உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 2/22 பக். 10-11
  • அதற்கான தீர்வு என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அதற்கான தீர்வு என்ன?
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தீர்வு
  • கொல்லும் வைரஸ் ஜயரைத் தாக்குகிறது
    விழித்தெழு!—1996
  • நுண்ணுயிரிகள் பழிவாங்குதல்
    விழித்தெழு!—1996
  • எய்ட்ஸ் நோய் ஏன் அவ்வளவு கொடியது
    விழித்தெழு!—1989
  • இருபதாம் நூற்றாண்டில் கொள்ளைநோய்
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 2/22 பக். 10-11

அதற்கான தீர்வு என்ன?

“மனிதவர்க்கத்தின் நலனும், ஒருவேளை ஒரு இனமாக நம்முடைய தப்பிப்பிழைப்பும்கூட, திடீரென தோன்றும் நோய்களைக் கண்டுணருவதற்கான நம் திறமையைச் சார்ந்தே இருக்கும் என்ற நம்பிக்கை வளர்ந்து வருகிறது. . . . ஹெச்ஐவி, காற்றுமூலமாகப் பரவி நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரியாக ஆகிவிட்டால் நாம் இன்று எங்கே இருப்போம்? அதைப் போன்ற ஒரு தொற்றுநோய் எதிர்காலத்தில் அவ்வாறு பரவாது என்று சொல்வதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது?” என்பதாக—பெரிய அம்மையை அடியோடு அழிப்பதில் முக்கிய பாகம் வகித்த—டி. ஏ. ஹென்டர்ஸன், 1993-ல் ஸ்விட்ஸர்லாந்திலுள்ள ஜெனீவாவில் ஒரு தொகுதியான அறிவியலாளர்களிடம் சொன்னார்.

திடீரென்று தோன்றும் நோய்கள் எவ்வாறு கண்டுணரப்படக்கூடும்? வெப்பமண்டல பகுதிகளில் தோன்றும் கொள்ளை நோய்களைக் குறித்து முன்னதாக எச்சரிப்பு விடுக்கும் அமைப்பு, WHO அறிக்கை செய்யும் 35 ஆய்வகங்களாலான உலகளாவிய வலைப்பின்னலாக இருக்கிறது. இருந்தாலும், அவற்றில் பாதிக்கும் குறைவானவையே ஜாப்பனீஸ் என்ஸிஃபாலிட்டிஸ், ஹான்டாவைரஸ், ரிஃப்ட் வாலி காய்ச்சல்—இவை அனைத்தும் சாவுக்கேதுவான நோய்கள்—ஆகியவற்றை அடையாளம் கண்டறிவதற்கு போதிய வசதி உள்ளவையாக இருந்தன என்று இந்த ஆய்வகங்களைப் பற்றிய ஆய்வு காண்பித்தது. வாந்தி, ஈரல் செயல்படாமை, உள்ளீடான இரத்தக் கசிவு ஆகியவற்றை ஏற்படுத்தும் கொசுவால்-பரவும் மஞ்சள் காய்ச்சல் வைரஸை 56 சதவீத ஆய்வகங்களே ஆராய்ந்துணர முடியும். 1992-ல், மருத்துவர்கள் காரணத்தைக் கண்டுபிடிக்குமுன் குறைந்தது 28 பேராவது கென்யாவில் மஞ்சள் காய்ச்சலால் இறந்து போனார்கள். அவர்கள் மலேரியாவுடன் போராடுவதாக ஆறு மாதங்களுக்கு நினைத்தனர்.

