உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g93 1/8 பக். 22-24
  • இந்தக் கண்ணீரெல்லாம் ஏன்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இந்தக் கண்ணீரெல்லாம் ஏன்?
  • விழித்தெழு!—1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நாம் ஏன் அழுகிறோம்?
  • மற்றவகை கண்ணீர்
  • ஒரு கண்சிமிட்டில்
  • கண்ணீர் ஒரு புரியாத புதிர்
    விழித்தெழு!—2014
  • இயேசு சிந்திய கண்ணீர்—நமக்கு என்ன பாடம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • உங்கள் கண்ணீர்த் துளிகளை யெகோவா மறக்க மாட்டார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • “இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
மேலும் பார்க்க
விழித்தெழு!—1993
g93 1/8 பக். 22-24

இந்தக் கண்ணீரெல்லாம் ஏன்?

கடைசியாக நீங்கள் மிக அதிகமாக எப்போது கண்ணீர்விட்டீர்கள்? அது இன்பத்தினாலா அல்லது துன்பத்தினாலா? சொந்த வெற்றியினாலா அல்லது படுதோல்வியினாலா? உதவியினாலா அல்லது ஏமாற்றத்தினாலா? ஒரு குழந்தையின் பிறப்பா அல்லது ஒரு வாழ்க்கைத் துணையின் இறப்பா, ஒரு நல்ல நினைவா அல்லது கசப்பான நினைவா, அன்புள்ள நண்பனின் வருகையா அல்லது ஒருவரின் பிரிவா? முரண்பாடான நிலைமைகள், வித்தியாசமான உணர்வுகள், இருந்தாலும் இவையெல்லாம் ஒரே முறையில் வெளிப்படுத்தப்படுகின்றன—கண்ணீரால்.

ஆழ்ந்த உணர்ச்சியை வெளிப்படுத்த நாம் சும்மா அழுவது ஏன்? இது எதையேனும் சாதிக்கிறதா? அல்லது கண்ணீரே இல்லாமல், இருக்க முடியுமா?

நாம் ஏன் அழுகிறோம்?

இது யாருக்கும் இதுவரை புரியவில்லை. மனிதகுலமும் விலங்கினமும் இரண்டுவிதமான கண்ணீரை உண்டாக்குகின்றன. அடிப்படையில், அல்லது தொடர்ச்சியான கண்ணீர், கண்ணை ஈரப்படுத்துகிறது, அவசியமான கண்ணீர் அணிச்சைக் கண்ணீர், ஒருவித அந்நிய பொருளால் கண் உறுத்தப்படும்போது, சீக்கிரமாக இந்தக் கண்ணீர் வந்துவிடுகிறது. ஆனால் உணர்ச்சிமிக்க கண்ணீர்விடுதலாகிய இந்த அழுகையே, மனிதனுக்கு மட்டும் இருக்கிற ஒன்றாகவும்—மிக குறைந்தளவே புரிந்துகொள்ளப்பட்டும் இருப்பதாக தோன்றுகிறது.

ஆராய்ச்சியாளர் வில்லியம் ஃப்ரை, சிறுநீரகங்கள், பெருங்குடல், நுரையீரல்கள், சிறுதோல் ஓட்டைகள் போன்றவை செய்வதுபோல, உணர்ச்சிவசமான அழுகை, தீங்கு விளைவிக்கும் பொருள்களையும் மட்டுமீறிய அளவு பொருள்களையும் உடம்பிலிருந்து நிச்சயமாகவே நீக்கிப்போடுகிறது என்று குறிப்பிடுகிறார். அழுகை—கண்ணீரின் இரகசியம் (Crying—The Mystery of Tears) என்ற அவருடைய புத்தகம், ஓர் உறுத்தியினால் (ஒரு வெங்காயத்தினால்) வருகின்ற கண்ணீருக்கும், உணர்ச்சியினால் (சோகமானப் திரைப்படங்களைப் பார்க்கும்போது) வருகின்ற கண்ணீருக்கும் இடையே தொடர்புபடுத்திப் பார்த்த அவருடைய ஆராய்ச்சியை விளக்குகிறது. உணர்ச்சிமிக்க கண்ணீர் அதிகமான அளவு புரதங்களை உடையதாக இருக்கின்றன—ஏறக்குறைய 24 சதவிகிதம் கூடுதலாக. இதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை, ஆனால் உடல், உருத்துதல் சம்பந்தமாக உருவாக்கும் கண்ணீருக்கு வித்தியாசமான உணர்ச்சி சம்பந்தமான கண்ணீரை வெளிவிடுவதாகத் தோன்றுகிறது.

