உங்கள் நாடு ஒரு குறியிலக்காக உள்ளதா?
பிரேஸிலிலும் சிம்பாப்வேயிலுமிருந்து புகையிலையை மலிவாக வாங்குவதால், ஐக்கிய மாகாணங்களிடம் அதிகப்படியான புகையிலை உள்ளது. ஆகவே புகையிலைப் பிரபுக்கள் இவற்றை எங்கு விற்க முடியும்? ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலுள்ள நாடுகளுக்கு. ஆகவே, ஏசியாவீக் (Asiaweek) பத்திரிகை இப்படியாக அறிக்கை செய்கிறது: “பிரிட்டனும் மேற்கு ஜெர்மனியும் இருந்த இடத்தில் முனைப்பான சந்தையாக இப்போது ஆசிய நாடுகள் அமெரிக்காவின் வெளிநாட்டு புகையிலை விற்பனையில் சுமார் 50 சதவீதம் உபயோகிக்கின்றன.”
மேலும் புகையிலை விற்பனையாளருக்கு முன்னே என்னே ஒரு சீரிய வெகுமதி ஆசை காட்டுகிறது! அடுத்த 20 ஆண்டுகளுக்குள் சுமார் இருநூறு கோடி மக்களைக் கொண்ட வாய்ப்பு நிறைந்த வளமான விற்பனைக் களம். சீனா மற்றும் இந்தியாவின் இப்போதைய மக்கட்தொகை மட்டுமே சுமார் நூற்றெண்பது கோடி! மேலும் உவர்ல்டு ஹெல்த் (World Health) கூறியது: “மேற்கில் புகையிலை விற்பனை வருடத்திற்கு ஒரு சதவீத அளவில் குறைந்துகொண்டு வரும்பொழுது, வளர்ந்துவரும் நாடுகளில் புகைபிடிப்பது வருடத்திற்கு சராசரி இரண்டு சதவீதம் உயர்ந்து வருகிறது.” கிழக்கிலுள்ள ஆசையோடு அழைக்கும் வாய்ப்பு நிறைந்த விற்பனைக் களத்தைக் காட்டிலும், விற்பனை குறைந்துவரும் களங்கள் மிகக் குறைந்த மக்கட்தொகையைக் கொண்டுள்ளன என்பதை நினைவிற்கொள்ளுங்கள். 2000 ஆண்டுக்குள் ஆசியாவில் விற்பனை 18 சதவீத அளவு உயரும் என்று ஐ.மா.வின் புகையிலைத்தொழிற்சாலை எதிர்பார்க்கிறது. ஆனால் ஒரு தடையாவது இருக்கிறது—வரிகள்.
நோயையும் மரணத்தையும் பரப்புவதில் இரட்டைத் தராதரங்கள்
அமெரிக்க புகையிலை சங்கங்கள் தங்களுடைய அதிகபட்ச சிகரெட்டுகளை ஏற்றுகொள்ளுமாறு மற்ற நாடுகளை எப்படி செய்ய முடியும்? நம்பமுடியாத வகையில் அவர்களுக்கு ஒரு நண்பன் உண்டு. புகைபிடிப்பதன் அபாயங்களைப் பற்றி தன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும்போது, மரணமளிக்கக்கூடிய புகையிலையின் விற்பனையை மற்ற நாடுகளில் துரிதமாக வளர்த்து வருகிறது. யார் அது? ஐ.மா. அரசு!
ஏசியாவீக் (Asiaweek) விளக்குகிறது: “புகையிலை ஏற்றுமதிக்காக எதையும் செய்ய மனமுள்ளவர்கள் ஐ.மா. அரசின் முழு ஆதரவுடன் நுழைந்துள்ளனர். . . . ஐ.மா. வணிகத்துறை பிரதிநிதியின் அலுவலகம் . . . வியாபாரத்திற்கான தடைகளைத் தகர்த்து எல்லா சக்தியுடனும் செயல்பட்டுள்ளது; அமெரிக்க நிறுவனங்களுக்காக ஆசிய விளம்பர ஸ்தபனங்களை உபயோகிக்கவும் முனைந்துள்ளது—இது ஐ.மா.வின் சிகரெட் விளம்பரங்கள் விண்ணலைகளில் வருவது வெகு காலமாக தடை செய்யப்பட்டிருந்தபோதுங்கூட.” உவர்ல்டு ஹெல்த் (World Health) பத்திரிகை அறிவிக்கிறது: “[ஐ.மா.வின்] புகையிலை நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அரசியல் செல்வாக்கைச் செலுத்துகின்றன. அவர்களுடைய விற்பனைக் களங்கள் அமெரிக்கப் புகையிலைப் பொருட்களின் விற்பனைக்கும் விளம்பரத்திற்கும் திறக்கப்படாவிட்டால், வியாபாரத் தடைகளும் அல்லது அப்படிப்பட்ட தடைகள் வரும் என்ற பயமுறுத்தலும் ஹாங்காங், தாய்வான், ஜப்பான், மற்றும் கொரியாவிற்கும் எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ளன.”
