உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 4/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1995
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1995
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 4/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

சிந்தனைச் சுயாதீனம் நான் அடிக்கடி என் மனதை அலையவிட்டு, விரும்பப்படாத எண்ணங்களில் மூழ்கியிருந்தேன். ஆகவேதான் “பைபிளின் கருத்து: சிந்தனைச் சுயாதீனத்தை பைபிள் தடைசெய்கிறதா?” (ஜூன் 8, 1994) என்ற கட்டுரையை வாசித்துவிட்டு திகைத்துப்போனேன். மனமார அறிந்திருந்தும் தவறான போக்கிலேயே சிந்தனையை செலுத்திக்கொண்டிருப்பதை யெகோவா தேவன் ஒரு பாவமாகக் கருதுவார் என்று நான் ஒருபோதும் யோசித்ததில்லை. எனது தவறான எண்ணங்களைத் திருத்திக்கொள்ள உதவும் அத்தகைய நேர்மறை அறிவுரையைக் கொடுப்பதற்காக யெகோவாவுக்கு நன்றி!

ஜே. பி., பிலிப்பீன்ஸ்

காதல் பிரச்சினைகள் “இளைஞர் கேட்கின்றனர் . . . விசுவாசத்தில் இல்லாத ஒருவரை நான் காதலித்தால் என்ன?” (மே 22, 1994) “நான் ஒருவரை விரும்புவதை நிறுத்துவது எப்படி?” (ஜூன் 8, 1994) ஆகிய கட்டுரைகளுக்காக உங்களுக்கு மிக்க நன்றி. என்னோடு வேலை செய்யும் ஒரு பெண் என்னை மிகவும் நேசித்தாள்; நானும் அவளால் கவரப்பட்டவனாய் உணர்ந்தேன். இது தவறு என்று எனக்குத் தெரியும், ஆகவே உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தேன். இந்தக் கட்டுரைகளை நான் பார்த்தபோது அவற்றைத் திரும்பத்திரும்ப வாசித்தேன். உறவை முறித்துக்கொள்வதால் ஏற்படும் சிறிதுகால மனவேதனை, கேடான உறவுமுறையினால் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் பிரச்சினைகளைவிட எவ்வளவோ மேல் என்பதை இப்போது உணர்கிறேன்.

பி. ஜே., ஐக்கிய மாகாணங்கள்

இந்தக் கட்டுரைகள் எனக்காகவே எழுதப்பட்டிருப்பதைப்போல் தோன்றுகிறது! இந்தக் கட்டுரைகள் பிரசுரிக்கப்படாமல் இருந்திருந்தால் என்னுடைய கதி என்ன ஆகியிருக்கும் என்று நான் யோசித்துப் பார்க்கிறேன். இளைஞர்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளை அறிந்திருப்பதற்காக உங்களுக்கு நன்றி.

எஸ். ஜே., நைஜீரியா

என் வகுப்பு மாணவன் ஒருவனோடு நான் மோகம் கொண்டிருக்கிறேன். அவன் கட்டழகனாகவும் மிகவும் கண்ணியமுடையவனாகவும் இருக்கிறான். ஆனாலும், அந்தக் கட்டுரையை நான் படித்ததிலிருந்து ‘அவருக்கு என்னுடையதைப் போன்ற இலக்குகளும் வாழ்க்கை முறையும் இருக்கின்றனவா?’ என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதைச் சீர்தூக்கிப் பார்த்தபோதுதான் எனக்குப் புரிகிறது நான் இந்நாள்வரை எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறேன் என்று. இந்த மோகத்திலிருந்து விரைவில் வெளியேவர விரும்புகிறேன்!

