் குறித்து பைபிள்: “அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றினார்” என்று தீர்க்கதரிசனமுறைத்திருக்கிறது. (ஏசாயா 53:12) மேலும் பொதுவில் மனிதவர்க்கத்தைக் குறித்து வேதவசனம் சொல்வதாவது: “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.” (எசேக்கியேல் 18:4, 20) எல்லாரும் முதல் மனிதனாகிய ஆதாம் கடவுளுக்குக் கீழ்படியாமற்போய் பாவியானதன் காரணமாக, அவனிடமிருந்து பாவத்தைச் சுதந்தரித்திருப்பதால் எல்லா மனித ஆத்துமாக்களும் மரணமடைகின்றன. மேலும் பைபிள் சொல்வதாவது: “பாவத்தின் சம்பளம் மரணம்.” (ரோமர் 5:12; 6:23) எனவே மரணத்தின்போது ஆத்துமா மரிக்கிறது. புலன் உணர்வுகளைக் கொண்ட ஆள் மரிக்கிறான்.

ஆகையால் ஜீவனுள்ளவர்களிடம் மரித்த ஆட்கள் தொடர்பு வைத்துக்கொள்வது கூடிய காரியமா? பைபிள் சொல்வதாவது: “[மனிதன்] தன் கடைசி மூச்சை விடுகிறான். அவன் தூசிக்குத் திரும்புகிறான்; அந்த மணிநேரமே அவனுடைய எல்லா எண்ணங்களும் முடிவடைகின்றன.” மேலும் பைபிள் சொல்வதாவது: “ஆண்டவரை துதிப்பது மரித்தவர்களல்ல, மவுனத்தில் இறங்குகிறவர்களுமல்ல; ஆனால் உயிரோடிருக்கும் நாமே ஆண்டவரைத் துதிக்கிறோம்.”—சங்கீதம் 146:4; 115:17, தி.மொ.

மரித்தவர்கள் கடவுளைத் துதிக்க முடியாது, ஏனெனில் அவர்களுடைய “எண்ணங்கள் முடிவடைந்துவிடுகின்றன.” அப்படியானால் நிச்சயமாகவே அவர்கள் உயிருள்ளோரிடம் தொடர்புகொள்ள முடியாது. அதோடு இயற்கைக்கு அப்பாற்பட்ட எந்தக் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளுக்கும் காரணமாயிருக்க முடியாது. அப்படியானால் யார் காரணம்?

அந்த மர்மத்திற்கு விளக்கம்

மனிதர்கள் மிக உயர்ந்த உயிர்வகையினரல்ல. கடவுள் மனிதனையும் மனுஷியையும் படைத்ததற்கு வெகு காலத்திற்கு முன்பே அவர் ஏராளமான ஆவிக்குரிய குமாரர்களைக் காணக்கூடாத தூதர்களைப் படைத்தார். (யோபு 38:4, 7) பின்பு இவர்களில் ஒருவன் கடவுளை எதிர்க்க ஆரம்பித்தான். அவர் மீது பழியையும் சுமத்தினான். இவ்வாறாக, சாத்தானாகவும் (எதிர்ப்பவனாகவும்), மற்றும் பிசாசாகவும் (பழிதூற்றுபனாகவும்) ஆனான். காலப்போக்கில் பிசாசாகிய சாத்தானின் கலகத்தில் அவனோடுகூட பல ஆவி சிருஷ்டிகளும் சேர்ந்து கொண்டன, இது கலக தூதர்கள் அல்லது பேய்கள் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கியது. இந்த மாயவித்தையின் இயல்புக்கு அப்பாற்பட்ட குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளுக்கு இந்த பேய்கள்தான் காரணமா?

ஆம் அவையே காரணம்! ஜலப்பிரளயத்திற்கு முன்னான காலங்களில் இந்த ஆவி சிருஷ்டிகளான “தேவ புத்திரர்” மாம்ச உருவெடுக்கவும் பூமியிலே வாழவும் கூடிய நிலையிலிருந்தார்கள். (ஆதியாகமம் 6:1, 2; யூதா 6) ஆனால் ஆவி உலகத்திற்குத் திரும்பினது முதற்கொண்டு, மனித சரித்திரம் முழுவதிலும் அவ்வளவு சர்வ சாதாரணமாக இருந்து வந்திருக்கிற இயல்புக்கு அப்பாற்பட்ட குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளை உண்டுபண்ணுவதில் மனிதர்களோடு அவர்கள் கொண்ட தொடர்புகள் வரையறுக்கப்பட்டதாயிருந்திருக்கிறது.

இந்தப் பேய்கள் முக்கியமாய் உயிரோடிருக்கும் உறவினர்களோடும் நண்பர்களோடும் தொடர்பு கொண்டவையாக இருந்திருக்கின்றன. மரித்தவர்கள் எங்கோ ஒரு ஆவி உலகில் இன்னமும் வாழ்கின்றனர் என்று நம்பும்படி செய்திருக்கின்றன. மரித்தவர்களைப் போன்ற உருவில் தோன்றுவது பேய்களுக்குச் சிரமமல்ல. ஏனெனில் மக்கள் உயிரோடிருக்கையில் அவர்களை அவை நெருக்கமாக உற்றுபார்க்க முடியும். இவ்வாறாக ஒரு ஆளினுடைய வாழ்க்கையின் அந்தரங்கமான விவரங்களையும் குரலின் ஓசையையும் மற்றும் பேசும் விதங்களையும் மிகத்துல்லிபமாக நடித்துகாட்ட முடியும்.

