உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 1/8 பக். 26-27
  • மரியாள் ‘சர்வேசுரனுடைய மாதாவா’?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மரியாள் ‘சர்வேசுரனுடைய மாதாவா’?
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மரியாள்—கடவுளால் ‘மிக உயர்வாகத் தயவுகூரப்பட்டவர்’
  • ‘புத்தியுள்ள ஜீவன்களுக்கு ஏற்றவாறு வணங்குங்கள்’
  • மரியாள் கடவுளுடைய தாயா?
    பைபிள் தரும் பதில்கள்
  • மரியாள் (இயேசுவின் தாய்)
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
  • ‘இதோ, நான் யெகோவாவுக்கு அடிமை!’
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • ‘இதோ, நான் யெகோவாவுக்கு அடிமை!’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 1/8 பக். 26-27

பைபிளின் கருத்து

மரியாள் ‘சர்வேசுரனுடைய மாதாவா’?

“உம்முடைய அருளின் நிழலின் கீழ் அடைக்கலம் நாடுகிறோம், ஓ சர்வேசுரனுடைய மாதாவே; தேவையிலிருக்கும்போது நாங்கள் செய்யும் வேண்டுதலை ஒதுக்காதேயும் ஆனால் நரகத்திலிருந்து எங்களை இரட்சியும், ஆசீர்வதிக்கப்பட்டவர் நீர் ஒருவரே.”

இயேசுவின் தாயாகிய மரியாளின் மீது பக்தி கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்களுடைய உணர்ச்சிகளை இப்படிப்பட்ட ஒரு ஜெபம் தொகுத்துரைக்கிறது. அவர்களுடைய கண்களில், தங்களுக்காக தேவனிடம் பரிந்து பேசக்கூடிய மற்றும் தங்கள் மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்புகளை ஏதோவொரு விதத்தில் குறைக்கக்கூடிய ஒரு அன்புள்ள தாயின் வடிவம் அவர்.

எனினும், மரியாள் உண்மையிலேயே ‘சர்வேசுரனுடைய மாதாவா’?

மரியாள்—கடவுளால் ‘மிக உயர்வாகத் தயவுகூரப்பட்டவர்’

மரியாள் சந்தேகமில்லாமல் ‘மிக உயர்வாகத் தயவுகூரப்பட்டவர்’—உண்மையில், எக்காலத்திலும் வாழ்ந்திருக்கும் எந்தப் பெண்ணைப்பார்க்கிலும் அதிகமாக தயவுகூரப்பட்டவர். (லூக்கா 1:28, தி ஜெரூசலம் பைபிள்) கபிரியேல் தூதர் மரியாளுக்குத் தோன்றி அவர் எவ்வளவு சிலாக்கியமுள்ளவராக இருப்பார் என்பதைக் குறித்து விளக்கினார். “இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் மேன்மைமிக்கவராயிருப்பார். உன்னதரின் மகன் எனப்படுவார்,” என்பதாக அவர் சொன்னார். இந்த அற்புதமான சம்பவம் எவ்வாறு சாத்தியமாகும்? கபிரியேல் தொடர்ந்தார்: “பரிசுத்த ஆவி உம்மீது வருவார். உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும்.”—லூக்காஸ் 1:31, 32, 35, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்.

“மரியாளோ, ‘இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்’ என்றாள்.” (லூக்காஸ் 1:38, கத்.பை.) இவ்வாறு மரியாள் மனத்தாழ்மையோடு இந்தத் தெய்வீக வழிநடத்துதலுக்கு இணங்கி ஏற்ற காலத்தில் இயேசுவை பெற்றெடுத்தார்.

எனினும், அதைப் பின் தொடர்ந்த அநேக நூற்றாண்டுகளாக, ஒரு தாழ்மையுள்ள ‘ஆண்டவருடைய அடிமையாக’ இருந்த அவரை விண்ணுலகத்தில் அதிக செல்வாக்குள்ள “அரசரின் தாய்” என்னும் ஸ்தானத்திற்கு பக்தர்கள் உயர்த்தினர். எபேசுவின் ஆலோசனை சபையில் பொ.ச. 431-ல் சர்ச் தலைவர்கள் அவரை “சர்வேசுரனுடைய மாதா” என்று அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இந்த மாற்றத்தை எது தூண்டுவித்தது? போப் ஜான் பால் II ஒரு காரணத்தை விளக்குகிறார்: “சர்வேசுரனுடைய மாதாவின்பேரிலுள்ள உண்மையான பக்தி . . . . புனிதமான திரித்துவத்தின் மர்மத்தில் மிகவும் ஆழமாக வேரூன்றப்பட்டிருக்கிறது.”—நம்பிக்கையின் வாயிலைக் கடப்பது (ஆங்கிலம்).

