அவர்களுடைய நினைவு மறக்கப்பட்டுவிட்டதா?
இங்கிலாந்தில் டியுகெஸ்பரியில் இங்கு காணப்படுவது போன்ற ஒரு பழைய கல்லறைத் தோட்டத்துக்கு நீங்கள் எப்போதாவது சென்று தூசியினால் அழுக்கடைந்து மறைந்துபோன எழுத்துக்களையுடைய, துண்டுகளாக நொறுங்கிப் போன கல்லறை நினைவுச் சின்னங்களைக் கவனித்திருக்கிறீர்களா? அநேகமாக மூன்று அல்லது அதற்கும் முன்னாலிருந்த சந்ததியில் மரித்த கொள்ளுப் பெற்றோர்களும் அதற்கு முன்வாழ்ந்தவர்களும் மறக்கப்பட்டுவிட்டது போல தெரிகிறது. உண்மையில் பைபிள் சொல்வதாவது: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.” கடவுளும்கூட அவர்களை மறந்துவிட்டார் என்பதை அது அர்த்தப்படுத்துமா?—பிரசங்கி 9:5.
காரியம் இப்படியாக இல்லை என்பதை இயேசு பின்வருமாறு குறிப்பிடுகையில் காண்பித்தார்: “இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.” இதன் காரணமாக மரித்தவர்கள், சுத்திகரிக்கப்பட்ட ஒரு பரதீஸில் பூமியில் என்றுமாக வாழும் வாய்ப்பை அடைய உயிர்த்தெழுதலில் திரும்ப வருவார்கள்.—யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 21:3, 4.
நிச்சயமாகவே கோடிக்கணக்கான கிரகங்களையும் நட்சத்திரங்களையும் பால்வீதிமண்டலங்களையும் பெயரால் அறிந்திருக்கும் “மகா வல்லமையின்” ஊற்றுமூலமாகிய யெகோவா தேவன் மனிதவர்க்க சரித்திரம் முழுவதிலுமாக மரித்திருக்கும் கோடிக்கணக்கான ஆட்களின் ஆள்தன்மையையும் வாழ்க்கை மாதிரியையும் நினைவுகூருவதில் எந்தப் பிரச்னையும் கொண்டிருக்கமாட்டார். ஆகவே தங்கள் சந்ததியினரால் ஒருவேளை மறக்கப்பட்டிருக்கும் மரித்தவர்கள் கடவுளால் மறக்கப்படுவதில்லை.—ஏசாயா 40:26. (g89 5/8)