ஒற்றைக் காதுள்ள கும்பிட்டான் பூச்சி
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், கற்பனையான ஒரு தேசத்தில் வாழ்ந்த ஒற்றைக் கண்ணுடைய அச்சுறுத்தும் அரக்கர்களைப் பற்றி கிரேக்க கட்டுக்கதைகள் விவரித்தன. இந்த உருக்குலைந்த கொடியவர்கள், மனிதனின் வளமான கற்பனையில் மட்டுமே வாழ்ந்தனர்.
என்றபோதிலும் சமீபத்தில், ஒற்றைக் காதுள்ள சிருஷ்டிகளின் ஒரு கூட்டம் எதிர்பாராத விதமாக அறிவியலாளர்களின் கண்களுக்கு முன்பாகவே தென்பட்டுள்ளது. அவையே கும்பிட்டான் பூச்சிகள்.
கும்பிட்டான் பூச்சியின் இரகசியம் ஏன் இப்போதுதான் அறியப்பட்டு வருகிறது? கும்பிட்டான் பூச்சி மற்ற பூச்சிகளைப்போல சத்தமிடுவதோ சத்தத்திற்குப் பிரதிபலிப்பதோ கிடையாது என்பதால் செவிடாக இருக்கும் என்று நெடுங்காலமாக அறிவியலாளர்கள் ஊகித்தனர். காரியங்களை அதிக குழப்பமாக்கும்விதத்தில், கும்பிட்டான் பூச்சியின் காது நீங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் அதன் தலையில் இல்லை. கும்பிட்டான் பூச்சியின் அடிபாகத்தில் அதன் காது “சுமார் ஒரு மில்லி மீட்டர் நீளமுள்ள ஒரு ஆழமான பிளவு” என்று இயற்கை சரித்திரம் (ஆங்கிலம்) பத்திரிகை விவரிக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு சாதகமற்ற இடத்தில் ஒரே ஒரு காதைக் கொண்டிருப்பது கொஞ்சம் அசௌகரியமானதாக இருக்கிறதல்லவா? ஒரு சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு மனிதர்களாகிய நாம் நம்முடைய இரண்டு காதுகளையும் பயன்படுத்துகிறோம். அந்தத் திறமையின்றி கும்பிட்டான் பூச்சியால் வாழ முடியும் என தோன்றுகிறது. உயிருக்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களைக் குறித்து எச்சரிக்கும் விதத்தில் அதன் கேட்கும் திறன் திட்டமைக்கப்பட்டிருக்கிறது. உட்பொருத்தப்பட்டுள்ள ஒலியுணர் கருவி ஒன்றை கும்பிட்டான் பூச்சி கொண்டிருக்கிறது.
செவியுணரா ஒலிகளைக்கூட கும்பிட்டான் பூச்சியின் காது கேட்கிறது; முக்கியமாக, கும்பிட்டான் பூச்சி போன்ற பூச்சிகளுக்காக வௌவால்கள் வேட்டையாடுகையில் இடும் சத்தத்தைக் கேட்கிறது. செவியுணரா ஒலியையும் கவனமாகக் கேட்கும் திறன் கும்பிட்டான் பூச்சிக்கு இருப்பதால், ஒரு வௌவால் அணுகும்போது அந்தக் கும்பிட்டான் பூச்சி விரைந்து தப்பியோட முயலுவதை அறிவியலாளர்கள் கவனித்திருப்பதாக இயற்கை சரித்திரம் அறிக்கை செய்கிறது. ஆனால், தன் இரையைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு விரைவாகப் பறக்கக்கூடிய ஒரு வௌவாலிடமிருந்து கும்பிட்டான் பூச்சி எப்படி தப்பித்துக்கொள்கிறது?
செவியுணரா அபாய ஒலி அறிகுறியைக் கும்பிட்டான் பூச்சி கேட்டதும்—பொதுவாக அந்த வௌவால் சுமார் பத்து மீட்டர் தூரத்திற்குள் இருக்கையில்—ஒரு நொடிப்பொழுதிற்குள், அந்தக் கும்பிட்டான் பூச்சி செங்குத்தாகப் பாய்ந்து செல்கிறது. வேண்டுமென்றே வேகத்தைக் குறைத்து இதை அது செய்வதுபோல் தோன்றுகிறது; நவீன போர் விமானவோட்டிகள் பயன்படுத்துவதைப்போன்ற ஒரு தற்காப்பு ஏற்பாடாக இது இருக்கிறது. உண்மையில், கும்பிட்டான் பூச்சி, “வான்சார்ந்த போர் சூழ்ச்சி முறைகளில் முன்னேற்றுவிக்கப்பட்ட பாடம் ஒன்றை அளிக்கிறது,” என்று இயற்கை சரித்திரம் குறிப்புத் தெரிவிக்கிறது.
‘முன்னேற்றுவிக்கப்பட்ட வான்சார்ந்த போர் சூழ்ச்சி முறையை’ கும்பிட்டான் பூச்சி எப்படி கற்றுக்கொண்டது? செவியுணரா ஒலிகளைக் கேட்கும் கருவியை அதற்குத் திட்டமைத்தவர் யார்? நிச்சயமாகவே, முற்பிதாவாகிய யோபு நியாயமான பதிலை அளிக்கிறார்: “கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?”—யோபு 12:9.