தற்கால சந்ததிக்கு நிச்சயமான ஒரு எதிர்பார்ப்பு
“உங்களால் உலகத்தை மாற்ற முடிந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?” “காரியங்களை மாற்றுவதற்கு முழு வல்லமையை கொண்டிருப்பதாக கனவு காண்பது நடைமுறைக்கு ஒத்துவராத கற்பனையாக இருக்கிறது” என்பதாக நினைக்கும் ஜெர்மானிய இளைஞன் சுவெனைப் போல சில இளைஞர்கள் பதிலளிப்பார்கள்.
மேம்பட்ட நிலைக்கு இதைக் கொண்டுவர மாற்றங்களைச் செய்வதற்குத் தங்களுக்குத் திறமையிருந்தால், அவர்கள் என்ன செய்வார்கள் என்பதாக மற்றவர்கள் சொன்னார்கள். மனிதவர்க்கத்தின் பிரச்னைகளில் சிலவற்றிற்கு அவர்கள் கூறும் பரிகாரம் பைபிளில் எடுத்துரைக்கப்பட்டவைகளுக்கு வெகு அருகாமையில் உள்ளது.
இளைஞர்கள் என்ன செய்வார்கள் கடவுள் வாக்களிப்பது என்ன
அனைவருக்கும் அக்கறையூட்டும் வேலை
வடக்கு ப்ரான்ஸிலுள்ள பதினேழு வயது ஜாக்கி, அனைவருக்கும் மனநிறைவை அளிக்கும்
மனிதர்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதற்காக, வேல இருக்கும்.
இயந்திர மனிதர்களைக் குறைத்துவிடுவதன் மூலம் மனிதர்கள் தங்கள் உழைப்பின் பலனை
தொழில் நுணுக்கத் துறையைக் கட்டுப்பாட்டுக்குள் அனுபவித்துக் களிப்பார்கள்.
வைப்பான். ஜெர்மன் குடியரசில் “வீடுகளைக் கட்டி, அவைகளில்
ஹம்பர்க்கிலுள்ள சூசன், குடியிருப்பார்கள் . . .
கைகளால் வேலை செய்யும் தொழில்களையே அவர்கள் கட்டுகிறதும் வேறொருவர்
காண விரும்புகிறாள்—செம்மான்கள், கட்டட கலைஞர்கள், குடியிருக்கிறதும் அவர்கள்
ஆலை நடத்துபவர்கள், தச்சர்கள் மற்றும் பலர். நாட்டுகிறதும் வேறொருவர்
கனிப்புசிக்கிறதுமாயிருப்பதில்லை
. . .நான் தெரிந்து
கொண்டவர்கள் தங்கள் கைகளின்
கிரியைகளை நெடுநாளாய்
அனுபவிப்பார்கள். அவர்கள்
விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள்
துன்பமுண்டாகப் பிள்ளைகளைப்
பெறுவதுமில்லை.”—ஏசாயா 65:21-23.
பூமியில் சமாதானம்
அநேக இளைஞர்களைப்போலவே ஜெர்மன் பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற
குடியரசிலுள்ள 14 வயது கார்லா, யெகோவாவுடைய செய்கைகளை
“குண்டுகளையும் போர்களையும் வந்து பாருங்கள். அவர் பூமியின் கடை
ஒழித்து”விடுவாள். ஜப்பானிலிருந்து வரும் முனைமட்டும் யுத்தங்களை
இளைஞன் ஜன் “அனைவருக்கும் சமாதானத்தைக் ஓயப்பண்ணுகிறார்.”—சங்கீதம் 46:8, 9.
கொண்டு” வருவான். ப்ரான்ஸிலுள்ள டெல்டீனும்
கூட “உலகம் முழுவதிலும் போர்களை
ஒழித்து” விடுவாள்.
ஐக்கியப்பட்ட ஓர் உலகம்
கனாடா தேசத்தைச் சேர்ந்த ஜான் என்ற இளைஞன், “சகல ஜனங்களும் ஜாதியாரும்
“உலகத்தை ஒரே சமுதாயமாக ஒன்றாகக்” பாஷைக்காரரும்அவரையே
கொண்டு வருவான். ஜப்பானிலுள்ள மைக்கோ சேவிக்கும்படி அவருக்குக் [இயேசுவுக்கு]
என்ற இளம் பெண் ஒற்றுமையை எவ்விதமாக கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும்
முயன்று பெற முடியும் என்று தான் நினைப்பதை கொடுக்கப்பட்டது.” “திரளான ஜாதிகள்
இவ்விதமாக விளக்குகிறாள்: “நல்ல ஆட்கள் புறப்பட்டு வந்து: நாம் யெகோவாவின்
மட்டுமே வாழக்கூடிய ஒரு தேசத்தை பர்வதத்துக்குப் போவோம் வாருங்கள்
நான் உண்டாக்குவேன்.” ப்ரேஸிலிலிருந்து . . அவர் தமது வழிகளை நமக்குப்
வரும் மில்டன் கூடுதலான யோசனைகளைத் போதிப்பார், நாம் அவர்
தெரிவிக்கிறான்: “ஒரே அரசாங்கத்தையும் ஒரே பாதைகளில் நடப்போம் என்பார்கள்.”—
மதத்தையுமுடைய ஐக்கியப்பட்ட ஒரு உலகத்தை தானியேல் 7:14; மீகா 4:2.
