எமது வாசகரிடமிருந்து
வீண்பேச்சு “வீண்பேச்சு—புண்படுவதை எவ்வாறு தவிர்க்கலாம்” என்ற வெளியீடுக்கு நன்றி. (ஏப்ரல் 8, 1992) எனக்கு மிகவும் தேவையாயிருந்த சமயத்தில் அது வந்தது. எனக்கு நல்ல ஒரு சிநேகிதியாய் இருந்த, என்னைப்பற்றிய கேடுவிளைவிக்கும் வீண்பேச்சைப் பரப்பிக்கொண்டிருந்த ஒரு பெண்ணுடன் ஒரு பிரச்னையைக் கொண்டிருந்தேன். உங்கள் கட்டுரை புரிந்துகொள்ளவும் சமாளிக்கவும் உண்மையிலேயே உதவி செய்தது.
M. P., ஐக்கிய மாகாணங்கள்
கொலோசியம் “கொலோசியம்—பண்டைய ரோமின் ‘பொழுதுபோக்கு’ மையம்” (ஜூன் 8, 1992) என்ற கட்டுரை மிகவும் கவனத்தை ஈர்ப்பதாய் உணர்ந்தேன். ஒரு சரித்திராசிரியனாக, நீங்கள் சத்தியத்தைக் கட்டுக்கதையிலிருந்து பிரிக்கும்விதம் ஊக்கமூட்டுவதாய் இருந்ததாக எண்ணினேன்.
N. H., ஐக்கிய மாகாணங்கள்
நுரையீரல்கள் “நுரையீரல்கள்—ஓர் அதிசயத் திட்டமைப்பு” என்ற கட்டுரையை வாசித்தபின் உங்களுக்கு எழுதுமாறு தூண்டுவிக்கப்பட்டேன். (ஜூன் 8, 1992) அதற்கு முந்தின நாள்தானே நுரையீரல் புற்றுநோயில் என் அத்தையை நான் இழந்துவிட்டிருந்தேன். உடலின் அதிசயத்திற்கான என்னுடைய போற்றுதலை இந்தக் கட்டுரை அதிகரித்தது. அது புரிந்துகொள்ள எளிதாகவும் இருந்தது; மேலும் நுரையீரல்களை நன்றாக கவனிப்பதற்கான தேவையையும் [புகையிலை போன்ற] பொருட்களால் அவற்றை அசுத்தப்படுத்தக்கூடாது என்பதையும் காண உதவியது.
C. G., ஐக்கிய மாகாணங்கள்
முதியோரைக் கவனித்தல் மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கும் என் தந்தையை நான் கவனிக்கிறேன். என்னுடன் பிறந்தவர்கள் எனக்கு உதவிசெய்யவில்லை, ஆனால், ‘நீ பலமுள்ளவள். உன்னால் சமாளிக்க முடியும்’ அல்லது ‘பல வருடங்களுக்கு முன்பே ஒரு மருத்துவமனையில் சேர்ப்பதற்கான சாத்தியத்தை நீ ஆலோசித்திருக்க வேண்டும்,’ என்பது போன்ற காரியங்களைச் சொல்வார்கள். திருமணம் செய்து குழந்தைகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் கடந்துவிட்டன என்பதை உணர்ந்து என்னைக்குறித்து நான் வருத்தப்பட ஆரம்பித்தேன். நான் உணர்ச்சி சம்பந்தப்பட்ட பிரச்னைகளையும் கொண்டிருக்க ஆரம்பித்தேன். ஆனால் “முதியோரை கனம் பண்ணுகிறீர்களா?” (ஜனவரி 8, 1992) என்ற தொடர், சகித்துநிலைத்திருப்பதற்குத் தேவையான ஆறுதலையும் பலத்தையும் கொடுத்தது.
S.B., ஐக்கிய மாகாணங்கள்