உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g89 9/8 பக். 4-6
  • அணுசக்தியின் குழப்பமான நிலை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அணுசக்தியின் குழப்பமான நிலை
  • விழித்தெழு!—1989
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நீக்குவதற்கான அழைப்பு
  • ஒரு தடையாக உள்ள குண்டு
  • அணு ஆயுதப் போர் அச்சுறுத்துகிறவர்கள் யார்?
    விழித்தெழு!—2004
  • அணு ஆயுத அச்சுறுத்தல்—இப்போதைக்கு ஓயாது!
    விழித்தெழு!—1999
  • அணு ஆயுதப் போரைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
    வேறுசில தலைப்புகள்
  • அணு ஆயுதப் போர்—இன்னும் அச்சுறுத்துகிறதா?
    விழித்தெழு!—2004
மேலும் பார்க்க
விழித்தெழு!—1989
g89 9/8 பக். 4-6

அணுசக்தியின் குழப்பமான நிலை

ஒரு மெல்லிய உயரமான கோபுரத்தின் மேலே பொழுதுவிடியுமுன்னே புதிய மெக்ஸிக்கோ பாலைவனத்தில் திடமான உலோகத்தாலான கோளத்தினுள் காட்ஜெட் என்றழைக்கப்படும் மனிதரை வைத்துத் தொங்கவிட்டனர். அதற்கு ஐந்தரை மைல்கள் தொலைவில் கட்டப்பட்டிருந்த இரகசிய பதுங்குமிடத்திற்குள் அமைதியற்ற நிலையுடன் பெளதியல் அறிஞர்களும், வேதியல் அறிஞர்களும் கணிதவியல் மேதைகளும் மற்றும் இராணுவ வீரர்களும் தங்கள் கடிகாரங்களை நோக்கிய வகையில் காட்ஜெட் மெய்யாகவே வேலைசெய்யுமா என்று ஆச்சரியப்பட்டனர்.

அது அவ்விதமே நடந்தது. காலை 5.30 மணிக்கு 15 வினாடிகளுக்கு முன் காட்ஜெட் வெடித்து, அதன் அணு ஆற்றலை ஒரு வினாடியின் பத்து இலட்சத்தில் ஒரு பகுதிக்குள் வெளியிட்டது. அது, வேறொரு கோளத்திலிருந்து பார்த்தாலும் தெரியுமளவில் ஒரு நெருப்புப் பந்தைக் கிண்டி விட்டது. அது ஒரு வெடி விபத்தை உண்டாக்கி, 200 மைல்களுக்கும் அப்பால் அதன் சப்தம் கேட்கப்பட்டது. காட்ஜெட் வெடித்ததனால் உண்டான வெப்பம்—சூரியனின் நடுவிலுள்ள வெப்பத்தைவிட அதிக வெப்பத்தை அதன் நடுவில் கொண்டிருந்தது—அப்பாலைவனத்தின் மணலை அரை மைல்கள் அளவில் விலையுயர்ந்த ஒருவகைக் கல் போன்ற பல நிறங்களாலான கதிரியக்கப் பீங்கானாக உருக்கிவிட்டது. சிலர், சூரியன் அந்த நாளில் இரண்டுமுறை உதித்ததாக உறுதியுடன் கூறினர்.

21 நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 6, 1945-ல் இரண்டாவது அணு குண்டு ஜப்பானிய நகரமாகிய ஹிரோஷிமாவை நொறுக்கி, முடிவில் 1,48,000 பேரின் மரணத்திற்குக் காரணமாயிற்று. அணு சகாப்தம் ஆரம்பித்துவிட்டிருந்தது.

அது 43 வருடங்களுக்கு முன்னால் நடந்தது. அதிலிருந்து அதைவிட 4,000 மடங்கு அதிக சக்திவாய்ந்த ஆயுதங்கள் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன. உலகத்தின் யுத்தக் கணைகள் அனைத்தையும் சேர்த்த கூட்டுச் சக்தியானது, 2,000 கோடி டன் எடையுள்ள TNT–ஹிரோஷிமா குண்டுவின் சக்தியை விட பத்து இலட்சம் மடங்கு அதிகமான கொல்லும் சக்தி படைத்தது என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது!