நான் காண விரும்புகிறேன்.”
மேலேயுள்ள ஒப்பீடான மதிப்பீடுகள் காண்பிக்கிறபடியே கடவுள் வாக்களிக்கும் எதிர்காலம், அநேக இளைஞர்கள் விரும்பும் எதிர்காலமாகவே இருக்கிறது. இந்த எதிர்கால நிலை உண்மையாக கைகூடிவரும். ஏனென்றால், யெகோவாவிடம் பேசுகையில் சங்கீதக்காரன் இந்த உறுதி மொழியை தருகிறான்: “நீர் உமது கையைத் திறந்து சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.” (சங்கீதம் 145:16) ஆனால் இந்த வாக்குத்தத்தங்கள் எப்போது நிறைவேறும்? வேறு சில இளைஞர்கள் எவ்விதமாக பதிலளிக்கிறார்கள் என்று நாம் பார்க்கலாம்.
ஒரு மாற்றத்துக்குரிய காலம் சமீபித்து விட்டது!
ப்ரான்ஸிலிருந்து வரும் கேரலுக்கு “மகத்தான நம்பிக்கை” இருக்கிறது. சமீப எதிர்காலத்தில், “நாம் வாழ்ந்து வரும் உலகத்தைப் போல் இல்லாமல்—மகத்தான எதோ ஒன்றை” அவள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதே தேசத்தில் வாழ்ந்து வரும் சாமுவேலும் கூட முழுமையான ஒரு மாற்றத்தைக் குறித்து நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறான்: “2000 ஆண்டில் உலகம் ஒரு அழகிய பரதீஸாக மாற்றப்படுவதை நான் என் மன கண்ணில் பார்க்கிறேன்! ஆனால் இன்றைய உலகமோ அல்லது அதை ஆட்சி செய்பவர்களோ அந்த நாளை காண உயிரோடிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. . . . காரிய ஒழுங்கின் கடைசி நாட்களில் நாம் வாழ்ந்து வருகிறோம்.” 16 வயது நிரம்பிய ஜெர்மானிய பெண் ரூத்தும் கூட இந்தக் காரியங்களை நம்புவதாகச் சொல்கிறாள்: “உலகத்தை மாற்றி, காரியங்களை சரி செய்வதற்கு எனக்கு சாமர்த்தியம் போதாது என்பது எனக்குத் தெரியும். நம்முடைய சிருஷ்டிகராகிய யெகோவாவால் மாத்திரமே அதை சீக்கிரத்தில் செய்ய முடியும், செய்யவும் போகிறார்.”
ஆனால் கடைசியாக பேட்டி காணப்பட்ட இந்த இளைஞர்கள், சமீப எதிர்காலத்தில் பிரயோஜனமான மாற்றங்கள் வரும் என்பதில் ஏன் அத்தனை நிச்சயமாக இருக்கிறார்கள்? காரணம், அவர்கள் கடவுளுடைய வாக்குத்தத்தங்களைப் பற்றி அவருடைய வார்த்தையாகிய பைபிளின் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளாக அவர்கள் மேன்மையான ஒன்றை—நியாயமும் சமாதானமுமான ஒரு உலகத்தைக் காண்பதை உறுதியாக நம்புகிறார்கள். கடவுளுடைய வாக்குத்தத்தத்தின்படி அங்கே வியாதியும் மரணமும் கூட இருக்காது.—2 பேதுரு 3:13; வெளிப்படுத்தின விசேஷம் 21:3, 4.
பைபிள் தீர்க்கதரிசனங்களைக் கூர்ந்து ஆராய்கையில், வரலாற்றில் சிலாக்கியமான ஒரு காலப் பகுதியில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை இந்த இளம் சாட்சிகள் தெரிந்து கொள்கிறார்கள். ஏனென்றால் கடவுள் மனிதனின் விவகாரங்களில் தலையிட்டு பூமியிலிருந்து அநீதிகளைத் துடைத்தழிப்பதற்குரிய சமயம் வந்து விட்டது. கடவுளுடைய குறுக்கீட்டுக்கு முன்னாக இருக்கும் இந்தக் குறுகிய காலப் பகுதியை, “முடிவின் காலம்” என்று வேதாகமம் அழைக்கிறது. இந்தக் காலப்பகுதி ஒரு “சந்ததி”க்கு மேலாக நீடிக்காது என்றும் அது குறிப்பாக தெரிவிக்கிறது. போர்கள், பூமியதிர்ச்சிகள், கொள்ளை நோய்கள், பயம் வளர்ந்து வரும் பாதுகாப்பின்மை ஆகிய இவை அனைத்தினாலும் இந்தக் காலப்பகுதி அடையாளங் கண்டு கொள்ளப்படும். 1914 முதற்கொண்டு இவை அனைத்தும் நிறைவேறி வந்திருக்கின்றன. 1914-ன் “சந்ததி”யினர் இப்பொழுது வயதானவர்களாகிவிட்டபடியால், கடவுளுடைய வாக்கு உண்மையில் இன்று இளைஞர்களுக்கு காலத்துக்கேற்ற செய்தியாக இருக்கிறது.—தானியேல் 12:4; மத்தேயு 24:3.
