ஜெசிக்காவின் பேச்சு நியமிப்பு
ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த ஜெசிக்கா என்ற 13 வயது பெண், “கடவுளும் கொடியும் நாடும்,” என்ற பொருளின் பேரில் ஒரு பேச்சை கொடுப்பதற்காக தன்னுடைய வகுப்பு மாணாக்கர்களோடு நியமிக்கப்பட்டிருந்தாள். ஒரு யெகோவாவின் சாட்சியாக அவள் ஏன் கொடி வணக்கம் செய்யவில்லை என்பதைத் தெரிந்துகொள்ள தன்னுடைய உடன் மாணாக்கர்கள் ஆவலுள்ளவர்களாக இருந்ததை புரிந்தவளாக, ஜெசிக்கா தன்னுடைய நம்பிக்கைகளை விளக்குவதற்காக இந்த சந்தர்ப்பத்தை தைரியமாகப் பயன்படுத்திக் கொண்டாள். பின்வருவது அவளுடைய பேச்சு நியமிப்பின் தொகுப்பு.
“ஒவ்வொரு பள்ளி நாளின் ஆரம்பத்திலும், பற்றுறுதிக்கான உறுதிமொழியைச் சொல்லும்படி மாணாக்கர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர், ஆனால் என்னுடைய நம்பிக்கைகள் மற்றும் என்னுடைய மதத்தின் காரணமாக, நான் அதை செய்வதில்லை. ஏன் என்று அநேக ஜனங்கள் வியப்படைகின்றனர். இப்பொழுது, நான் உங்களுக்கு சொல்கிறேன்.
“கொடி வணக்கத்தின் முதல் வார்த்தைகள் இவை: ‘நான் கொடிக்கு பற்றுறுதி காண்பிக்க உறுதிமொழி எடுக்கிறேன்.’ பற்றுறுதியென்றால் என்ன? ஆதரவின், உண்மைத்தன்மையின் மற்றும் பக்தியின் கடமையாக இது இருக்கிறது. நான் ஏற்கெனவே கடவுளுக்குப் பற்றுறுதி காண்பிக்க உறுதிமொழி எடுத்திருப்பதால், கொடிக்குப் பற்றுறுதி காண்பிக்க என்னால் உறுதிமொழி எடுக்க முடியவும் முடியாது, அதை நான் செய்யவும் மாட்டேன். எனினும், நான் கொடியை வணங்காமலும் அல்லது அதற்குப் பற்றுறுதி காண்பிக்க உறுதிமொழி எடுக்காமலும் இருப்பதுதானே, அதை நான் அவமதிக்கிறேன் என்று அர்த்தப்படுத்துவதில்லை.
“கடவுள்தான் என் வாழ்க்கையில் அதிமுக்கியமானவர். பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கிற அவருடைய கட்டளைகளைப் பின்பற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் அவரிடம் ஜெபம் செய்கிறேன், கூடுதலான உதவி மற்றும் உற்சாகம் தேவைப்படும்போதுகூட நான் ஜெபம் செய்கிறேன். சரியான நேரத்தில் அந்த உதவியையும் உற்சாகத்தையும் நான் எப்போதுமே பெற்றுக்கொள்கிறேன். கடவுளை முதலாவதாக வைக்கும்போதும், செய்யவேண்டுமென்று அவர் நமக்கு கட்டளையிட்டிருக்கும் காரியங்களை செய்யும்போதும் நான் அதிக மகிழ்ச்சியைக் கண்டிருக்கிறேன்.
“ஆகவே நான் கொடி வணக்கம் செய்யாவிட்டாலும்கூட, அதற்கு மரியாதை காண்பிக்கவும் செய்கிறேன் எந்த விதத்திலும் அவமதிப்பை காண்பிக்கவும் மாட்டேன். ஆனால் என்னுடைய பற்றுறுதி கடவுளுக்கே, சரியாகவே அவ்வாறு, ஏனெனில் அவர் என்னை சிருஷ்டித்தார் அதற்கான பற்றுறுதியை அவருக்குக் காண்பிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.”
ஜெசிக்காவின் வகுப்பிலுள்ள மாணவர்கள் தாங்கள் கேட்ட பேச்சுக்களை மதிப்பீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவளுடைய முயற்சியின் பலனாக, அவளுடைய நம்பிக்கைகளைக் குறித்து ஒரு மேம்பட்ட புரிந்துகொள்ளுதலை பெற்றுக்கொண்டதாக சக வகுப்பு மாணாக்கர்கள் சொன்னபோது ஜெசிக்கா எவ்வளவு சந்தோஷமாயிருந்தாள். அதிக முக்கியமாக, பைபிள் நியமங்களின் சார்பாக தைரியமாகப் பேசக்கூடிய இளைஞர்கள் யெகோவா தேவனின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறார்கள்!—நீதிமொழிகள் 27:11.