நீக்குவதற்கான அழைப்பு

1983-ம் வருட உவோர்ல்டு ஹெல்த் ஆர்கனைசேஷன் ஆராய்ச்சி ஒன்றின்படி, ஒரு முழு அளவிலான அணுயுத்தமானது முற்றிலும் ஒரு 100 கோடி மக்களைக் கொன்றுவிடும். அடுத்த இரண்டாவது 100 கோடி மக்கள் அதன் வெடி, நெருப்பு மற்றும் கதிர்வீச்சு இவற்றால் பின்னால் இறப்பர். சமீப ஆராய்ச்சிகள் அதைவிட அதிகம் தீமையை எதிர்பார்க்கும்படியாகவே இருக்கின்றன. அப்படியானால் புரிந்து கொள்ளும் வகையில், அணு ஆயுதங்களை முற்றிலும் அகற்றிவிடுவதற்கான அறைகூவல் எழும்பியிருக்கிறது.

என்றபோதிலும், நீக்கிவிடுவதற்கான அழைப்புகள் அனைத்துமே மனிதாபிமானத்தின் அடிப்படையில் இல்லை. போர்முகத்தில், அணு ஆயுதங்கள் குறைந்த மதிப்பு கொண்டுள்ளன, அல்லது ஒரு மதிப்புமே இல்லை என்பதாக வாதிடுகின்றனர். அவற்றின் பயப்படத்தகுந்த அழிக்கும் சக்தியினால், மிகப் பேரளவான கோபமூட்டுதல் மட்டுமே அதன் உபயோகத்தை ஏற்றுக் கொள்ளக்கூடும். இவ்விதமாக, ஐக்கிய மாகாணங்கள் அவற்றை கொரியாவில் அல்லது வியட்நாமில் உபயோகிக்கவில்லை; பிரிட்டிஷ் அவற்றை ஃபாக்லாண்டில் உபயோகிக்கவில்லை, சோவியத்தும் அவற்றை ஆப்கானிஸ்தானில் உபயோகிக்கவில்லை. ஐ.மா. முன்னாள் இராணுவப்படையின் காரியதரிசி ராபர்ட் மக்நமாரா கூறுகிறார்: “இராணுவ நோக்கம் என்னவாக இருப்பினும் அணு ஆயுதங்கள் அதை நிறைவேற்றுவதில்லை. எதிரிகள் அதைப் பயன்படுத்துவதிலிருந்து தடுப்பதைத் தவிர வேறு எந்த உபயோகமுமில்லை.”

அதைப்போலவே, அணு ஆயுதங்கள் மற்ற நாடுகளின் மீது செல்வாக்குச் செலுத்துவதிலோ, பயமுறுத்துவதிலோ ஒரு தந்திரமான கோலாக இருப்பதிலும் அதிக பயனில்லை. வல்லரசு நாடுகள் ஒவ்வொன்றுமே குழப்பமான நிலையில் உள்ளன. அணு ஆயுதங்களை வைத்திராத வல்லரசுகள் பொதுவாக, வல்லரசு நாடுகளுக்கு முன் பதிலுக்குப் பதில் அணு யுத்தத்துக்காகத் தயார் செய்து கொண்டு எழுந்து நிற்கின்றன.

முடிவாக, அதிக விலையாகிறது. புல்லட்டின் ஆஃப் தி அட்டோமிக் ஸயன்டிஸ்ட்ஸ் [Bulletin of the Atomic Scientists] வெளியிட்டிருந்த ஓர் ஆராய்ச்சியின்படி, 1945-85-ம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மட்டுமே சுமார் 60,000 அணுயுத்தக் கணைகளைத் தயாரித்தன.a அதன் மதிப்பு? சுமார் 8,200 கோடி டாலர்—தாங்கள் உபயோகிக்க விரும்பாத கருவிகளுக்குச் செலவிடப்படும் ஒரு பெருந்தொகை.

ஒரு தடையாக உள்ள குண்டு

தடை என்பது ஒருவேளை போராட்டத்தின் சரித்திரத்தின் அளவிற்குப் பழமையானதாக இருக்கிறது. ஆனால் அணுயுகத்தில், தடை என்பது புது அளவுகளை எடுத்திருக்கிறது. அணு தாக்குதலைச் செய்யத் திட்டமிடும் எந்த நாடும், சுழன்று, பாழாக்கும் வகையில் பதில் அணு தாக்குதலைப் பற்றி நிச்சயமாயிருக்கிறது.