ஆகவே, ‘சர்வேசுரனுடைய மாதாவாக’ மரியாளை ஏற்றுக்கொள்வது திருத்துவத்தை நம்புவதன்பேரில் சார்ந்திருக்கிறது. இருந்தபோதிலும், திரித்துவம் ஒரு பைபிள் போதகமா?a பைபிளில் அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதியிருப்பதை தயவுசெய்து ஆராயுங்கள். “பொய்ப் போதகர்கள் . . . அழிவை விளைவிக்கும் தவறான கொள்கைகளைப் புகுத்தி, . . . பசப்பு மொழி பேசி, உங்களிடம் பணம் சுரண்டுவர்.” (2 இராயப்பர் 2:1, 3, கத்.பை.) அப்படிப்பட்ட தவறான கொள்கைகளில் ஒன்று திருத்தவ போதனையாயிருந்தது. அது ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, மரியாள் “சர்வேசுரனுடைய மாதா” (கிரேக்கில்: தியோடகஸ், “கடவுளை பெற்றளித்தவர்” என்ற அர்த்தமுடையது) என்ற எண்ணம் நியாயமாகியது. திரித்துவ கோட்பாட்டாளர்கள் நியாயப்படுத்தும் விதமாக, “கிறிஸ்து கடவுளாக, திரித்துவத்தின் இரண்டாம் ஆளாக இருக்கிறாரென்றால், அப்பொழுது, மனிதனாக இருந்தபோது கிறிஸ்துவிற்கிருந்த தாய் தேவனுடைய தாயாக இருந்தார்,” என்று கன்னிகை (ஆங்கிலம்) என்ற தன்னுடைய புத்தகத்தில், ஜெஃப்ரீ ஆஷ் குறிப்பிடுகிறார்.

புதிய கத்தோலிக்க சர்ச்சின் கேட்டகிஸம் (ஆங்கிலம்) குறிப்பிடும்பிரகாரமாக, இயேசு ‘நிறைவான மற்றும் முழுமையான கடவுளாக’ ஒருவேளை இருந்தாரென்றால், அப்பொழுது “சர்வேசுரனுடைய மாதா” என்று சரியாகவே மரியாள் அழைக்கப்படலாம். எனினும், அது முதலில் எடுத்துரைக்கப்பட்டபோது, அநேக பூர்வீக திரித்துவ கோட்பாட்டாளர்கள்—இன்று திரித்துவ புரட்டஸ்டன்டினர்களைப்போல—அந்தப் போதகத்தை ஏற்றுக்கொள்வதை கடினமாகக் கண்டனர் என்று சொல்லப்படவேண்டும். அது இவ்வாறு அழைக்கப்படுகிறது, “முரண்பட்டதுபோல் தோன்றும் பக்தியூட்டுகிற மெய்யுரை, ‘வானங்களும் கொள்ளமுடியாத அவரை மரியாளுடைய கருப்பை கொண்டிருந்தது.’” (கன்னிகை) [ஆங்கிலம்]—1 இராஜாக்கள் 8:27-ஐ ஒப்பிடுக.

ஆனால் இயேசு கிறிஸ்து உண்மையிலேயே ‘நிறைவான மற்றும் முழுமையான கடவுளா’? இல்லை, அவர் எப்போதும் அவ்வாறு உரிமை பாராட்டவில்லை. அதற்கு மாறாக, தன்னுடைய தகப்பனோடு தனக்கிருக்கும் கீழ்ப்படிதலுள்ள ஸ்தானத்தை அவர் எப்போதும் ஒப்புக்கொண்டார்.—மத்தேயு 26:39; மாற்கு 13:32; யோவான் 14:28; 1 கொரிந்தியர் 15:27, 28 ஆகியவற்றைக் காண்க.

‘புத்தியுள்ள ஜீவன்களுக்கு ஏற்றவாறு வணங்குங்கள்’

எனினும், வணக்கத்தில் தங்களுடைய நியாயமாய் சிந்திக்கும் திறனை பயன்படுத்துமாறு கிறிஸ்தவர்களை பைபிள் உற்சாகப்படுத்துகிறது. மர்மம் என்பதாகப் பொய் தோற்றமளிக்கும் ஒன்றின்மீது குருட்டுத்தனமான நம்பிக்கை வைக்கும்படியாக நாம் கேட்கப்படவில்லை. அதற்கு மாறாக, நாம் ‘புத்தியுள்ள ஜீவன்களுக்கு ஏற்றவாறு வணங்கவேண்டும்,’ என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார்.—ரோமர் 12:1, JB.

