“வயிற்றுப் பிழைப்புக்காகப் பாடுபடும் ஒரு பறவைதானே”
அது கடினமாக உழைக்கிறது, தனது இனத்தை சேர்ந்தவரை பாதுகாக்கிறது, வேலைகளில் பங்கு கொள்கிறது, அடைகாக்கிறது, கூட்டை விட்டு வெளியேறாத குஞ்சுகளை பாதுகாக்கிறது, இறகு முளைத்த குஞ்சுகளுக்கு உணவு அளிக்கிறது, ஓய்வெடுக்காமல் மாதங்கள் கணக்கில் கடினமாக உழைக்கிறது. கருவாலிக் கொட்டை மரங்கொத்தி என்ற தன் பெயருக்கு ஏற்ப, மரங்களில் துவாரங்களை அலகினால் கொத்தி குளிர்காலத்துக்குத் தேவையான கருவாலிக் கொட்டைகளை சேகரித்து வைக்கிறது. ஒரு பெரிய தேவதாரு மரத்தில் 50,000 கருவாலிக் கொட்டைகள் பதித்து வைக்கப்பட்டிருந்ததாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இவைகளெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் தன்னுடைய பொருட்கிடங்குக்காக, மின்சார மற்றும் தொலைபேசி கம்பிகளைக் கடத்த உபயோகிக்கப்படும் மரக்கம்பங்களுக்கு அது வருகையில் ஒரு பிரச்னை எழும்புகிறது. துவாரங்களினால் அடிக்கடி தாக்குவதால் கம்பங்கள் வலுவற்று போகின்றன. சிலவற்றிற்குப் பதில் வைப்பு செய்ய வேண்டியுள்ளது. ஒரு கம்பத்துக்கு 1,20,000 ரூபாயிலிருந்து 1,95,000 ரூபாய் வரையாக செலவாகிறது. ஆகவே இந்த மரங்கொத்தி இனம் தொந்தரவு கொடுத்து பணச்செலவையும் உண்டுபண்ணுகிறது என்பதை அது அர்த்தப்படுத்துகிறது!
அரிசோனா வேட்டை விலங்கு மற்றும் மீன்துறையின் வனவிலங்கு மேலாளர் அனுதாபம் காண்பிப்பவராய், “வயிற்றுப் பிழைப்புக்காகப் பாடுபடும் ஒரு பறவை தானே” என்று சொல்கிறார். இதுவரை மின்சார கம்பெனியும்கூட அனுதாபம் காண்பித்தது, ஆனால் உறுதியாகவும் இருந்து வந்திருக்கிறது. மின்சக்தி கடந்து செல்ல வேண்டும். உலோகப் பொருள், சிமெண்ட் கலவை மற்றும் இழைக் கண்ணாடி இவைகளால் ஆன கம்பங்கள் உபயோகிக்க முயற்சிசெய்யப்பட்டிருக்கிறது. இதற்குச் செலவு அதிகமாகிறது. கம்பங்கள் மென்மையான வலைக் கம்பியினால் மூடப்பட்டது. அதே முடிவு. பாலி எத்திலீன் வலை சூடான தென்மேற்கு சூரிய வெப்பத்தினால் சேதமாகிறது. ரப்பர் பாம்புகள் கம்பங்களில் பொருத்தப்பட்டது, ஆனால் அவை சீக்கிரத்தில் அசட்டை செய்யப்பட்டன. மரங்கொத்திகளுக்கு வெறுப்பூட்டக்கூடிய, அதற்கென்று தயாரிக்கப்பட்ட வேதியல் பொருள் கம்பங்களில் தெளிக்கப்பட்டன. டெக்ஸாஸில் இதற்குப் பலன்கிடைத்தது. ஆனால் அரிசோனாவில் இதற்கு முடிவு காணமுடியவில்லை.
கடைசியாக வந்த அறிக்கையில், மரங்கொத்தி போர்கள் தொடர்ந்து செய்யப்பட்டுவருகிறது. ஆனால் கருவாலிக் கொட்டை மரங்கொத்தி இன்னும் எப்படியோ சமாளித்து உயிர்வாழ்ந்து வருகிறது. மேலும் அவன் வியப்புத்தருகிற அழகான ஆளாக இருக்கிறான்! (g88 5⁄22)