தளபதி B. L. டேவிஸ், ஐ.மா. யுத்ததந்திர விமானப்படைத் தலைவர் பிரிவைச் சேர்ந்த ஆணை அதிகாரி இவ்விதமாகக் கூறுகிறார்: “அணு ஆயுதங்கள் . . . உலகை ஒரு பாதுகாப்பான இடமாக ஆக்கியிருக்கிறது என்று ஒத்துக்கொள்ளும் ஒரு நிலை ஏற்படக்கூடும். அவை ஒருபோதும் யுத்தத்தை நிறுத்தவில்லை; உட்பட்டுள்ள நாடுகளுக்குச் சிறுபான்மையாக ஒருபோதும் தோன்றாத போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து மரிக்கின்றனர். ஆனால் அத்தகைய போராட்டங்களில் வல்லரசுகளின் தலையீடு கவனத்துடன் தவிர்க்கப்படும்படி கணக்கிடப்படுகிறது, ஏனெனில் எதிர் எதிரே உள்ள நேரடி சந்திப்பால், அது விஸ்தாரமாகி, தீங்கு விளைவிக்கும் கலகமாக—முறைப்படியான போராகவோ அல்லது அணு யுத்தமாகவோ மாறுவதைத் தவிர்க்க.”

வெடிப்பதற்குத் தயார் நிலையிலுள்ள குண்டு ஏற்றப்பட்ட துப்பாக்கிகளைக் கொண்ட எந்த வீட்டிலும், எவராவது தவறுதலாகச் சுடப்படும் அபாயம் எப்போதுமே இருக்கிறது. அணு ஆயுதங்கள் நிறைந்த ஓர் உலகிலும் அதே நியமம் உண்மையாக இருக்கிறது. பின்வரும் சூழ்நிலைகளில் அணு யுத்தம் ஆரம்பிக்கலாம்:

(1) கம்ப்யூட்டரின் தவறு அல்லது ஒரு தவறுதலான இயக்கம் ஒரு நாட்டை, அது அணுத்தாக்குதலின் கீழிருப்பதாக நினைக்கச் செய்கிறது. அதற்குப் பதில் யாதெனில், ஒரு பதில் அணுத்தாக்குதல்.

(2) ஒரு தீவிரவாத அல்லது பயங்கரவாத சக்தி, அணு ஆயுதங்களைத் தற்போதைய சக்தி பயன்படுத்துவதைக் காட்டிலும், அவற்றைப் பயன்படுத்துவதை அடக்குவதில் குறைவுபட்டிருப்பதன் மூலம் அணு ஆயுதங்கள் பெறப்படலாம்.

(3) வல்லரசு நாடுகளின் அக்கறை உட்பட்டிருக்கும் இடங்களில் ஒரு சிறிய போர் விஸ்தாரமாகி விடுதல்—பாரசீக வளைகுடாவைப்போன்று.

அத்தகைய அபாயங்கள் இருந்தபோதிலும், நிறுத்துவதன் மூலம் பாதுகாப்பான ஒரு கொள்கையை நாடுகள் காத்துக் கொள்ளவில்லை. இருப்பினும், அணு ஆயுதங்களுடன் சிலிர்த்தெழும்பியிருக்கும் ஓர் உலகில், மக்கள் பாதுகாப்பாக உணருகிறதில்லை. சக்தியின் சமநிலை மெய்யாகவே ஒரு பயங்கரத்தின் சமநிலையாக இருக்கிறது, அது இவ்வுலகின் 100 கோடிக்கணக்கானோர் தாமாகவே கையொப்பமிடும் ஒரு தற்கொலை உடன்படிக்கையாக இருக்கிறது. அணு ஆயுதங்கள் டமோக்கில்ஸ்-ன் வாள் போன்று இருந்தால், அதை நிறுத்துவது, அவ்வாளைத் தொங்க வைத்திருக்கும் மயிரிழை போன்றிருக்கிறது. ஆனால் நிறுத்துவது தோல்வியடைகையில் அப்போது என்ன? அதன் விடையானது, நினைத்துப்பார்க்க அதிக பயங்கரமானதாயிருக்கிறது. (g88 8⁄22)

[அடிக்குறிப்புகள்]

a இந்த அடிக்குறிப்புகள் தமிழில் இல்லை

[பக்கம் 6-ன் பெட்டி]

ஒரு-மகாடன் குண்டு ஒன்றின் சக்தி

அனல் ஒளிக்கதிர் வீச்சு (ஒளியும் வெப்பமும்): அணுசக்தியால் ஏற்படும் வெடிவிபத்து ஒன்றானது, அது வெடிக்கும் இடத்திலிருந்து வெகு தொலைவிலுள்ள மக்களை—பகற்பொழுதில் 13 மைல்கள் வரையிலும், இரவு நேரத்தில் 53 மைல்கள் வரையிலும்—குருடாக்கும் அல்லது அவர்களின் கண் கூசிவிடும் அளவிற்குக் கடுமையான திடீர் ஒளியை உண்டாக்குகிறது.