அதைவிட மோசமானது, புகையிலை நிறுவனங்கள் தங்களது பொருட்களை ஆசியாவில் விற்பதுமட்டுமல்லாமல், அதிக எழுச்சிமிக்க விளம்பரத்தால் தங்கள் விற்பனையை அதிகரிக்கிறார்கள். தாய்வான் மற்றும் தென் கொரியா போன்ற சில நாடுகள், அழுத்தத்தின் கீழ், புகையிலைப்பற்றி விளம்பரம் செய்வதற்கு எதிராக இருந்த அவர்கள் தடையைக்கூட எடுத்துவிட்டார்கள்! ஐ.மா.வின் சிகரெட் உற்பத்தியாளர்களின் குறியிலக்கு பட்டியலில் இப்போது சீனாவுங்கூட முன்னிலையில் உள்ளது. ஒரு புகையிலைத் தொழில் நிறுவனத்தின் அதிகாரி சொன்னதாகக் கூறப்படும் இந்தக் காரியம் சிறிதும் ஆச்சரியப்படுவதற்கில்லை: “எங்களுக்கு என்ன வேண்டுமென்று உங்களுக்குத் தெரியுமா? எங்களுக்கு ஆசியா வேண்டும்.” ஆனால் இந்த அமெரிக்க உயர் அழுத்த சாதுரிய செயல்களைச் சிலர் எப்படி நோக்குகிறார்கள்?
ஒரு நியு யார்க் டைம்ஸ் (New York Times) நிருபர் சொன்ன விதமாக, கொரியாவைச் சேர்ந்த ஒரு வியாபாரி “கொரியாவின் மக்கள் மீது, அமெரிக்க சிகரெட்டுகள் திணிக்கப்படுவதன் அமெரிக்க அதர்மத்திற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவரிடம் ஒரு நல்ல காரணமிருக்கிறது. வேறு சில பொருளாதாரங்களுக்கு அடிப்படையான கோகன் மற்றும் ஹெராய்ன் போன்ற போத மருந்துகளின் இறக்குமதிக்கு எதிராக அமெரிக்கர் போர் செய்யும் போது, தன்னுடைய சொந்த விஷச்செடியை மற்ற நாடுகளில் கொண்டு இறக்க விரும்புகிறது. அமெரிக்கா உயர்நீதியான தராதரங்களைக் கொண்டிருப்பதாக உரிமைபாராட்டிக்கொண்டு, மற்ற நாடுகள் மீது பலநாடுகள் மிகவும் மோசமான பொருளாதார இன்னல்களில் உள்ளபோது, தன்னுடைய அதிகப்படியான ஆபத்தான புகையிலைப் பொருட்களை திணிப்பது அவர்கள் கொள்கைக்கு ஒத்திருக்கிறதா?
சிலர் எதிர்த்துப் போரடுகிறார்கள்
காம்பியா, மொசம்பீக், மற்றும் செனகல் போன்ற சில ஆப்பிரிக்க நாடுகள் புகையிலை விளம்பரத்தைத் தடை செய்துள்ளன. “எல்லாச் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் விளம்பரப்பலகை விளம்பரங்களையும்” நைஜீரியா அரசாங்கம் “தடைசெய்யப்போவதாக,” 1988-ல் நைஜீரியாவின் சுகாதார அமைச்சர் கூறினார். “எல்லாப் பொதுவிடங்களிலும் போக்குவரத்து வாகனங்களிலும் புகைப்பதை நாங்கள் தடை செய்யப் போகிறோம்.” இந்தப் பிரச்னையானது இன்னும் விவாதத்தில் உள்ளது என்று ஒரு நைஜீரிய தகவல் அதிகாரி விழித்தெழு!-வுக்கு (ஜனவரி 1989) தகவல் கொடுத்தார்.
சீனா 24 கோடி புகைபிடிப்பவர்களைக் கொண்ட ஒரு நாடு. 2025-ம் ஆண்டுக்குள், புகைபிடிப்பது சம்பந்தப்பட்ட நோய்களால் ஒவ்வொரு வருடமும் இருபது இலட்சம் மக்களை இழக்க நேரிடும் என்று மருத்துவ அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். சீனா மீண்டும் கட்டுகிறது (China Reconstructs) என்ற பத்திரிகை ஒப்புக்கொள்ளும் விதமாக சீனா ஒரு பெரிய பிரச்னையைக் கொண்டுள்ளது: “சீன அரசு சிகரெட் விளம்பரங்களைத் தடைசெய்திருந்தபோதிலும், புகைபிடித்தலின் கேடான விளைவுகளைப் பற்றி அடிக்கடி செய்தித்தாளிலும் பத்திரிகை அறிக்கைகளிலும் எச்சரித்தபோதிலும், மேலும் சிகரெட்டுகளின் விலை என்றும் உயர்ந்துகொண்டிருந்தபோதிலும், சீனாவில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கிறது.” மேலும் இதனால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்று என்ன? “புற்றுநோய், இருதய இரத்த ஓட்ட நாளங்கள் மற்றும் சுவாசமண்டல நோய்கள் இப்போது சீனாவில் பிரதான கொலையாளிகளாக உள்ளன.”
சீனாவின் சில பாகங்களில் விருந்தினரை வரவேற்கும்போது சிகரெட்டுகளை அளிப்பது உபசரித்தலின் ஓர் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆனால் என்னே ஒரு துயரத்தை சீனர் விலையாகக் கொடுக்கிறார்கள்! சீனா மீண்டும் கட்டுகிறது (China Reconstructs) என்ற பத்திரிகை அறிவிப்பதாவது: “நுரையீரல் புற்றுநோயின் தோற்றம் மாபெரும் அளவில் உயர்ந்துவருகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.” ஒரு சீன நிபுணர் சொன்னதாவது: “நாம் இப்போதே மிகவும் அதிகமான விலையைக் கொடுத்துவருகிறோம்.”
என்றபோதிலும், புகையிலை விளம்பரம் செய்பவர்களின் அதிகாரத்தில் மற்றுமொரு ஆபத்துள்ளது—விளம்பர ஸ்தபனங்களின்மீது அவர்களின் மறைவான செல்வாக்கு. (g89 7/8)
[பக்கம் 10-ன் படம்]
ஹாங் காங் தேசத்தில் புகைபிடித்தலுக்கு எதிரான விளம்பரம்