கவனக் கண்காணிப்பு செய்யும் திட்டங்களின் மற்றொரு குறைபாடு என்னவென்றால், மெதுவாகச் செயல்படும் வைரஸால் ஏற்படுத்தப்படும் நோய்களின் திடீர் தோற்றத்தை அவர்களால் கண்டுணர முடியாது. உதாரணமாக, ஹெச்ஐவி ஒருவருக்குள் பத்து வருடங்கள் வரையாக ஒளிந்து இருந்துவிட்டு, மற்றவர்களிடம் பரவி, பின்னர் தன்னை எய்ட்ஸ் என்பதாக வெளிக்காட்டலாம். பெரும் பரவலான தற்போதைய தொற்று நோயாகிய எய்ட்ஸ், மூன்று கண்டங்களில் ஏறக்குறைய ஒரே சமயத்தில் தோன்றி விரைவில் 20 வித்தியாசமான நாடுகளை ஆக்கிரமித்தது. தெளிவாகவே, அதற்கு எவ்வித முன்னெச்சரிப்பும் இருக்கவில்லை!

பிரச்சினைகளின் மத்தியிலும், அநேக அறிவியலாளர்கள், வரவிருக்கும் வருடங்களில் நிச்சயமாகவே ஏற்படப்போகும் பெரிய கண்டுபிடிப்புகளையும் திடீர் முன்னேற்றங்களையும் குறித்து நம்பிக்கையார்வத்துடன் பேசிக்கொண்டு, எதிர்காலத்தை இன்னும் நம்பிக்கையுடன் நோக்குகிறார்கள். இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் அறிவிக்கிறது: “உண்மையான முன்னேற்றங்களுக்கான மிகச் சிறந்த நம்பிக்கையானது உயிர் செல்களிலுள்ள மரபியல் பொருளில் மாறுபாடுகளை ஏற்படுத்தும் உயிர்நுட்பவியலில் இருக்கிறது என்பதாக அநேக அறிவியலாளர்கள் சொல்லுகின்றனர். உயிர்நுட்ப நிறுவனங்களிலுள்ள அறிவியலாளர்கள் கிருமி-கொல்லும் பொருட்களை உண்டுபண்ணும் செல்களை, அதாவது, மரபியப் பொறியியல் நுட்பத்தாலான புதிய தலைமுறை நுண்ணுயிர் எதிர் மருந்துகளை உருவாக்கலாம் என்று நம்புகிறார்கள்.”

என்றபோதிலும், இதற்கு சாதகமற்ற அம்சங்களும் இருக்கின்றன. கேடு விளைவிக்காத வைரஸுக்குள் மரபணுக்களை உட்புகுத்தி, அந்த வைரஸ் அந்த மரபணுக்களை மக்களிடம் எடுத்துச்செல்லும்படிச் செய்வதை மரபியப் பொறியியல் சாத்தியமாக்கி இருக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் நன்மையளிக்கும்விதத்தில் பயன்படுத்தப்படலாம்; மரபியப் பொறியியலைப் பயன்படுத்தி நுண்ணுயிர் எதிர் மருந்துகள் எனப்படுகிறவற்றை உண்டாக்குவதை ஒருவேளை உண்மையில் சாத்தியமானதாக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பம் கெட்ட இயல்புடைய நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படக்கூடும்.

உதாரணமாக, இபோலாவிலிருந்து மரபணுக்களை எடுத்து இன்ஃபுளூயன்ஸா அல்லது மணல்வாரி அம்மை போன்ற ஒரு வைரஸுக்குள் தற்செயலாகவோ வேண்டுமென்றே திட்டமிட்டோ ஒருவேளை உட்செலுத்தலாம். பின்னர் அந்த சாவுக்கேதுவான வைரஸ் ஒரு இருமல் அல்லது ஒரு தும்மல் மூலமாக பரவக்கூடும். “ஒருசில ஆயிரம் டாலர் மதிப்புள்ள கருவிகளையும் உயிரியலில் கல்லூரி படிப்பையும் கொண்டிருக்கும் யாராவது ஒரு கிறுக்கன், ஒப்பிடுகையில் இபோலாவையே கெடுதலற்றதாகத் தோன்றச்செய்யும் அளவுக்கு நோய்-உண்டாக்கும் கிருமிகளை உற்பத்தி செய்யக்கூடிய” காலம் விரைவில் வரக்கூடும் என்பதாக மாச்சூபோ மற்றும் இபோலா போன்ற வைரஸ்களை ஆராய்வதிலேயே தன் வாழ்நாளை செலவிட்டிருக்கும் டாக்டர் கார்ல் ஜான்ஸன் கூறினார். மற்ற உயிரியலாளர்களும் அவருடைய வருத்தத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