உங்கள் எதிர்காலத்துக்காக தயார் செய்தல்
அப்படியென்றால், எதிர்காலத்தினிடமாக நம்முடைய மனநிலை என்னவாக இருக்க வேண்டும்? ஒவ்வொருவருக்கும் தெரிவு செய்யும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. பிரெஞ்சு பத்திரிக்கை ஆசிரியர் இவ்விதமாகச் சொல்கிறார்: “எதிர்காலத்தில் அக்கறையை காண்பிக்க இரண்டு வழிகள் இருக்கின்றன: ஒன்று இரயில் பயணம் செய்யும் ஒரு நாட்டுப்புற பகுதிகள் கடந்து போவதைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல அதைக் கற்பனை செய்வது; மற்றொன்று அதற்காக தயார் செய்வது. எதை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புவீர்கள்?
இருண்ட ஒரு எதிர்காலத்தை நினைத்து பயத்தில் வாழ்வதற்குப் பதிலாக, இளம் யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளுக்கு உறுதியான ஆதாரம் இருக்கின்றதா என்பதைக் கண்டுபிடிக்க அவற்றை நீங்கள் ஆராய்ந்து பார்க்க விரும்பக்கூடும். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரோடு கடவுளுடைய வார்த்தையை ஏன் படிக்க ஆரம்பிக்கக் கூடாது? செயல்படாமல், வெறுமென எதிர்காலத்துக்காக காத்திருப்பதற்குப் பதிலாக, அதற்காக தயார் செய்ய நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். எதிர்காலத்தின் மகத்தான நம்பிக்கை உங்களுடையதாக இருக்கக்கூடும். (g86 11/8)
[பக்கம் 8-ன் பெட்டி]
நாளை இன்று போலிருக்கிறதா?
எதிர்காலத்தை கற்பனை செய்கையில், ஜனங்கள் அநேகமாக அதைத் தங்களுடைய தற்கால வாழ்க்கையின் நீடிப்பாகவே நினைக்கிறார்கள். அணுகுண்டின் தந்தைகளில் ஒருவரான பிரபல அமெரிக்க இயற்பியல் ஆய்வாளர் ராபர்ட் ஒப்பன் ஹீமர் எதிர்காலத்தை ஏன் அவ்விதமாக முன்னறிய முடியாது என்பதாக தான் நினைப்பதை விளக்கினார்: “எதிர்காலத்தை முன்னறிந்து அதை முன்னுரைக்க முயற்சி செய்வதில் ஒரு ஆபத்து இருக்கிறது. நேற்றைய எதிர்பாரா நிகழ்ச்சிகள், நாளை என்ன நடக்கும் என்பதைத் தீர்மானிக்கிறது என்பதாக நாம் அநேகமாக நம்பிவிடுகிறோம். . . . ஆனால் நல்லதானாலும் கட்டதானாலும் நாளை என்பது புதுமையானதாகவே இருக்கிறது. அது தற்செயல் நிகழ்வின் புதுமையாக, ஒரு முன்னுரைக்க முடியாத வகையில் காரியங்கள் ஒன்று சேருகின்றன. . . . இன்று முன்னறிவிக்க முடியாததே மறுநாளை உண்டு பண்ணுகிறது; இன்று நடக்கும் காரியத்தால் அது தீர்மானிக்கப்படுவதில்லை.”
மனிதன் தன்னுடைய சொந்த திறமையினால் எதிர்காலத்துக்குள் உற்று பார்க்க முடியாதிருப்பதன் காரணமாக, மிக உயர்ந்த புத்திக்கூர்மையுள்ள ஒருவரை அவன் கலந்தாலோசிப்பது அவசியமாகும். கடவுளுக்குத் தேவையான திறமையிருப்பதாக பைபிள் அவரைப் பின்வருமாறு வருணிக்கிறது: “நானே . . . அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும் இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வ கால முதற்கொண்டும் அறிவிக்கிறேன்.” ஆகவே எதிர்காலம் எதை கொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க மனிதன் அவரிடம் மாத்திரமே போக வேண்டும்.—ஏசாயா 46:9, 10.