“நான் [ஒரு பெண்ணைப்போல, NW] அழுகிறேன்; என் கண், என் கண்ணே நீராய்ச் சொரிகிறது,” என்று எரேமியா தீர்க்கதரிசி எழுதினார். (புலம்பல் 1:16) பெண்கள் ஆண்களைவிட உண்மையில் அதிகமாக அழுகிறார்களா? கணக்கெடுப்பின் பிரகாரம் அவர்கள் அப்படியே செய்கிறார்கள்—ஏறக்குறைய நான்கு மடங்கு அதிகமாக (ஒரு மாதத்திற்கு 5.3 தடவைகளுக்கு எதிராக ஆண்களுக்கு 1.4 தடவைகள்). ஃப்ரை சொல்கிறப் பிரகாரம் குழந்தைப் பருவத்தில், ஆண்களும் பெண்களும் பிறந்தபின்பு உணர்ச்சிமிக்க கண்ணீரை விடுவதற்கு அநேக நாட்கள் அல்லது வாரங்கள் எடுத்தாலும் பெரும்பாலும் ஒரே அளவு தான் கண்ணீர் விடுகிறார்கள். எனினும், பருவ வயதாகும்போது, வித்தியாசம் தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. இது ஒருவேளை சமுதாயத்தின் பாதிப்புகளினாலும் இருக்கலாம். ஆனால் பருவ வயது வருடங்கள் வரும்வரை, இயக்குநீர் (ஹார்மோன்) புரோலேக்டின் (பால் உருவாக்கும் வினையூக்கி) இரு பாலர்களிடமும் ஒரே அளவில் தான் இருக்கிறது. வயது 13-லிருந்து 16-க்குள் ஏதோவொரு சமயத்தில், பெண்பாலர் மத்தியில் இது அதிகமாகிறது.

புரோலேக்டின் கண்ணீரில் காணப்படுகிறது. அழுத்தங்களுக்கு மத்தியில் இது அதிகரிக்கவும் செய்கிறது. எனவே, அழுத்தத்தில் இருக்கும்போது பெண்கள், இயக்குநீரின் அளவுகளில் ஆண்களைவிட அதிக அளவிற்கு உள்ளாகுகிறார்கள். ஆண்களைவிட பெண்கள் மிக சீக்கிரமாகவும் அடிக்கடியும் அழுவதற்கு இதுவே காரணமாக இருக்குமோ? டாக்டர் ஃப்ரை, உணர்ச்சிமிக்க அழுகை, வேதியியல் சமநிலையடைவதற்காக செய்யப்படும் உடம்பின் முயற்சி என நம்புகிறார். இயக்குநீர்கள் உண்மையில் அழுகையைத் தூண்டிவிடுகின்றன, இதனால் தான் நாம் அழுதப்பின்பு அடிக்கடி திருப்தியாக உணருகிறோம் என்று அவர் கொள்கை உருவாக்குகிறார்.