எஸ். டி., ஜப்பான்

நான் அவிசுவாசி ஒருவரைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டேன். அவர் சும்மா என்னை திருப்திப்படுத்தவே கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வந்தார். நாங்கள் கல்யாணம் செய்துகொண்டபின் அவர் மாறிவிட்டார். நான் யெகோவாவை சேவிப்பதைத் தடைசெய்யவும்கூட அவர் முயற்சித்தார். என்னை அடித்து எனக்கு உண்மைத்தன்மையற்றவராய் நடந்துகொண்டார். நான் இப்போது விவாகரத்து செய்யப்பட்ட நிலையில் இருக்கிறேன். விசுவாசத்தில் இல்லாத ஒருவரைக் காதலிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை எல்லா இளைஞர்களும் உணர்ந்தார்களானால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நான் பட்ட பாட்டை வேறு யாரும் படக்கூடாது என்று நான் விரும்புகிறேன்.

டி. எஃப்., பியூர்டோ ரிகோ

மன அழுத்தம் “பைபிளின் கருத்து: மன அழுத்தத்தைச் சமாளிக்க எது உங்களுக்கு உதவக்கூடும்?” (செப்டம்பர் 8, 1994) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு மிக்க நன்றி. நான் கிறிஸ்தவத்தில் வளர்க்கப்பட்டேன், ஆனால் என்னுடைய பருவவயதில் சத்தியத்தைவிட்டு விலகிப்போனேன். நான் சத்தியத்திற்குள் திரும்பவந்து இப்போது மூன்று வருடங்களாகின்றன, ஆனால் விசுவாசத்தில் இல்லாத ஒருவரை கல்யாணம் செய்துகொண்டேன். எப்போதும் நான் செய்த தவற்றையே நினைத்துக்கொண்டிருக்கிறேன்; என்னுடைய பெரும் மன அழுத்தத்திற்கு இதுதான் காரணமாக இருந்துவந்திருக்கிறது என்றே உணரவில்லை. கடந்தவற்றையே நினைத்துக் கொண்டிருப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதைக் காண எனக்கு உதவியதற்கு உங்களுக்கு நன்றி. மாறாக, என்னுடைய எதிர்காலத்திற்காக உழைக்கவேண்டும்.

ஆர். எல்., ஐக்கிய மாகாணங்கள்

‘எல்லா வயதினரும் மன அழுத்தத்தை அனுபவிக்கின்றனர்’ என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். எனக்கு வயது 21, கடுமையான மன அழுத்தத்தால் அல்லல்படுகிறேன். தசை விறைப்புக்காகவும் மன அழுத்தம் சம்பந்தப்பட்ட ஒற்றைத் தலைவலிக்காகவும் எட்டு மாதத்திற்குள் இரண்டு முறை ஆஸ்பத்திரியில் இருந்திருக்கிறேன். இந்தச் சின்ன வயதில் எனக்கு இவ்வளவு மன அழுத்தம் கூடாதே என்று டாக்டர்கள் ஒவ்வொரு முறையும் சொன்னார்கள். இவ்வாறு உங்களுடைய கட்டுரை எனக்கு ஓரளவு மன நிம்மதியைக் கொடுத்தது.

வி. பி., ஐக்கிய மாகாணங்கள்

புவியியல் பாடம் நான் ஒரு பதினொரு வயது சிறுமி. “டிடிகாகா ஏரியின் மிதக்கும் தீவுகள்” (ஜூன் 22, 1994) என்ற கட்டுரையை நான் பெரிதும் போற்றினேன். டிடிகாகா ஏரியில் ஆட்கள் வாழ்ந்திருக்கின்றனரா என்று புவியியல் வகுப்பில் ஆசிரியை கேட்டார். என் வகுப்பில் அனைவரும் இல்லை என்று சொன்னார்கள். நான் விழித்தெழு!-வைப் படித்திருந்ததால் ஆம் என்று பதிலளித்தேன். எனக்கு எப்படி தெரியும் என்று ஆசிரியை கேட்டார். இது அவருக்கு ஒரு நல்ல சாட்சி கொடுப்பதற்கு வாய்ப்பாக அமைந்தது.

எஸ். பி., இத்தாலி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்