ஒரு கத்தோலிக்கப் பெண்ணாக வளர்க்கப்பட்ட ஆன் சொல்கிறாள், “அதைக் குறித்து யோசித்துப் பார்க்க நாங்கள் எப்போதுமே உற்சாகப்படுத்தப்பட்டதில்லை. அதைக் குறித்து நாங்கள் எப்போதுமே கேள்வி கேட்டதில்லை. நாங்கள் வெறுமனே இயேசுவை கடவுளாக நம்பினோம், ஆகவே மரியாள் ‘சர்வேசுரனுடைய மாதாவாக’ இருந்தார்—அது மிகவும் விசித்திரமான ஒன்றாயிருந்தது!” ‘தெய்வீக ஐக்கியத்தின்’ ஒவ்வொறு அங்கத்தினரும் “நிறைவான மற்றும் முழுமையான கடவுள்” என்பதாக கத்தோலிக்க சர்ச்சின் கேட்டகிஸம் சொல்கிறதென்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். மூன்று தனித்தனி கடவுட்கள் இல்லை என்பதாக அது சொல்கிறது. அப்படியென்றால், மரியாளின் கருப்பையிலிருக்கும் உயிரணுக்கள் பகுதிகளாக மறுபடியும் மறுபடியுமாக பிரிந்து கொண்டிருந்தபோது, கர்ப்பத்தின் முதலாம் மாதத்தில் கால் அங்குல நீளத்திற்கும் குறைவாக வளர்ந்திருந்த மற்றும் வளர்ச்சியடையாத கண்கள் மற்றும் காதுகளை உடைய ஒரு கருவில் “நிறைவான மற்றும் முழுமையான கடவுள்” அடங்கியிருந்தார் என நாம் நம்பவேண்டுமா?

தூதராகிய கபிரியேல் மரியாளிடம் அவருடைய பிள்ளை “கடவுளாகிய மகன்” என்பதாக அல்ல ஆனால் “கடவுளுடைய மகன்” என்றும் “உன்னதமானவரின் மகன்” என்றும் அழைக்கப்படுவார் என்று சொன்னதை நினைவில் வையுங்கள். ஒருவேளை, உண்மையில், இயேசு சர்வவல்லமையுள்ள கடவுளாயிருக்கிறாரென்றால், இன்று திரித்துவ கோட்பாட்டாளர்கள் உபயோகிக்கக்கூடிய “கடவுளாகிய மகன்” என்ற அதே பதத்தை ஏன் கபிரியேல் தூதர் உபயோகிக்கவில்லை? இந்தப் போதனை பைபிளில் காணப்படாததன் காரணமாக கபிரியேல் அந்தப் பதத்தை பயன்படுத்தவில்லை.

கடவுளுடைய கிரியைகளைக் குறித்த புரிந்துகொள்ளுதலில், சந்தேகமில்லாமல், நாம் குறைவுபட்டிருக்கிறோம். ஆனால், எல்லா உயிரையும் சிருஷ்டித்த சர்வவல்லமையுள்ள கடவுள், தம்முடைய நேசகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் உயிரை அற்புதகரமாக மரியாளின் கருப்பைக்கு மாற்றி, பின்பு மரியாள், தேவனுடைய குமாரனாகிய இயேசுவிற்கு தாயாகும்வரை, தம்முடைய கிரியை நடப்பிக்கும் சக்தி அல்லது பரிசுத்த ஆவியின் மூலமாக அதன் வளர்ச்சியை பாதுகாக்க வல்லமை பெற்றிருந்தார் என்பதை நம்புவதற்கு வேதவாக்கியங்களுடைய சரியான புரிந்துகொள்ளுதல் நமக்கு உதவுகிறது.

ஆம், மரியாள் கிறிஸ்துவாக ஆனவருக்கு தாயாயிருந்ததில் அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார். மரியாளின் சொந்த மனத்தாழ்மையைக் குறித்த பதிவையும் உட்படுத்தின பைபிளுடைய தெளிவான போதனை, “சர்வேசுரனுடைய மாதா” என்ற பட்டத்தை அவருக்குக் கொடுப்பதை தடை செய்கிறது என்பதை ஏற்றுக்கொள்வது மரியாளுக்கு எந்த விதத்திலும் அவமதிப்பை கொண்டுவருகிறதில்லை.

[அடிக்குறிப்பு]

a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டிருக்கும் நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? என்ற சிற்றேட்டை தயவுசெய்து பாருங்கள்.

[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]

Museo del Prado, Madrid

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்