மனநோய் மருத்துவர் மார்கிரட் க்ரேப்போ செய்த மற்றொரு ஆராய்ச்சி, அழுகையை அழுகாமல் அடக்கிவைப்பதற்கும் “அழுத்தத்தினால் வரும் உள்ளுடம்பு கோளாறுகளாகிய வயிற்றுப்புண், பெருங்குடல் அழற்சி போன்றவற்றிற்கும்” உள்ள தொடர்பைக் கண்ட (Seventeen, மே 1990) மற்ற ஆராய்ச்சியாளர்கள் முரண்பாடானதற்குச் சான்றுகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஹெல்த் பத்திரிகை, மருத்துவர்கள் சூசென் லெபோட்-டும் ரேன்டால் மார்ட்டின்-னும், அடிக்கடி அழுபவர்களையும் அடிக்கடி அழாதவர்களையும் சோதித்துப்பார்த்தனர். அவர்களுடைய கண்டுபிடிப்புகள் கடுமையாக அழுவதால் அழுத்தஉணர்வுகள் குறைவதில்லை, மேலும் அடிக்கடி அழுபவர்கள் “அதிக உணர்ச்சிவசப்படுகிறவர்களாகவும் எளிதில் கவலைப்படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.” அவர்களுடைய தீர்மானம் என்னவென்றால், “ஒரு பிரச்னையிலிருந்து வெறுமென கவனத்தைத் திருப்புவதற்காக மட்டும்” பயன்படுத்தும்போது அது பயனுள்ளதாக இருப்பதில்லை என்பதே. என்றபோதிலும், ஓர் அதிர்ச்சிதரும் நிகழ்ச்சியை, உதாரணமாக பிரியமான ஒருவரின் மரணத்தை, ஏற்றுக்கொள்வதன் ஒரு முக்கிய பாகமாக அழுகை இருக்கக்கூடும்.

இவ்வாறு சொல்வதே பொருத்தமாக இருக்கிறது, உணர்ச்சிமிக்க கண்ணீரின் காரணமும் நோக்கமும் இன்னும் புரியாதபுதிராக இருக்கிறது.

மற்றவகை கண்ணீர்

உங்களுடைய கண்களில் இந்த நிமிஷத்தில் இருக்கின்ற தொடர்ச்சியான கண்ணீர்விடுதலின் செயல்பாட்டைப் பற்றி நாம் இன்னும் அதிகத்தை அறிகிறோம். அவை உங்களுடைய கண்களை ஈரப்பதத்தோடு வைத்திருப்பதைவிட அதிகத்தைச் செய்கிறது. இந்த அற்புதமான நீர்மம், அது உண்டாகி, பரவி, கண்ணீர்க்குழாய் அமைப்பின் வழியாக வெளியேறுகிற இந்தச் செயலில் அது ஈடுபடும்போது என்ன செய்கிறது என்பதை நாம் கவனிக்கலாம்.

இந்த முக்கியமான கண்ணீர் சுரப்பி, நம்முடைய கண்களின் வெளிப்புற ஓரத்தின் குழிபோன்ற பகுதியில் தான் காணப்படுகிறது. இந்த மென்மையான சுரப்பி, மற்ற 60 சுரப்பிகளோடு சேர்ந்து, சளி, நீர், எண்ணெய் என்பவற்றால் ஆன மூன்று விதமான அடுக்குகளை உடைய ஒரு மிக மெல்லிய படலத்தை (film) உண்டாக்குகிறது.

வெளியே தெரியும் விழிக்கோளத்தின்மீது இமை தங்குதடையின்றி மூடிதிறப்பதற்கு ஏற்ற வகையில் ஒரு வழவழப்பான பரப்பை இந்த உள்அடுக்காகிய, சளி அடுக்கு, உண்டாக்குகிறது. நீர் போன்ற அடுக்கு, இருக்கிற மூன்று அடுக்குகளில் மிக அதிக பருமனுள்ளதும், கருவிழிக்கு மிகவும் தேவையான பிராணவாயுவோடு, அநேக கூட்டுப் பொருள்களையும் உடையதாக இருக்கிறது. இதோடுகூட கண்ணீரில் சிறிதளவு லைசோசைமையும் மற்ற 11 நொதிப்பிகளையும் சேர்த்துக்கொள்ளுங்களேன். லைசோசைம் ஒரு மிகச்சிறந்த பாக்டீரியா செயல்முறுக்கி. இது கண்களைச் சுத்தமாகவும் தெளிவாகவும் வைக்கிறது.