ஆனால் உண்மையுள்ள தேவதூதர்களைப் பற்றியது என்ன? அவர்கள் ஒருவேளை இன்று மனிதவர்க்கத்துடன் தொடர்புகொள்ளுகிறார்களா என்று நீங்கள் கேட்கக்கூடும். பூர்வ காலங்களில் மனிதருடன் தொடர்புகொள்ள கடவுள் தூதர்களைப் பயன்படுத்தினார் என்பது உண்மையே. ஆனால் இன்று நமக்குப் பூர்த்தி செய்யப்பட்ட பைபிளை கடவுளுடைய நேரிடையான மற்றும் போதுமான வார்த்தைகளைத் தகவல் தொடர்பாக கொண்டிருக்கிறோம். (2 தீமோத்தேயு 3:16, 17) அதில் யெகோவா தேவன் முக்கியமாய் மனிதர்கள் இந்த ஆவிகளுடன் தொடர்பு வைத்துக்கொள்ள முயற்சி செய்வதைத் தடை செய்கிறார்.

தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயா மூலம் கடவுள் சொல்வதாவது: “ஆனால் முணுமுணுப்பவர்களும் ஓதுபவர்களுமான அஞ்சனக்காரரிடத்திலும் குறிசொல்லுபவர்களிடத்திலுமல்லவா நீங்கள் விசாரிக்க வேண்டும் என்று ஜனங்கள் உங்களுக்குச் சொல்லுவார்கள். எப்படியிருந்தாலும் ஆவிகளிடமிருந்தல்லவா ஜனங்கள் விஷயங்களைக் கேட்டறிய வேண்டும். உயிருள்ளோருக்காக மரித்தோரிடமல்லவா விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லுவார்கள். அப்பொழுது நீங்கள் ‘ஆண்டவர் உங்களுக்குச் சொல்வதைக் கேளுங்கள்! குறிசொல்லுதலுக்குச் செவி கொடாதிருங்கள்—அவர்கள் என்ன சொல்லுகிறார்களோ அது உங்களுக்கு நன்மை செய்யாது’ என்று அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.”—ஏசாயா 8:19, 20.—டுடேஸ் இங்கிலிஷ் வெர்ஷன்.

மாயவித்தையின் ஈடுபாடுகளைத் தவிர்க்கும்படி இஸ்ரவேல் தேசத்தினருக்குக் கடவுள் விவரமான ஆலோசனைகளை வழங்கியதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது கானானியர்களுடைய அருவருப்பான வழக்கங்களில் சிக்கிக்கொள்ளாதே என்று அவர்களை எச்சரித்தார். (லேவி. 18:3, 30) இந்த வழக்கங்கள் அல்லது செயல்கள் உபாகமம் 18:10, 11-ல் பட்டியலிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. அவற்றில் சகுனம் பார்ப்பது மந்திரவித்தைகளில் ஈடுபடுவது அஞ்சனம் பார்ப்பது, சூனியம், வசியம் செய்வது ஜோசியம் பார்ப்பது, செத்தவர்களிடத்தில் குறிகேட்பது அடங்கும்.

மாயவித்தை குறித்து எச்சரிக்கையாயிருங்கள்!

முதல் பார்வையில், அந்த வழக்கங்கள் தீங்கற்றவையாகத் தோன்றக்கூடும். ஆனால் அங்கேயே அபாயம் மறைந்து இருக்கிறது. அது எப்படி? ஏனெனில் அந்தச் செயல்கள், பேய்களின் பிடியில் சிக்கிக்கொள்வதற்கு வழிநடத்தக்கூடும். கானானியர்களின் ஒழுக்கக்கேடுகளும் மேலும் அவர்களுடைய பாலுறவு வெறி மற்றும் வன்முறை வெறி ஆகியவையும் இதற்குச் சான்றுகளாக இருந்தன.

அவ்வாறே இன்று, இயல்புக்கு அப்பாற்பட்ட காரியங்களை ஆர்வத்தோடு நாடிச்செல்லுவதில் அதற்கொப்பான அபாயம் இருக்கிறது. பேய் சக்திகளின் வலைகளில் சிக்கிகொள்வதற்கு வழிநடத்தக்கூடிய தூண்டில் இறையாக அது இருக்கக்கூடும். நம்முடைய நாட்களிலிருக்கும் மாயவித்தைகளில் அப்படிப் பாலுறவும் வன்முறையும் சம்பந்தப்பட்டிருக்கிறதா என்ற ஒரு அறிக்கையைக் காண்பதற்காக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆகவே அந்த எச்சரிக்கைக்குச் செவி கொடுப்பது உங்களுக்கே நன்மையாக முடியும்.

