தீமையை ஆராய்தல் அகஸ்டின் முதல் கால்வின் வரையாக
கடவுளல்ல மனிதனே தீமைக்கு பொறுப்புள்ளவனாக இருக்கிறான் என்பதாக கடவுளின் நகரம் என்ற தன்னுடைய புத்தகத்தில் ஐந்தாம் நூற்றாண்டு அகஸ்டீன் வாதாடியிருக்கிறார். அகஸ்டீன் எழுதியதாவது: “துன்மார்க்கத்தை அல்ல, ஆனால் இயற்கையைப் படைத்த கடவுள் மனிதனை செம்மையாகவே சிருஷ்டித்திருக்கிறார்; ஆனால் மனிதன் தன்சொந்த விருப்பத்தின்படி கெட்டு நியாயமாகவே கண்டனம் செய்யப்பட்டு, சீரழிந்து கண்டனம் செய்யப்பட்ட பிள்ளைகளை பிறப்பித்திருக்கிறான் . . . ஆகவே சுயாதீனத்தை தவறாக பயன்படுத்தியதிலிருந்து இதன் விளைவாக இந்த முழு தீமையுமே ஆரம்பமானது.”
சுயாதீனத்தை தவறான முறையில் பயன்படுத்தியிருப்பது, மக்களை அல்லலுக்குட்படுத்தியிருக்கும் பெரும்பாலான தீமைக்கு விளக்கமாக அமையலாம். என்றபோதிலும் சான் ரமோனில் ஏற்பட்டது போன்ற ஒரு விபத்துக்கு மனிதனின் சுயாதீனத்தின் மீது பழிபோட முடியுமா? அநேக துன்பமான நிகழ்ச்சிகள் மனித கட்டுப்பாட்டுக்கு அப்பாலுள்ள சூழ்நிலைமைகளால் உண்டாகின்றன அல்லவா? மனிதன் மனமார வேண்டுமென்றே தீமையை தெரிந்து கொண்டாலும் கூட அன்புள்ள ஒரு கடவுள் ஏன் தீமை தொடர்ந்திருப்பதை அனுமதிப்பார்? பதினாராம் நூற்றாண்டில், பிரெஞ்சு புராட்டஸ்டண்டு இறைமையியல் வல்லுநராக ஜான் கால்வின், அகஸ்டினைப் போலவே, “பிள்ளைகளாகவும் பரலோக ராஜ்யத்தின் சுதந்திரவாளிகளாகவும் இருப்பதற்கு [கடவுளால்] முன்குறிக்கப்பட்டவர்கள்” இருக்கிறார்கள் என்பதாக விவாதித்தார். என்றபோதிலும், கால்வின் காரியங்களை ஒரு படி அதிகமாக எடுத்துச் சென்று, கடவுள், “அவருடைய கோபாக்கினையைப் பெற இருப்பவர்களையும்” கூட முன்கூட்டியே தீர்மானித்து முடிவு செய்து விடுகிறார் என்பதாக விவாதித்தார். இவர்கள் நித்திய தண்டனைக்குத் தீர்ப்பளிக்கப்படுகிறார்கள்!
கால்வினின் கோட்பாட்டில் பயங்கரமான அர்த்தங்கள் அடங்கியிருந்தன. ஒரு மனிதன் எந்தவிதமான ஒரு துரதிருஷ்டத்தை அனுபவித்தாலும், அவன் கண்டனம் செய்யப்பட்டவர்களில் ஒருவனாக இருக்கிறான் என்பதை அது அர்த்தப்படுத்தாதா? மேலுமாக கடவுள் யாருடைய செயல்களை முன் முடிவு செய்தாரோ அவர்களுக்கு அவர் பொறுப்புள்ளவராக இருக்க மாட்டாரா? இவ்விதமாக கால்வின் தன்னை அறியாமலே கடவுளைப் பாவத்தின் சிருஷ்டிகராக்கிவிட்டிருக்கிறார்! “மனிதன் மிகவும் ஆயத்தமான மற்றும் தீர்மானமான விருப்பத்தின் ஒப்புதலோடுதானே பாவம் செய்கிறான்” என்று கால்வின் சொன்னார்.—ஜான் கால்வின் எழுதிய விசுவாசத்தில் அறிவுரைகள்.
என்றபோதிலும் சுயாதீனம் முன்முடிவு போன்ற கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரணாகவே நிரூபித்திருக்கின்றன. நமது பக்குவமற்ற மனம் நிச்சயமாகவே இதனை தெளிவாக ஏற்றுக்கொள்ளவோ அல்லது [முன்முடிவு] போன்ற இப்படிப்பட்ட மகா ஞானத்தை நம்முடைய சிறு புத்தியினால் புரிந்துகொள்ளவோ முடியாது” என்பதாக சொல்வதன் மூலம் தடுமாறச் செய்யும் முரண்பாடுகளைக் கால்வினால் பூசி மெழுகிவிட மட்டுமே முடிந்தது. (g87 10⁄8)
[பக்கம் 6-ன் படங்கள்]
ஜான் கால்வின்
அகஸ்டீன்