கண்ணீரின்மீதான இறுதியான சரிப்படுத்தும் ஏற்பாடுகள், 30 மைபோமியன் சுரப்பிகளால் செய்யப்படுகின்றன, இமைகளுக்குள் உள்ள இரண்டு மூடிகளில் கோடுபோல் காணப்படும் அந்தச் சிறிய மஞ்சள்நிற புள்ளிகளே அவை. இந்தச் சுரப்பிகள் எண்ணெய் போன்ற அடுக்கை சுரக்கின்றன, இது அவ்வளவு மெல்லிசாக இருப்பதானது உங்களுடைய கண்களின் காட்சியை இது எவ்விதத்திலும் பாதிக்காமல் இருப்பதோடு, கண்ணீர் படலம் (tear film) ஆவியாகி மறையாமல் இருக்கவும், கண்சிமிட்டும்போது உண்டாகும் சகிக்க முடியாத உலர்ந்த புள்ளிகளை நீக்கவும் செய்கிறது. உண்மையில், சிலருக்கு இந்த எண்ணெய் குறைந்த அளவே உற்பத்தியாவதால், அவர்களுடைய கண்ணீர் சாதாரண நேரத்தைவிட சீக்கிரமாக அதிவேகத்தில் உலர்ந்துவிடுகிறது.

ஒரு கண்சிமிட்டில்

ஆகவே, இமை, மிகவிரைவாக துடைத்துவிட்டு, மிகச்சரியான கலைவையில் பொருள்களை வெளியேற்றி, கண்களின் மேலாக சரிசமமாக மூன்று அடுக்குகளில் பரப்பிவிடுகிறது. இந்த இமைகள் அதிக பொருத்தமாக ஒன்றையொன்று தொடுவதானது கண்ணின் வெளிக்காணப்படும் முழுப் பகுதியும் இந்தக் குணப்படுத்தும் கழுவுதலைப் பெரும்படிச் செய்கிறது.

வெளிவந்த கண்ணீருக்கு என்ன ஆகிறது? உங்களுடைய கண்ணை நீங்கள் கொஞ்சம் கூர்ந்துபார்த்தால் உள்ளான ஓரத்தில் ஒரு மிகச்சிறிய துளை இருப்பதைக் காண்பீர்கள், இது கண்ணீர்வடித்துளை என அழைக்கப்படுகிறது, இது கூடுதலான கண்ணீரை ஒரு குழாய்வழிப்பாதை மூலம் கண்ணீர்திசுப்பைக்குள் எடுத்துச்செல்கிறது. இங்கிருந்து கண்ணீர், மூக்குக்கும் தொண்டைக்கும் பின்புறமாக வந்து, அங்கு மென்சவ்வுகளினால் உறிஞ்சப்படுகிறது. கண்சிமிட்டுதல், கண்ணீர்ப்பையை ஒரு பம்ப் போல வேலைசெய்யும்படி தூண்டிவிடுகிறது, இது கண்ணீரை குழாய்ப்பகுதிக்கும் பின்பு கீழ்நோக்கியும் செல்லும்படிச் செய்கிறது.

நீங்கள் அழ ஆரம்பிக்கும்போது இயல்பாகவே மிக வேகமாக கண்சிமிட்ட ஆரம்பித்துவிடுகிறீர்கள், அந்தப் பம்ப்பை மிக விரைவாக செயல்படுத்தி அந்தக் கூடுதலான கண்ணீரையெல்லாம் எடுத்துப்போகும்படிச் செய்கிறீர்கள். எனினும், ஓர் உண்மையான கண்ணீர்பெருக்கு ஏற்படும்போது, அந்தப் பம்ப் சமாளிக்க முடியாதளவிற்கு கண்ணீர் கொட்டுகிறது, மூக்கு அறையில் உள்ள அந்தக் கண்ணீர்ப்பை நிரம்பிவடிகிறது, உங்களுடைய மூக்கு வழியாகவும் கண்ணீர்வடிய ஆரம்பித்துவிடுகிறது. இப்பொழுது நீங்கள் உங்களுடைய கைக்குட்டையை எடுக்க வேண்டியதிருக்கும், ஏனென்றால் இப்பொழுது தான் உங்களுடைய இமைகளுக்கு மேலாக கண்ணீர் வந்து, கன்னங்களில் வழிய ஆரம்பிக்கிறது.