தரைமட்டத்தில் அல்லது தரைக்கு அருகாமையில் (வெடிக்கும் குண்டிற்கு நேர் அடியில் உள்ள புள்ளி), நெருப்பு உருண்டையின் கடும் வெப்பம், மனிதரை ஆவியாகிவிடச் செய்கிறது. வெகு தொலைவில் (11 மைல்கள் வரை), மூடப்படாத தோலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலையான நெருப்புப் புண்களால் மக்கள் கஷ்டப்படுகின்றனர். துணிகள் நெருப்பு பற்றி எரிகின்றன. சில குறிப்பிட்ட நிலைகளில் அதிக வெப்பத் தன்மையுள்ள ஒரு நெருப்புப் புயல் பரவி, மக்களை நெருப்புக் கடலில் மூடிவிடுகிறது.

காற்று வெடி விபத்து: அணு வெடி விபத்து, சூறாவளியின் ஆற்றலுள்ள காற்றை உற்பத்தியாக்குகிறது. தரைமட்டத்திற்கு அருகில் முழுவதும் அழிக்கப்படுகின்றன. வெகு தொலைவில் கட்டடங்களுக்குள் இருக்கும் மக்கள் கட்டடத்தின் மேற்கூரை அல்லது சுவர் விழுவதனால் நசுக்கப்படுகின்றனர்; மற்றவர்கள் இடிந்த பொருட்கள் சேர்ந்துள்ள குப்பையாலும், மற்ற இருக்கைகளாலும் காயமுறுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். இன்னும் பிறர் நசுக்கப்பட்ட காரை அல்லது செங்கல் தூளடங்கிய அடர்ந்த தூசியால் மூச்சுத் திணருகின்றனர். காற்றின் அதிக அழுத்தம் காதின் சவ்வு கிழிவுறச் செய்கிறது அல்லது நுரையீரலில் இரத்தக் கசிவு ஏற்படும்படி செய்கிறது.

ஒளிக்கதிர் வீச்சு: கடும் வெடிப்புடன் நியூட்ரான்களும் காமா கதிர்களும் வெளிவிடப்படுகின்றன. மிதமான வெப்பமானது அருவருப்பு, வாந்தி மற்றும் சோர்வுடன் சம்பந்தப்பட்ட வியாதிகளை உண்டாக்குகிறது. இரத்த அணுக்களுக்கு இழைக்கப்பட்ட சேதம் நோய்த்தடுப்பாற்றலைக் குறைத்து, காயங்களைக் குணமாக்கும் தன்மையைத் தாமதப்படுத்துகிறது. அதிகளவு கதிர்வீச்சால் பாதிக்கப்படுகையில் இழுப்பு, நடுக்கம், உடலியக்கக் கட்டுப்பாட்டின் சீரற்ற நிலை, மற்றும் சோம்பல் இவற்றை உண்டாக்குகிறது. 48 மணிநேரத்திற்குள் மரணம் தொடருகிறது.

இத்தகைய கதிர்வீச்சிலிருந்து தப்பியவர்கள், எளிதில் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் பரம்பரைக் குறைபாட்டை தங்கள் சந்ததிக்குக் கடத்தும் நிலையில் இருக்கின்றனர். கருவின் குறைந்த வளத்தன்மை தானாகவே கருச்சிதைவுறுதல், உருப்பெறாத அல்லது முழு வளர்ச்சி அடையாத குழந்தைகள் மற்றும் குறிப்பிடப்படாத உடல் சம்பந்தமான பலவீனங்கள் கடத்தப்படுகின்றன.

மூலம்: ஐக்கிய நாடுகள் அச்சிட்ட அணு ஆயுதங்களின் பேரிலான விளக்கக் கல்வி, [Comprehensive Study on Nuclear Weapons].

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்