குழந்தைகளுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தலைத் தடுத்தல், 1882
“குழந்தைகளுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தலைத் தடுக்கும் சங்கம், 1882. குழந்தைகளுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தலைத் தடுக்கும் சங்கம் 1875-ல் ஹென்றி பர்க் என்பவரால் நியூ யார்க்கில் நிறுவப்பட்டது. இந்தச் சங்கம் நகரத்தில் துர்ப்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகளுக்கு எந்தவித பாதுகாப்பும் கொடுப்பதற்காக நிறுவப்பட்ட முதல் அமைப்பாகும். நிறுவப்பட்டு ஏழு வருடங்கள் கழித்து, இசைவற்ற குடும்பங்களிலிருந்து குழந்தைகளைப் பிரித்தெடுத்தல், துன்புறுத்துபவர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள்மூலம் நடவடிக்கை எடுத்தல், இவ்வாறு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான புகார்களைக் கையாளுகிறது. இந்தச் சோக உணர்ச்சிமிக்க செதுக்குச் சித்திரம், ஒரு வீட்டில் அதிகாரிகள் தகுந்த சமயத்தில் தலையிடுவதை உருப்படுத்திக் காட்டுகிறது.”—நியூ யார்க் இன் தி நைன்டீந்த் செஞ்சுரி, ஜான் கிராப்டனால் எழுதப்பட்டது. (g92 9/22)