ஆகவே, கண்ணீரை வரச்செய்வதற்கு எது தூண்டினாலும்—இருதயப்பூர்வமான வாழ்த்துதலோ அல்லது அவமதிக்கும் சுடுசொல்லோ, பொருத்தமான வேடிக்கைப்பேச்சோ அல்லது துன்பத்தின் மயக்கமோ, ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சியோ அல்லது மனதை ஆட்டிப்படைக்கும் ஏமாற்றமோ—எதுவாக இருந்தாலும், உங்களுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்ட தயார்நிலையில் உள்ள கண்ணீரின் சேமிப்புகிடங்கு உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. (g92 9/22)

[பக்கம் 23-ன் பெட்டி]

சிவந்த கண்களுக்கு உதவி

உங்கள் கண்களில் மட்டுமே அந்த எரிச்சலான, துகள் உட்சென்றதைப் போன்ற உணர்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. எது இதை உண்டாக்குகிறது? கண்ணின் வெண்ணிறப் பகுதியில் உள்ள ஜவ்வின் மேலான இரத்தக் குழாய்கள் விரிவடையும்போது சிவந்த கண்கள் உண்டாகின்றன.

கண்ணீரின் அளவுக்குறைவே காரணமாக இருக்கலாம். ஒளிக்காட்சி முகப்புகளின்மீது (வீடியோ டிஸ்பிலே டெர்மினல்) அல்லது அச்சடிக்கப்பட்ட பக்கங்களின்மீது கருத்தூன்றி அதிகநேரம் வேலைசெய்பவர்கள், போதிய அளவு கண்சிமிட்டுவதைச் செய்வதில்லை. சாதாரணமான கண்சிமிட்டும் வேகம், ஒரு நிமிடத்திற்கு 15 தடவைகள். வாசிக்கும்போது, வாகனம் ஓட்டும்போது, அல்லது மிக கவனமாக ஏதேனும் வேலைசெய்யும்போது, இந்த வேகம் ஒரு நிமிஷத்திற்கு மூன்று முதல் ஆறு தடவைகள் வரையாக குறையலாம், இது காய்ந்துபோவதையும் எரிச்சலையும் உண்டாக்குகிறது. மருத்துவர்கள், கண்சிமிட்டுதல் இடைவேளை என்றழைக்கப்படுகிற இடைவேளைகளை எடுக்கவும், கண்களின் எரிச்சலைத் தணியச்செய்வதற்கு கண்சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தவும் சிபாரிசு செய்கிறார்கள்.

தூங்கி எழுந்திருக்கும்போது கண்கள் ஓரளவு சிவப்பாக இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள், இது ஏனென்றால் இருண்ட இடத்திலும் தூங்கும்போதும் கண்ணீர்விடுவது மிக அதிகமாக குறைக்கப்படுகிறது.

வயதாகும் நிலை உண்டுபண்ணுவதுபோல, சில மருத்துவ சிகிச்சைகள் கண்ணீர் சுரப்பிகளை மெதுவாக செயல்படச் செய்கின்றன. தொற்றுநோய் அல்லது அழற்சிகளால் இமைகள் வீக்கமடைதல், சீதோஷ்ண உச்சநிலை மாறுபாடுகள், அல்லது தூய்மைக்கேடுகளும் சிவந்த கண்களை உண்டாக்கலாம்.

ஆபத்தின் காரணமாகவோ பிறப்புக்கோளாறுகளின் காரணமாகவோ இமை அல்லது சுரப்பிகள் அடைக்கப்படலாம் அல்லது உறுச்சிதைவு ஏற்படலாம், இது கண்ணீர் படலம் முழுவதுமாக கண்களில் பரவவிடுவதில்லை, அல்லது இந்தப் படலமும்கூட தன் கூட்டமைப்பில் சரிவர அமைக்கப்படாமல் இருக்கலாம்.

இதனால் இறுதியில், பல லட்சக்கணக்கானோர் ஜோக்ரென்ஸ் சின்ட்ரோம், தன்னுடல்தாங்குதிறன் கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர், இவை கண்ணீர், உமிழ்நீர், எண்ணெய் சுரப்பிகளையும் மற்ற சுரப்பிகளையும் பாதித்து, கண்கள், வாய், தோல் போன்றவற்றைக் காய்ந்துபோகச் செய்கின்றன.