தீர்வு

தொற்று நோய் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, புதிய மருந்துகளை உருவாக்குவதைப் பொறுத்த விஷயமாக மட்டுமே இல்லை. நோயுடன் தொடர்புடைய பிரச்சினைகளாகிய வறுமை, போர், அகதிகள், போதை மருந்து துர்ப்பிரயோகம், நகரங்களில் அதிக ஜனநெருக்கடி, ஆரோக்கியமற்ற வாழ்க்கை பாணிகள், மாசு, சுற்றுச்சூழல் சேதம் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதை அது உட்படுத்துகிறது. உங்களிடம் நேர்மையாக இருந்து சிந்தியுங்கள். இந்த சிக்கலான பிரச்சினைகளை மனிதர் தீர்ப்பது சாத்தியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

கடவுளுடைய வார்த்தை எச்சரிக்கிறது: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.” அப்படியானால், நாம் யாரை நம்ப வேண்டும்? அந்த வசனம் தொடர்கிறது: “யாக்கோபின் தேவனைத் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். அவர் வானத்தையும் பூமியையும் . . . உண்டாக்கினவர்.” மனிதவர்க்கத்தின் படைப்பாளராகிய யெகோவா மட்டுமே மனிதவர்க்கம் எதிர்ப்படுகிற குழப்பமான நிலைமைகளைத் தீர்த்து வைக்கலாம்.—சங்கீதம் 146:3-6.

யெகோவாவால் ஏவப்பட்ட வார்த்தையாகிய பைபிள், ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவிற்கான அடையாளத்தை’ பற்றிய இயேசுவின் முக்கிய தீர்க்கதரிசனத்தை பதிவுசெய்கையில், நம் தலைமுறையை தாக்கும் மருத்துவ இன்னல்களை முன்னறிவித்தது. இயேசு சொன்னார்: “பல இடங்களில் . . . கொள்ளைநோய்களும் உண்டாகும்.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.)—மத்தேயு 24:3-8, NW; லூக்கா 21:10, 11.

என்றபோதிலும், பூமியில் கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ், ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லாத’ ஒரு எதிர்காலத்தையும் பைபிள் சுட்டிக் காண்பிக்கிறது. (ஏசாயா 33:24; மத்தேயு 6:9, 10) இவ்வாறாக, மனிதரைத் தொந்தரவுபடுத்தும் சாவுக்கேதுவான நோய்களிலிருந்து மட்டுமல்லாமல் நோய்க்குக் காரணமாக இருக்கும் பிரச்சினைகளிலிருந்தும் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் சீக்கிரத்தில் ஒரு நிரந்தர விடுவிப்பைப் பெறும் என்று யெகோவாவில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் நம்புவதற்கு பலமான காரணம் இருக்கிறது. சாவுக்கேதுவான நுண்ணுயிரிகளுக்கு எதிரான கடுமையான போராட்டத்தில் மருத்துவ சமுதாயத்தின் முயற்சிகளை உண்மை கிறிஸ்தவர்கள் போற்றுகிறார்கள். இருந்தாலும், நோய்க்கும் மரணத்துக்குமான நிலையான தீர்வு, ‘நோய்களை எல்லாம் குணமாக்கும்’ கடவுளையே சார்ந்திருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும்.—சங்கீதம் 103:1-3; வெளிப்படுத்துதல் 21:1-5; 22:1, 2.

[பக்கம் 10-ன் படம்]

“வியாதிப்பட்டிருக்கிறேன்” என்று எவரும் சொல்லாத ஒரு காலத்தை பைபிள் வாக்களிக்கிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்