பண்டைய இஸ்ரவேலருக்குக் கடவுளுடைய கட்டளையானது இந்த மாயவித்தைகளைத் தவிர்ப்பதற்கு இன்னும் கூடுதலான மிக முக்கியமான காரணத்தைக் கொடுக்கிறது. “இப்படிப்பட்டவைகளை செய்கிற எவனும் கர்த்தருக்கு [யெகோவாவுக்கு] அருவருப்பானவன்” (உபாகமம் 18:12) ஆவியினால் ஏவப்பட்டு எழுதிய கிறிஸ்தவ பைபிள் எழுத்தாளர்கள் இந்த அடிப்படை சத்தியத்தை ஒத்துக்கொள்கின்றனர். அப்போஸ்தலனாகிய பவுல் இந்த “பில்லி சூனியத்தை” அல்லது “அவியுலக தொடர்பை” “[பாவ] மாம்சத்தின் கிரியைகளில்” ஒன்றாக இருப்பதாக விவரிக்கிறான். (கலாத்தியர் 5:19, 20) மேலும் அப்போஸ்தலனாகிய யோவான் கடவுளுடைய எச்சரிப்பை எழுதினான். “சூனியக்காரரும் [ஆவியுலக தொடர்புகளில் ஈடுபடுகிறவர்களும்] இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்.”—வெளிப்படுத்துதல் 21:8.

உவிஜா பலகை போன்று அவ்வளவு தீங்கற்றதாகத் தோன்றக்கூடிய எந்த ஒரு காரியத்திலும் விளையாடுவதில் ஆபத்தான விளைவுகள் இருக்கமுடியாது என்று சில ஆட்கள் நம்பக்கூடும். என்றபோதிலும் இங்கிலாந்திலுள்ள பேரூந்து ஓட்டுனர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தின்போது அந்தக் காரியங்கள் ஒன்றில் விளையாடினார்கள். தாங்கள் ஒருவர் பேரில் ஒருவர் கொண்டிருந்த மனநிலை மாற்றமடைவதை அவர்கள் கண்டார்கள். ஒரு சிலர் வழக்கத்திற்கு மாறாக மூர்க்கமுள்ளவர்களானார்கள். இந்த மனநிலை அவர்களுடைய வாகன ஓட்டுதலையும் பாதித்தது. எந்தக் காரணமுமின்றி எதிரே வரும் வாகனத்தின்மீது மோதும்படி சொல்லும் பலமான தூண்டுதலை தாங்கள் உணர்ந்ததாக அவர்கள் அறிக்கை செய்தார்கள்.

மேலும் உவிஜா பலகை விஷயத்தை சோதனை செய்துபார்த்த ஒரு இளம் பெண் இருக்கிறாள். இவள் கடந்த காலத்தைப் பற்றி தன் மனதை தொல்லைப்படுத்தும் ஆவேசம் அடைந்தாள். 300 ஆண்டுகளுக்கு முன்பாக மரித்துப்போன ஒரு மனிதனுடன் அவள் காதல் கொண்டிருந்ததாக நம்பினாள். அவனோடு தொடர்புகொள்ள இவள் முயற்சி செய்துகொண்டிருந்தாள். அவளுடைய வெறி இறுதியில் அவள் தன்னை ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொள்ளும்படி வழிநடத்தியது. இந்தக் காரியத்தை விசாரணை நடத்திய போலிஸாருக்கு சில நாட் குறிப்பேடுகள் (டயரிகள்) கிடைத்தன. அதில் தன் காதலனை சேர்ந்து கொள்வதற்காக அவள் சாக விரும்பியதாக எழுதியிருந்தது.

எனவே மாய வித்தையில் மிதமிஞ்சிய வகையில் நான் கவர்ச்சிக்கப்படவில்லை என்று நீங்கள் நினைத்தாலும்கூட எச்சரிக்கையாயிருங்கள்! வேதவசன புத்திமதிக்குச் செவிக்கொடுங்கள்: “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்” இந்த மாயவித்தைக்குப் பின்னால் இருப்பது யார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.” உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோவென்று வகை தேடி சுற்றித்திரிகிறான்.” (1 பேதுரு 5:8) அங்கே “எவனை” என்று சொல்லப்பட்டிருப்பது நீங்களாக இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

பிசாசும் பேய்களும் உண்மையாகவே இருக்கின்றனர். மேலும் அவர்கள் ஒரு ஆளுடைய வாழ்க்கையில் மெய்யாகவே செல்வாக்குச் செலுத்தக்கூடும். அது பின்வரும் கட்டுரையில் விவரித்துக் காட்டப்பட்டிருக்கிறது. (g86 8/22)

[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]

மரித்தோருடனா அவர்கள் தொடர்புகொள்கிறார்கள்?

[பக்கம் 9-ன் படம்]

300 ஆண்டுகளுக்கு முன்பாக மரித்துப்போன ஒரு மனிதனுடன் அவள் காதல் கொண்டிருந்ததாக நம்பினாள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்