கண்கள் நீடித்த காலமாக காய்ந்துபோயிருப்பதைக் குறித்து என்ன செய்யப்படலாம்? கண்களைச் சுற்றி காற்றுப்புகவிடாத அளவிற்கு ஒரு மூடியை உருவாக்கி கண்ணீர் ஆவியாவதைத் தடுக்கும் விசேஷித்த கண்ணாடிகள் இருப்பதுபோல, செயற்கைக் கண்ணீர், சொட்டுவடிவிலும், சிறுஉருண்டைவடிவிலும், மிகப்பரவலாக கிடைக்கின்றன. மகிழ்ச்சிதராததாக இருந்தாலும், இந்த நிலைகள், மிக அரிதாகவே குருடாகும் நிலைக்கு கொண்டுசெல்கின்றன. எனினும், குணப்படுத்தப்படாமல் விடப்பட்டால், நீண்டகாலமாக இருக்கும் காய்ந்துபோகும்தன்மை, கருவிழியைப் பாதிக்கலாம், எனவே மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிக அவசியமாகும்.

[பக்கம் 24-ன் பெட்டி]

“என் கண்ணீரை நீர் உம் தோற் பையில் சேர்த்து வைத்திருக்கிறீர்”

சங்கீதக்காரனாகிய தாவீது தன் ஆழ்ந்த பெருந்துயரத்தை அவருடைய கடவுள் ஏறெடுத்துப்பார்க்கும்படி கெஞ்சிக்கேட்கும்போது, இவ்வாறு எழுதினார். (சங்கீதம் 56:8, கத்.பை.) ஆம், கடவுளுக்கு விசுவாசமாக இருந்த ஊழியக்காரர்களுக்கும்கூட மிகுந்த துயர்தரும் சூழ்நிலைகள் அழுகையை வரச்செய்திருக்கின்றன.

தன் குமாரர்கள், அம்னோன், அப்சலோம், உண்மையுள்ள நண்பனாகிய யோனத்தானும் சவுல் ராஜாவும் மரித்த சமயங்களில், தாவீது ராஜாவின் கண்ணீர்நிறைந்த கடுந்துயரத்தை கற்பனைசெய்து பாருங்கள். (2 சாமுவேல் 1:11, 12; 13:29, 36; 18:33) அமலேக்கியர் சிக்லாகு நகரத்தைக் கொள்ளையடித்து, தாவீதின் மற்றும் அவருடைய பலவான்களின் மனைவிகளையும் பிள்ளைகளையும் கடத்திச்சென்றபோது, அவர்கள் “அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்.”—1 சாமுவேல் 30:4.

யாக்கோபு, மோசே, மரித்தபோது, முழுதேசங்களும் பலநாட்களாக அழுது துக்கங்கொண்டாடியது மிகப்பேரளவானதாக இருந்திருக்க வேண்டும். (ஆதியாகமம் 50:3; உபாகமம் 34:8) சிறைப்படுத்துதலும், துன்புறுத்துதல்களும் யெகோவாவின் செவிகளுக்குத் துயரங்களின் கதறுதல்களாக இருந்தது. (யோபு 3:24; சங்கீதம் 137:1; பிரசங்கி 4:1) புலம்பல் புத்தகம் முழுவதும், சோகக் கண்ணீர் சிந்தின எரேமியாவினால் எழுதப்பட்ட ஒரு சோகமான புலம்பல் பாடல் ஆகும்.—புலம்பல் 1:16; 2:11, 18; பாருங்கள் 1:1, அடிக்குறிப்பு.

அழுகை, இயலாமையின் அடையாளமாக இருப்பதற்குப் பதிலாக, அதிக உணர்ச்சிகளின் ஓர் இயல்பான வெளிப்பாடாக இருக்கிறது. எனவே தான், பரிபூரண மனிதனாகிய இயேசுவும்கூட கண்ணீர்விட்டார். எருசலேம் நகரைக் குறித்து ஒரு தடவை கண்ணீர்விட்டார், மீண்டும் ஒருமுறை, மரித்த லாசருவின் கைவிடப்பட்ட குடும்பத்தினரையும் நண்பர்களையும் சந்தித்தபோது அழுதார். (லூக்கா 19:41; யோவான் 11:33-35) எனினும், இயேசு, தன் பிரியமான நண்பனை கல்லறையிலிருந்து வெளிவரும்படி கூப்பிட்டபோது, அந்தக் குடும்பத்தினரின், நண்பர்களின் சோகக் கண்ணீரெல்லாம் ஆனந்தக் கண்ணீராக உடனே மாறியது.—யோவான் 11:41-44.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்