உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 5/8 பக். 31
  • விசித்திர சுவையுடைய நண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விசித்திர சுவையுடைய நண்டு
  • விழித்தெழு!—1995
  • இதே தகவல்
  • உலகிலேயே மிகவும் பயனுள்ள காய்களில் ஒன்று
    விழித்தெழு!—2003
  • ஜாரவா மக்களிட மிருந்து கற்றுக்கொள்ளுதல்
    விழித்தெழு!—1991
  • “மனிதனின் மிக பயனுள்ள மரம்”
    விழித்தெழு!—1994
  • பாடம் 6
    என் பைபிள் பாடங்கள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 5/8 பக். 31

விசித்திர சுவையுடைய நண்டு

சாலமன் தீவுகளிலுள்ள விழித்தெழு! நிருபர்

தேங்காய் நண்டு (coconut crabs)—கேட்பதற்கு விநோதமாக இருக்கிறதா?a சாலமன் தீவுகளின் பாகமாகிய, நியூ ஜார்ஜியா தீவுகளையும் உட்பட ஒருசில இடங்களில் மட்டுமே இது காணப்படுகிறது.

“தேங்காய் நண்டுகளா? ஆமா, இங்கதான் இருக்கு, ஆனா நீங்க ராத்திரியிலதான அத பாக்கமுடியும்,” என்று அந்த உள்ளூர் ஜனங்கள் சொல்கின்றனர், இரவில் நடமாடி பகலில் ஓய்ந்திருக்கும் (nocturnal) இந்த நண்டுகள், பகல் நேரத்தை அடர்ந்த காட்டுப் புதர்களில் உள்ள அழுகிப்போன மரங்களின் அடிமரத்தில் உள்ள ஓட்டைகளுக்குள் கழிக்கின்றன. ராத்திரியில் வெளியே வந்து, அவை தேங்காயை, ஆம், தேங்காயை சாப்பிடுகின்றன. பலம்வாய்ந்த தங்களுடைய கொடுக்குகளால் தேங்காய் மட்டைகளை உரித்தெடுக்கின்றன. ஆனால் அவை மிருதுவான பலவகை தாவரங்களையும்கூட சாப்பிடுகின்றன. ஆர்வமூட்டக்கூடிய இந்தப் பிராணியைப் பார்க்கவேண்டுமானால், விழுந்துபோய் அழுகிக்கொண்டிருக்கும் மரங்களின் அடிபாகத்தில் உள்ள கறுத்த ஓட்டைகளின் நுழைவாயில் முன்பு குவிந்து கிடக்கும் உரித்த தேங்காய் மட்டைகளை ஒருவர் தேடவேண்டும்.

ஜூன், ஜூலை மாதங்களின்போது, இந்த நண்டுகள் நிலத்திற்குள் வளைதோண்டி புதைந்துகொள்கின்றன; அங்குத் தங்களுடைய மேல் ஓட்டைக் களைந்துவிட்டு, வெளியே வருவதற்குமுன் ஒரு புதிய, பெரிய மேல் ஓட்டை வளர்த்துக் கொள்கின்றன என்று அந்தத் தீவுவாசிகள் விவரிக்கின்றனர். சில தேங்காய் நண்டுகள் 50 வருடங்கள்வரை வாழ்ந்திருப்பதால், அவை எவ்வளவு பெரியதாக வளரக்கூடும் என்பதை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். நான் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே சுமார் 50 சென்டிமீட்டர் கால் அகலமுள்ள ஒரு நண்டு அதன் வளையிலிருந்து வெளியே வந்தது.b

விசனகரமாக, மேல்தோல் களைவதற்காக உள்ள அவற்றின் வளை பாதுகாப்பானதாக தோன்றினாலும், வேட்டைக்காரன் வந்தால் அது பாதுகாப்பற்றதாகவே ஆகிவிடுகிறது. ஏனென்றால், நிலத்தில் வளையின் துவக்கத்தை அடையாளப்படுத்திக் காட்டும் வட்டவட்டமான குழி எதற்கு அடையாளமாக இருக்கிறது என்பது வேடனுக்குத் தெரியும். பாதுகாப்பற்ற இந்த அப்பாவி நண்டு விரைவில் வெளியே இழுக்கப்பட்டு ருசி ரசித்து சாப்பிடுபவரின் மேசையில் பரிமாறப்படுகிறது. ஆசியாவிலுள்ள உணவகங்கள் இந்த நண்டை, விசேஷமாக அதன் வளைந்த, மிருதுவான, பின்னங்கால்களில் உள்ள மாம்சம் மிகவும் விலைமதிப்புள்ளதாக கருதுகின்றன.

ஆகவே இங்கு சாலமன் தீவுகளில் தேங்காய் நண்டு பூண்டோடு அற்றுப்போவதற்கான வாய்ப்பிருப்பது மெய்யான கவலையாக இருக்கிறது. ஏற்றுமதி செய்யப்படும், முட்டைகளைத் தாங்கியிருக்கும் பெண் நண்டுகளின் எண்ணிக்கைக்கும், ஏற்றுமதி செய்யப்படும் நண்டுகளின் அளவுக்கும் மீன்துறை வரம்பை நிர்ணயிக்கிறது. பண்ணைகளை ஏற்படுத்தி, அவற்றிலிருந்து நண்டுகளை அவற்றின் இயற்கைச் சூழலுக்குள் கொண்டுபோய் விடும்படி சிலர் ஆலோசனை கூறியிருக்கின்றனர். ஆனால் அவற்றின் இனப்பெருக்க பழக்கங்களைப்பற்றி போதுமானளவு தெரியாததால், அதிக ஆராய்ச்சி தேவையாய் இருக்கிறது.

தேங்காய் நண்டுகளின் குறைந்துவரும் எண்ணிக்கையானது, ஒரு சமநிலையான சுற்றுச்சூழலை ஸ்தாபிக்கும் ஒரு உலக ஒழுங்குமுறைக்கான தேவையை இன்னும் அழுத்திக் காட்டுகிறது. அதன்கீழ், படைப்பாளரின் பூமிக்குரிய படைப்புகளின் அற்புதகரமான வகைகளில் ஒவ்வொன்றும், சங்கீதம் 148:5-10-ஐ நிறைவேற்றுவதில் தங்களுடைய பாகத்தை வகிக்கமுடியும்: “அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது. . . . ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே, . . . பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.”

[அடிக்குறிப்புகள்]

a கொள்ளைக்கார நண்டு (robber crab) என்றும் இது அறியப்படுகிறது.

b முழு வளர்ச்சியடைந்த தேங்காய் நண்டுகள் தலை முதல் வால் வரை சுமார் ஒரு மீட்டர் நீளமும் சுமார் 17 கிலோகிராம் எடையும் உள்ளவையாய் இருக்கின்றன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்